Wednesday, December 15, 2010

பண போதையில் வயதை தொலைக்கும் இளைய சமுதாயம்...



சாதனை செய்யும் ஆசையில், இளைய சமுதாயம், மனரீதியிலும், உடல்ரீதியிலும் பாதிக்கப்படுவதாக, மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நம் நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால், வேலைவாய்ப்பும் பெருகி விட்டது. ஒரு டிகிரிப் படிப்பு முடித்தாலே, கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது !. சாதிக்க துடிக்கும் ஆவலுடன், இளைஞர்கள், கால நேரம் பாராது உழைக்கின்றனர். இதனால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். முதுமைக்குரிய உடல் பாதிப்புகள், அவர்களுக்கு நடுத்தர வயதிலேயே ஏற்படுகிறது.
பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் அதிகாரியாக வேலைபார்க்கும் ஒருவர் கூறியதாவது:
நான் கடந்த ஏழு ஆண்டுகளாக, இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் திறமையால் பல பணி உயர்வுகளையும், எதிர்பார்ப்புகளுக்கு மிஞ்சிய சம்பளத்தையும் பெற்றேன்.பணி நிமித்தமாக, பல்வேறு நாடுகளுக்கும் சென்று வருகிறேன். எனக்கு தற்போது 32 வயதாகிறது. ஆனால் நான், அந்திம காலத்தை நெருங்கிவிட்டது போல உணர்கிறேன். பணிச்சுமையால் மன ரீதியிலும்,உடல் ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். வாழ்க்கையில் மாற்றத்தை விரும்புகிறேன். எனவே வேலையை விட்டுவிட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
இதே போன்று, பெரும்பாலான இளைஞர்கள், பணிச்சுமையால் மன அழுத்த நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து மனோதத்துவ நிபுணர் கூறியதாவது:
கைநிறைய காசு சம்பாதிக்கும் ஆசையில், இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு சேர்கின்றனர். தொடர்ந்து திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், வேலைப்பளு, நிச்சயமற்ற பணிச் சூழல் ஆகியவற்றால், குறுகிய காலத்தில் அவர்கள் மன அழுத்த நோய்க்கு ஆட்படுகின்றனர்.தற்போதைய வாழ்க்கை சூழலில் இளைஞர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. வசதியான வாழ்க்கை அமைய, 32 வயதுக்குள், அள வுக்கு அதிகமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தைவிட, அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் அவர்கள், மன அழுத்த நோய்க்கு ஆட்படுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.தற்போதைய வாழ்க்கை முறையில், எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது. அதை அடைவதற்கு இளைய சமுதாயத்தினர், அதிக "ரிஸ்க்'குகளை எடுக்கின்றனர். இதனால் அவர்கள் இளம் வயதிலேயே முதுமையை உணர்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
"மன அழுத்த நோயை தவிர்க்க, தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அலுவலகத்திற்கும் இடையில் சமநிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்; வாழ்க்கையில் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரும் பழக்கத்தை விட்டொழித்து சுமூகமாக அணுக பழகி கொண்டால், மன அழுத்த நோய் நம்மை அண்டாது' என, நிபுணர்கள் தீர்வு கூறுகின்றனன..

Monday, December 13, 2010

ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்



12.12.10

ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணையதளத்தை (Vig-eye) மத்திய கண்காணிப்பு ஆணையகம் தொடங்கி உள்ளது. இதில் ஊழல், லஞ்சம் தொடர்பான ‌வீடியோ, ஆடியோ பதிவுகளுடன் புகார் செய்யும் வசதி உள்ளது.


மேலும் மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய இந்த இணையதளம் வகை செய்கிறது.



ஊழல், லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய முடியும். இந்த இணையத்தில் பதிவு செய்யப்படும் புகார் தனியாக அடையாளமிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.


கண்காணிப்பு ஆணையம் தொடர்பான விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த இணையதளத்தை மத்திய கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் நே‌ற்று தொடங்கி வைத்துப் பேசினார்.


கண்காணிப்பு அமைப்பை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் தடுப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கண்காணிப்பு ஆணையம் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசாரம் மூலம் ஊழலை மக்கள் சகித்துக் கொள்ளாமல் அது குறித்து புகார் செய்ய முன்வருவது அதிகரிக்கும்'' என்றார் தாம‌ஸ்.


மத்திய கண்காணிப்பு ஆணைய இணையதளமான www.cvc.nic.in ல் 'விக்-ஐ' குறித்த தகவல்களைப் பெற முடியும்.
You might also like:

எம்பிபிஎஸ்-நுழைவுத் தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு: தமிழக மாணவர்களுக்கு பாதி்ப்பு!

டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் இன்று பிறப்பித்த உத்தரவில், பொது நுழைவுத் தேர்வுக்கான விதிமுறைகள், முறைப்பாடுகளை வகுக்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த உத்தரவின் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இனிமேல் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை. அந்த முறையை தமிழக அரசு ரத்து செய்து விட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவால் தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் வந்துள்ளன. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்பையும், பாதகத்தையும் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவுக்கு ஏற்கனவே இந்திய மருத்துவக் கவுன்சில் வந்து விட்டது. ஆனால் தமிழக அரசு உள்பட பல்வேறு மாநிலங்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டு மனு செய்தது இந்திய மருத்துவக் கவுன்சில்தான். அந்த வழக்கை விசாரித்துதான் தற்போது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

மத்திய செகண்டரி கல்வி வாரியத்துடன் இணைந்து 2011ம் ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்துவது குறித்த ஆலோசனைகளை ஏற்கனவே மருத்துவக் கவுன்சில் தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடு முழுவதும் 32,000 எம்.பி.பி.எஸ். மாணவர் இடங்களும், 13,000 முதுநிலை மருத்துவ இடங்களும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இதில் இளநிலைப் படிப்புகளுக்கு இனிமேல் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

Sunday, December 12, 2010


தமிழக காவல்துறையும் & ஹிந்துதுவாவும்

11.12.10

தீவிரவாதிகள் திடீரென தாக்கினால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பதுக் குறித்த பாதுகாப்பு ஒத்திகை கடந்த 08-12-2010 அன்று திண்டுக்கல்லில் போலீசாரால் நடத்தப்பட்டது.தீவிரவாதிகளாக வேடமிட்டு ஒத்திகையில் கலந்துக் கொண்டவர்களின் முகத்தில் தாடி ஒட்டப்பட்டு முஸ்லிம்கள் போல் காணப்பட்டன.


இச்செய்தி பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியானது. ஒவ்வொரு மதத்தினருக்கும் வெவ்வேறான மத அடையாளங்கள் உள்ளன. முஸ்லிம் ஆண்கள் மார்க்க கடமையாக கருதி தாடியை வளர்க்கின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் என்றாலே அவர்களை முஸ்லிம்கள் தான் என்று தீர்மானிப்பது கடைந்தெடுத்த கயவாளித்தனமின்றி வேறென்ன? பகுத்து அறியும் ஆற்றலைப் பெற்ற கலைஞரின் ஆட்சியில் அவரது கட்டுப்பாட்டிலிலுள்ள போலீஸ் துறைதான் இந்த கோமாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளது.
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் ஏன் தமிழகத்தின் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் தங்களது தலைமையகத்திற்கு தாங்களே குண்டை வைத்து விட்டு முஸ்லிம்களின் பழியைப்போட தீட்டவும் செய்தனர்.


கிறிஸ்தவ ஆலயங்களை இடித்தும், முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்ற கொடூர பாவிகள். குஜராத் கலவரத்தில் முஸ்லிம் பெண்களை கூட்டமாக சுற்றி நின்று கற்பழித்து அதை விடியோ எடுத்து ரசித்தவர்கள். குஜராத் பேஸ்ட் பேக்கரியில் அதன் உரிமையாளர் மற்றும் வேலை செய்தவர்கள் எல்லாரையும் அப்படியே தீயிட்டு கொளுத்தியவர்கள். குஜராத்தின் காங்கிரஸ் முன்னாள் MP யையும் அவர் வீட்டில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் எல்லோரையும் வெட்டி கொன்று தீயிட்டு கொளுத்தினர்.


ஆஸ்திரேலிய கிறஸ்தவ பாதரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் காரோடு வைத்து தீவைத்து கொளுத்திய கொடும் பாவிகள். குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்றார்கள். இவர்கள் போல் உள்ள ஒரு கொடியவர்களை வரலாறுகளில் பார்க்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கமுடயுமா? இவர்கள் மனிதர்களா? இல்லை மிருகங்களா? இவர்கள் மனம்தான் என்ன இரும்பினால் செய்யபட்டதா? இப்படி பட்ட ரெத்த வெறி பிடித்த கயவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மிருகங்கள். இந்நிலையில் தீவிரவாதிகளாக ஏன்? இவர்கள் போல் வேடம் இட்டு ஒத்திகை பார்க்கவேண்டியது தானே.


இதில் இருந்து தமிழக காவல் துறையில் ஹிந்துதுவாவின் தாக்கத்தை உணரமுடிகிறது.தொடர்ந்து தமிழக காவல் துறை முஸ்லிம் விரோத போக்கோடு செயல்பட்டு வருகிறது. கோவையில் செல்வராஜ் என்ற ட்ராபிக் கான்ஸ்டபில் கொல்லப்பட்டபோது சம்மந்த பட்டவர்கள் மீது வழக்கு தொடராமல். 19 முஸ்லிம்களை சுட்டு கொன்ற கயவர்கள் ஆச்சே இவர்கள்.. ஜனநாயக முறையில் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களை தீவிரவாதமாக சித்தரிப்பது, அவர்கள் மீது திட்ட மிட்டு பொய் வழக்குகள் போடுவது, இப்படி தமிழக காவல்துறை ஹிந்துதுவாவின் மறு உருவமாக செயல்பட்டு வருகிறது.


இம்மாதிரியான நடவடிக்கைகளை கலைஞரின் போலீஸ் துறை மேற்கொள்வது அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சமூக நல்லிணத்தை சீரழிக்கவே உதவும். தமிழக காவல்துறையின் இத்தகைய செயலுக்கு அனைத்து மக்களும் தங்களது கண்டனத்தை பதிவுச்செய்ய வேண்டும்.

படம்:தினமணி

Wednesday, December 8, 2010

பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா தனது பிடதி ஆசிரமத்தில் எப்போதும் ஆணுறைகள், மது வகைகளை வைத்திருப்பார். ஆணுறைகளை அவர் வைத்திருந்ததை நானே எனது கண்ணால் பார்த்துள்ளேன் என்று நித்தியானந்தா வழக்கில் ஒரு சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நித்தியானந்தா வழக்கில் ராம்நகர் கோர்ட்டில் கர்நாடக சிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையுடன் இந்த வாக்குமூலத்தையும் இணைத்துள்ளனர்.

பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பெண் சாட்சிதான் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவரிடம், மோட்சம் அடைவீர்கள் என்று சொல்லி சாமியார் நித்தியானந்தா உடல் ரீதியான உறவுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அந்தப் பெண் கூறுகையில், நான் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அப்போது என்னிடம் ஒரு மதுக் கடையிலிருந்து மது வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார் நித்தியானந்தா.

இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தேன். இருப்பினும் நித்தியானந்தாவின் போதனைகளால் எனது மனம் அந்த அதிர்ச்சியை புறக்கணித்தது. எந்த ஒரு குடும்பப் பெண்ணும் மதுக் கடைக்குச் சென்று மது வாங்க மாட்டார். ஆனால் நித்தியானந்தாவின் போதனையால் பிரெய்ன் வாஷ் செய்யப்பட்டிருந்த நான் ஆசிரமத்திற்கு அருகில் இருந்த மதுக் கடைக்குச் சென்று மது வாங்கி வந்தேன்.

பின்னர் அதை தனது அறைக்குக் கொண்டு வருமாறு கூறினார் நித்தியானந்தா. அங்கு கொண்டு போய்க் கொடுத்ததும் அதை வாங்கி அருந்தினார். என்னால் அந்த மதுவின் நெடியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் நான் வாந்தி எடுத்து விட்டேன். பின்னர் நான் மயங்கி விட்டேன்.

சில மணிநேரம் கழித்து நித்தியானந்தா எழுப்பிய பிறகே நான் கண் விழித்தேன். நான் மயக்கமாக இருந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. நான் படுக்கையில் படுத்திருந்தேன். என்னை அவர் என்ன செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் எனது உடைகள் கலைந்திருந்தன.

பிறகு என்னை டிரஸ் செய்து கொள்ளச் சொல்லி அங்கிருந்து போகுமாறு பணித்தார் நித்தியானந்தா. நான் ஆசிரமத்தில் சேர்ந்தபோது நித்தியானந்தா போட்ட விதிமுறைகளில் ஒன்றாக எனக்குக் கூறப்பட்டவை ஆசிரமத்திற்குள் மது அருந்தக் கூடாது என்பது. ஆனால் என்னையே மது வாங்கச் சொல்லி அனுப்பி வைத்தவர் நித்தியானந்தா.

அதேசமயம், நான் அவருக்கு மது வாங்கி வந்ததையும், அவர் அருந்தியதையும் யாரிடமும் கூறக் கூடாது என்று என்னை எச்சரித்தார் நித்தியானந்தா என்று அந்த பெண் கூறியுள்ளார்.

மது மட்டுமல்லாமல் ஆணுறைகளும் நித்தியானந்தா அறையில் இருந்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார். இவை இரண்டும் நித்தியானந்தா அறையில் எப்போதும் இருக்கும் என்றும் அப்பெண் கூறியுள்ளதாக அந்த வாக்குமூலம் தெரிவிக்கிறதுhttp://thatstamil.oneindia.in/news/2010/12/08/nithayanantha-bidadi-ashram-condoms-liquor.html

Tuesday, December 7, 2010


இராமன் நாயகனல்ல; தேசிய வில்லன்.....

இராமன் தேசிய நாயகனா தேசிய வில்லனா

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி : சிறுபான்மையினருக்கு ஏதிரான ஆர்.எஸ்.எஸ்.இன் பொய்யும் புரட்டும் – 1

‘‘கல் – மண்ணால் கட்டப்படும் ஒரு கோவிலுக்காக இந்து போராடவில்லை. அவனுடைய நாகரிகத்தினை, இந்துத் தன்மையினை, தேசிய உணர்வினைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் போராடுகின்றான். ஆனால் முசுலீம்கள் வந்தேறியும் – ஆக்கிரமிப்பாளனும் – கோவிலை இடித்தவனுமான பாபரைப் போற்றுகிறார்கள்; பாரதத்தின் அவதார – தேசிய புருஷனான ஸ்ரீராமரை ஏற்க மறுக்கிறார்கள்.”
- பா.ஜ.க. அரசில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, விஜயபாரதம் எனும் ஆர்.எஸ்.எஸ் இதழில்.
தங்கள் தொழிலை வளர்ப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தும் மூலதனம் இராமன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மனதை மயக்கும் தேர்ந்த விளம்பர உத்தியைப் போன்று இராமனை முன்வைத்து வரலாறு, பொற்காலம், தேசியம், பெருமிதம், சுதேசி, விதேசி, வந்தேறி என இவர்கள் உருவாக்கிய மோசடிகள் பல. இந்த மோசடிகளே அவர்கள் உருவாக்க விரும்பும் ‘இந்து உணர்வுக்கு’ அச்சாரம். பாபரும், பாப்ரி மசூதியும், முசுலீம்களும் ஆக்கிரமிப்பாளர்கள் – தேசத்துரோகிகள் என்று சதி வலை விரித்து அதன் மேலே இராமன், அயோத்தி, இந்து உணர்வு, தேசிய நாயகன் – நாட்டுப்பற்று என்றொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.
இந்து மதவெறியர்களைப் பொறுத்தவரை இந்தியக் குடியுரிமை பெற்று வாழும் ஒருவர் இராமனை ஏற்பதும், வழிபடுவதும் ஒரு நிபந்தனை. மறுப்பவர்கள் தேசத் துரோகிகள். பெரும்பான்மை மக்களிடம் அவர்களே அறியாமல் ‘இந்து உணர்வும் – முசுலீம் வெறுப்பும்’ விஷம் போல ஊடுருவுவதற்கு ‘இராமனின்’ மோசடிச் சித்தரிப்பு ஒரு முக்கியமான காரணம் ஏன்பதை நாம் உணர வேண்டும். அப்படி உணரும்போது இந்த மோசடி அவதாரத்தை வெட்டி வீழ்த்தி வேரறுக்கும் கடமையையும் நாம் ஏற்க வேண்டும்.
70 எம்.எம். திரையில் தேசிய நாயகனாகக் காட்டப்படும் இராமனையும் இந்துப் பொற்காலத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் பண்டைய – இடைக்கால – நவீனகால இந்தியாவின் வரலாற்றை – மார்க்சிய அறிவியல் கண்ணோட்டத்துடன் தெரிந்து கொள்வது அவசியம். ஆரியர்களின் படையெடுப்பு – நிறவெறி – வர்ண – சாதிவெறி, புராணங்கள் – காப்பியங்கள் – வேத உபநிடதங்கள் சொல்லும் இந்து மதம், தொல்குடி மக்களையும், பண்பாட்டையும் பார்ப்பனியம் கவ்விய வரலாறு, பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த மதங்கள் – மகான்கள், சமஸ்கிருதமயமாக்கம், மொகலாயர் வருகை, இந்து – முசுலீம் மன்னர்களிடையிலான உறவு, போர், இராச்சியங்களின் தோற்றத்திற்கும் மறைவுக்குமான வரலாற்றுக் காரணங்கள், வெள்ளையர் ஆக்கிரமிப்பு – 1947 பிரிவினை…. என சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்று வரை உள்ள வரலாற்றைக் கற்றுணர வேண்டும்.
இங்கே ‘அவதார’ இராமன் ஒரு தேசிய நாயகனுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்கிறானா, ‘ஆக்கிரமிப்பாளன்’ பாபர் ஒரு கொடுங்கோலனாக ஆட்சி நடத்தினாரா என்பதை மட்டும் பரிசீலிப்போம்.
வந்தேறியவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வாதிட்டால் இந்தியாவின் முதல் வந்தேறிகள் ஆரியர்கள்தான். திராவிடர்களையும், நாகர்களையும், இதர பூர்வகுடி மக்களையும் வந்தேறிகளான ஆரியர்கள் வேட்டையாடியதை விவரிக்கும் தொல்கதையே இராமாயணத்தின் மூலக் கதையாகும். ஆரிய ஆக்கிரமிப்பின் பெருமிதத்தை விவரிக்கும் ஆந்த மூலத் தொல்கதை இன்று இல்லை. பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்து ‘புராண – இதிகாச’ காலத்தில் அந்தத் தொல்கதை ஒரு காப்பியத்துக்குரிய அம்சங்களுடன் வால்மீகி இராமாயணமாக உருப்பெற்றது. அதுவும் வரலாறு நெடுக இடைச்செருகல்களோடும் திருத்தங்களோடும் மாறிக் கொண்டே வந்தது. கடைசியாக தூர்தர்சனில் காட்டப்பட்ட இராமானந்தசாகரின் இராமாயணத்திற்கும், வால்மீகியின் கதைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.
அமெரிக்கா ஆதிக்கம் செய்யும் இன்றைய உலகில் ஹாலிவுட் படங்கள் கூட தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு உசிலம்பட்டி போன்ற சிறு நகரங்களில் வெளியிடப்படுகின்றன. அதைப் போல ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்த இந்தியத் துணைக் கண்டத்தில் இராமாயணமும் எல்லா வட்டார மொழிகளிலும் இயற்றப்பட்டது. இப்படி ஆரியர்களின் இதிகாசங்களும், புராணங்களும் வேத – உபநிடதக் கருத்துக்களும் இந்திய மொழிகளிலும் ஆடல் – பாடல் கலைகளிலும் ஊடுருவியதன் காரணம் ஏன்ன? கல்வியும், அறிவும் மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியத்தின் வருண – சாதி ‘ஒழுக்கத்தை’க் கற்றுத் தருவதற்கும், வாழ்வதற்கும், கண்காணிப்பதற்கும், மீறினால் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிப்பதற்கும் அவை பயன்பட்டன.
இப்படித் தெற்காசியாவின் பல மொழிகளில் விதவிதமாக இயற்றப்பட்ட ஏல்லா இராமாயணங்களையும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தாலும் இராமனின் ஆரியப் பண்பு மட்டும் பெரிதாக மாறவில்லை.
தனது இராசகுரு வசிட்டரின் உத்தரவுக்கேற்ப சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்றான் இராமன். காரணம், பார்ப்பனப் புரோகிதர்களின் உதவியின்றி நேரடியாக இறைவனை அறிய சூத்திரன் சம்பூகன் தவம் செய்தான் என்பதே. தமது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த விசுவாமித்திரரை எதிர்த்து பழங்குடியினர் போராடுகின்றனர்.
இராமனோ அசுரப் பழங்குடியினரைக் கொன்று விசுவாமித்திரரைக் காப்பாற்றுகிறான்; போர்க்கலையில் வல்லவனான வாலியை மறைந்து நின்று கொல்கிறான்; மனைவி சீதையின் மேல் சந்தேகம் கொண்டு அவளை உயிரோடு கொளுத்திக் கொல்கிறான். இப்படி இந்திய மருமகள்கள் ஸ்டவ் வெடித்துச் சாகடிக்கப்படும் கொடூரத்தைத் தொடங்கியவன் இராமன்தான். மொத்தத்தில் இந்தியத் தொல்குடி மக்களையும், இராவணன் போன்ற அவர்களது தலைவர்களையும் வேட்டையாடிய ஆரிய இக்கிரமிப்பின் சின்னம்தான் இராமன்.
இன்றைக்கும் தென்னிந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியா, வடகிழக்கு இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களிடம் இராம வழிபாடு கிடையாது. எனவே நிறவெறி, வருண வெறி, சாதிவெறி, இனவெறி, ஆணாதிக்க வெறி என பார்ப்பனியத்தின் பண்புகளைக் கொண்டு உருவெடுத்த இராமனை இந்நாட்டு மக்கள் ஏவரும் தேசிய நாயகனாக ஏற்க முடியாது. மாறாக தேசிய வில்லனாகக் கருதி வெறுக்கத்தான் முடியும்.
ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார். இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது. பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு. பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள். ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது. பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.
அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; இராமன் மற்றும் அவனுடைய வாரிசுகளின் யோக்கியதை என்ன என்பது தெரியவரும். பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல; மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.
மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை. ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை. இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!
என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. பாபருக்குப் பின்வந்த அக்பர் மதங்களை ஒன்றுபடுத்த முயற்சி செய்தார்.
தன் கால மதங்களில் தனக்குத் தெரிந்த நல்ல அம்சங்களை இணைத்து அவர் உருவாக்கிய ‘தீன் இலாஹி’ ஏனும் புதிய மதம் தோல்வியுற்றாலும் அக்காலத்தில் அது ஒரு முற்போக்கான முயற்சியாகும். பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பு இருப்பினும், சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை அக்பர் தடை செய்தார்.
இதை அவரது வரலாறு கூறும் ‘அயினி அக்பர்’ நூல் தெரிவிக்கின்றது. பொதுவாகப் பரிசீலிக்கும் போது எல்லா மன்னர்களையும் போல முகலாய மன்னர்களும் சுகபோகிகளாக, சுரண்டல் பேர்வழிகளாக இருந்திருக்கிறார்கள். ஆயினும் ஆட்சியிலும், சமூக நோக்கிலும் இராமனைக் காட்டிலும் முன்னுதாரணமானவர்களாகவே அவர்கள் இருந்தனர்.
மனிதகுல வரலாற்றில் ‘தேசிய நாயகர்கள்’ ஏன்று போற்றப்படும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். தத்தமது கால மாற்றத்தையும் மக்கள் போராட்டங்களையும் புரிந்து கொண்டு பங்கெடுத்தும் முன்னெடுத்தும் சென்றிருக்கிறார்கள். வரலாற்றில் இத்தகைய தனித்தலைவர்களின் பங்கு முதன்மையானது இல்லையென்றாலும், முக்கியமானதுதான்.
தமது அடிமைத்தனத்தையே உணராத ரோமாபுரி அடிமைகளை அணி திரட்டிப் போராடச் செய்த ஸ்பார்ட்டகஸ், அடிமைகளின் ஏக்கத்தைப் போக்கப் பாடுபட்ட ஏசு கிறிஸ்து, அரேபிய நாடோடி இன மக்களை நெறிப்படுத்திய முகமது நபி, பார்ப்பனியத்தின் கொடூரச் சடங்குகளை ஒழிக்கவும், ஒரு சகோதரத்துவச் சமூகத்தைத் தோற்றுவிக்கவும் கனவு கண்ட புத்தர், இத்தாலியை ஒன்றுபடுத்துவதற்காகப் போராடிய கரிபால்டி, இங்கிலாந்து தொழிலாளர் இயக்கத்தின் தந்தையெனப் போற்றப்படும் இராபர்ட் ஓவன், முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை வழங்கிய பிரெஞ்சுப் புரட்சித் தலைவர்கள், அமெரிக்க விடுதலைக்குக்குத் தலைமை தாங்கிய ஜார்ஜ் வாஷிங்டன், நிறவெறியை ஏதிர்த்து அமெரிக்க உள்நாட்டுப் போர் கண்ட ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சாகும் வரை எதிர்த்துப் போராடிய சே குவேரா, மதவாதிகளின் பிடியிலிருந்து துருக்கியை விடுவித்த கமால்பாஷா, வெள்ளை நிறவெறியை எதிர்த்து தன் இளமையைச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா, காலனிய எதிர்ப்பில் இந்திய இளைஞர்களிடம் புது இரத்தம் பாய்ச்சிய பகத்சிங், கீழத்தஞ்சையின் கூலி விவசாயிகளைப் போராட அணிதிரட்டிய சீனிவாசராவ் மற்றும் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களையெல்லாம் அந்தந்த நாட்டு, மத, இன மக்கள் கொண்டாடுகிறார்கள்.
மனிதகுலம் எதிர்காலத்தில் பொதுவுடைமைச் சமூகமாக மாறுவதற்கு வழிகண்ட மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரை அன்போடு மார்க்சியப் பேராசான்கள் என்று கம்யூனிஸ்டுகள் கொண்டாடுகின்றனர். இப்படி வரலாறு நெடுகிலும் இன, தேசிய, மத, ஜனநாயக, புரட்சிகரத் தலைவர்களை மனிதகுலம் உருவாக்கியிருக்கிறது.
இனால் இந்துமத வெறியர்கள் கட்டளையிட்டு தேசிய நாயகனாய்ப் போற்றச் சொல்லும் இராமனிடம் என்ன இருக்கிறது? முதலில் இராமாயணம் ஒரு வரலாற்று உண்மையல்ல. ஒரு வேளை இராமனின் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அவன் செய்த ஆபூர்வச் செயல்கள் என்ன? தந்தையின் வாக்கைக் காப்பாற்ற, சித்தியின் பேச்சைக் கேட்டு காட்டுக்குப் போனான்; திரும்பி வரும் வரை தம்பியை ஆளச் செய்தான்; தொலைந்து போன மனைவியை மீட்க மாபெரும் போரை நடத்தினான்; மீண்டும் அயோத்தியை ஆண்டான்.
இருப்பினும் பல்வேறு இராமாயணங்கள், இராம பக்தர்கள், உபன்யாசகர்கள், ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆகிய அனைவருமே புகழ்ந்துரைக்கும் இராமனின் மாபெரும் பெருமை என்னவென்றால், அவன் ஏகபத்தினி விரதன் என்பதுதான். போகட்டும், அதையும் உண்மையென்றே ஏற்போம். ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?
ஆகையினால் இராமனைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்படும் தேசிய – அவதாரக் கதைகளை எதிர்த்து முறியடிப்பது என்பது பார்ப்பன இந்து மதத்தின் சமூக அமைப்பை எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராட்டமே அன்றி வெறும் நாத்திகப் பிரச்சாரமல்ல. இராமன் நாயகனல்ல; தேசிய வில்லன்

புகையிலைப் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்க நீதிமன்றம் தடை


புதுதில்லி, டிச.7- குட்கா, பான் பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இத்தடை மார்ச் 2011 முதல் அமலுக்கு வருகிறது.

ஜி.எஸ் சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த தடை உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்குப் பதிலாக புகையிலைப் பொருட்களை மாற்று வழியில் அடைத்து விற்பது குறித்து மார்ச் 2011-க்குள் முடிவு செய்யும்படி புகையிலைப் பொருள் தயாரிப்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சர்வே நடத்தும்படி மத்திய அரசுக்கு கூறியுள்ள உச்சநீதிமன்றம், அவற்றை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைப்பதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் குறித்தும் ஆராயும்படி உத்தரவிட்டுள்ளது.

Monday, December 6, 2010

பாபர் மஸ்ஜித் பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகளை தண்டிக்க கோரி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்





பாபர் மஸ்ஜித் நீதியை வேண்டுகிறது என்ற முழக்கத்தோடு தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரத்தை டிசம்பர் 6, 2010 முதல் ஜனவரி 30 வரை நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீர்மானித்துள்ளது.
இந்த தொடர் முழக்க விழிப்புணர்வு பிரசார தொடக்க நாள் மற்றும் முடியும் நாள் சுதந்திர இந்தியா வரலாற்றில் மறக்க முடியாத நாட்களாகும்.இப்பிரச்சாரத்தின் முடிவு நாளான ஜனவரி 30, 1948யில் பாசிச ஹிந்துத்வா சக்திகளால் மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார். இப்பிரச்சாரத்தின் துவக்க நாளான டிசம்பர் 6 , 1992யில் அன்று அதே பாசிச ஹிந்துத்வா சக்திகளால் நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்பின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலான தொன்மைமிக்க பாபர் மஸ்ஜித் பள்ளிவாசலை இடித்து தகர்க்கப்பட்டது. இத்தகைய செயல்களுக்கு நாடே சான்று பகர்கிறது. இந்த பிரசாரத்தில் "பயங்கரவாதத்தை முறியடிப்போம் மனித உரிமை காப்போம்" என்ற கருத்தை வலியுறுத்தி டிசம்பர் 10ஐ தீவிரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படும். மஸ்ஜித் வழக்கில் அநீதியான தீர்ப்பை அலஹபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய நிலையிலும் நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்க்கு பங்கு இருப்பதை புலனாய்வுத்துறை அமபலப்படுத்திய நிலையில் இந்த தொடர் முழக்க பிரசாரம் சரியான தருணத்தில் அமைகிறது. இந்த பிரசாரத்தில் மாவட்ட அளவில் பொது நிகழ்சிகள், போஸ்டர் பிரசாரம், பாபர் மஸ்ஜித் ஆவண படக்காட்சிகள் , ஆர்பாட்டம், பேரணி, தர்ணா போன்ற பொது நிகழ்சிகள் இந்த பிரசாரத்தின்போது நடத்தப்படும். பாப்புலர் பிரண்ட்டோடு இணைந்து சமூகத்தின் பல்வேறு மட்டத்தில் களப் பணியாற்றிக்கொண்டிருக்கும் இயக்கங்கள் இந்த தொடர் முழக்க பாபர் மஸ்ஜித் மீட்பு பிரசாரத்தில் இணைந்து செயல்படும் .
பள்ளிவாசல் இடிக்கப்பட்டு அயோத்தியாவில் கலவரம் ஏற்பட்ட பின்பு லிபெர்ஹன் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் மூன்று மாதத்திற்குள் தனது அறிக்கையை சமர்பிக்கும் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பதினேழு வருடங்கள் கழித்தே தனது அறிக்கையை தாக்கல் செய்தது. சமர்பிக்கப்பட்ட பிறகும் இன்று வரை மத்திய அரசாங்கம் எந்தவொறு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பதினேழு வருடங்கள் கடந்த நிலையில் முஸ்லிம்கள் பள்ளிவாசல் இடிப்பு தொடர்பாக வழக்கில் நீதிக்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகளோ, நாட்டில் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் டிசம்பர் 6 , 2010 அன்று டெல்லியில் ஜந்தர் மந்தர் வளாகத்தில் காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணிவரை தர்ணா போராட்டத்தை நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீர்மானித்துள்ளது. மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமுதாய தலைவர்கள் உட்பட பலரை நாம் தர்ணாவில் பேச அழைத்துள்ளோம். இந்தியாவில் முழுமையாக சுதந்திரம், நீதி, பாதுகாப்பு ஆகியவற்றை நிறைவு படுத்தும் வகையில் பாபரி பள்ளிவாசலை அதே இடத்தில் மீண்டும் மறு நிர்மாணம் செய்யும் உரிமையை நிலை நிறுத்துவதற்க்காக போராட அனைத்து இந்தியா குடிமக்களும் முன் வரவேண்டும் என பாப்புலர் பிரண்ட் அழைப்பு விடுக்கிறது . என தேசிய பொது செயலாளர் கே.எம் ஷரீப் தெரிவித்துள்ளார்.

Sunday, December 5, 2010

அதிரையில் போபுலர் பிரான்ட் ஒப் இந்திய நடத்தும் 'நீதி தேடும் பாபரி மஸ்ஜித்

அதிரையில் போபுலர் பிரான்ட் ஒப் இந்திய  நடத்தும் 'நீதி தேடும் பாபரி மஸ்ஜித் '

அதிரையில் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கம் ...இடம் சாரா  திருமண மண்டபம் ....டிசம்பர் 6 அன்று மாலி 4 .30 மணி அளவில் நடை பெறுகிறது .வாருங்கள் விழிப்புணர்வு அடைய . 

தமிழக அரசு அறிவித்துள்ள கல்வி கட்டண விவரம்


தமிழக அரசு அறிவித்துள்ள நமதூர் பள்ளிகளுக்கான ஓராண்டு கல்வி கட்டண விவரம்:

AL MATRIC SCHOOL:

LKG - 2500
UKG - 2710
I Std - 3060
II Std - 3060
III Std - 3560
IV Std - 3560
V Std - 3560
VI Std - 4000
VII Std - 4000

E.P.MODEL N&P SCHOOL:

LKG - 1820
UKG - 1820
I Std - 1820
II Std - 1820
III Std - 1820
IV Std - 1820
V Std - 1820

IMMAM SHAFI MATRIC HR.SEC.SCHOOL:

LKG - 3815
UKG - 3215
I Std - 3695
II Std - 3695
III Std - 4295
IV Std - 4715
V Std - 4715
VI Std - 5015
VII Std - 5015
VIII Std - 6065
IX Std - 6290
X Std - 6590
XI Std - 9290

KHADIR MOHIDEEN GIRLS HR.SEC.SCHOOL:

VI Std - 276
VII Std - 276
VIII Std - 276
IX Std - 300
X Std - 270
XI Std - 338

OXFORD N&P SCHOOL:

LKG - 1850
UKG - 1850
I Std - 1850
II Std - 1850
III Std - 2000
IV Std - 2100

THARBIYATHUL ISLAMIA N&P SCHOOL:

LKG - 1100
UKG - 1100
I Std - 1100
II Std - 1200
III Std - 1200
IV Std - 1300
V Std - 1300

WESTERN N &P SCHOOL:

LKG - 1180
UKG - 1280
I Std - 1380
II Std - 1480
III Std - 1580
IV Std - 1680
V Std - 1780


LAURAL HR.SEC.SCHOOL:

I Std - 4200
II Std - 4200
III Std - 4200
IV Std - 4500
V Std - 4500
VI Std - 5000
VII Std - 5500
VIII Std - 6000
IX Std - 6500
X Std - 7000
XI Std - 8000

மேலும் விவரங்களுக்கு: http://www.tn.gov.in