Sunday, October 30, 2011
அத்வானியின் ரத யாத்திரையை கண்டிக்கும் வகையில் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
Sunday, October 30, 2011
No comments
வேட்டையாடப்படும் விக்கிலீக்ஸ்.!
Sunday, October 30, 2011
No comments
நவீன காலத்தில் ஏகாதிபத்தியத்தின் அராஜகத்தால் பாதிக்கப்படுவோர் பலவிதத்தில் உள்ளனர்.ஆப்கானிஸ்தான் குடிமக்கள் முதல் ஈராக்கின் அதிபராக பதவி வகித்த சதாம் ஹுஸைன் வரை ஏராளமானோர் ஏகாதிபத்தியத்தின் பலிகடாக்களாவர்.முதலாளித்துவம் உலகமெங்கும் பரவிய காலம் முதல் அதன் சுய விருப்பங்களுக்கு அடிபணிய மறுத்தவர்களை நிம்மதியாக வாழ விட்டதில்லை.
அன்றிலிருந்து இன்றுவரை முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம் என கூறுகின்றன. ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் ஆட்சியாளர்களை தூக்கியெறிந்து, லட்சக்கணக்கான மக்களை படுகொலைச்செய்து, அந்நாட்டின் வளங்களை கொள்ளையடித்த பிறகும் அவர்கள் கூறுவது என்னவெனில் நாங்கள் சுதந்திரத்தின் சுவிஷேசகர்கள் என்பதாகும்.
ஜனநாயகத்தையும், நாகரீகத்தையும், நவீன காலத்தின் மதிப்பீடுகளையும் இந்த காட்டுமிராண்டிகளுக்கு கற்றுக்கொடுக்கவந்தோம் எனவும் கூறிக்கொள்கிறார்கள். இந்த பெரும் பொய்யை சில மேற்கத்திய ஊடகங்களும், மூளைக்குழம்பிய சில வலதுசாரி அறிவுஜீவிகளும் இந்த காலத்திலும் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
ஆப்கானிலும், ஈராக்கிலும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி சில மேற்கத்திய அறிஞர்கள் எழுப்பிய வாதங்களும் இதுவேயாகும். ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளுக்கு பலியானவர்களுக்கே இது முழுக்க முழுக்க கட்டுக்கதை என்பது தெளிவாக தெரியும்.தற்பொழுது மேற்கத்திய சமூகத்தின் அதன் அறிவுரீதியான தொழில்நுட்பரீதியான வெற்றியின் சந்ததியான விக்கிலீக்ஸிற்கு இதே கதிதான் ஏற்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் மேற்கத்திய ஊடகங்களுடன் உலகின் பல்வேறு ரகசியங்களை வெளிக்கொணர்ந்தது.கென்யாவின் ஊழல், ஐவரிகோஸ்டின் இராசயன கழிவுகளை கடலில் கொட்டியது, குவாண்டனாமோ சிறையில் நடக்கும் மனிதத்தன்மையற்ற சித்திரவதைகள், ஈராக், ஆப்கான் போர் ரகசியங்கள் என பல்வேறு ரகசிய செய்திகளை விக்கிலீக்ஸ் வெளிச்சம்போட்டு காட்டியது. மக்களின் தகவல்களை அறிந்துக்கொள்ளும் உரிமையை சரியான முறையில் பயன்படுத்தியது விக்கிலீக்ஸ். பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்களின் உண்மையான முகத்தை மக்களுக்கு முன்னால் திறந்து வைத்தது. சரி எது? தவறு எது? என்பதை அடையாளம் காணவும் தெளிவான நிலைப்பாடுகளை மேற்கொள்ளவும் அது உலக மக்களுக்கு உதவியது.
ஆனால், விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்டதன் மூலம் கதை மாறியது. இப்பொழுது அமெரிக்காவிற்கு உஸாமாவை விட மிகப்பெரிய தீவிரவாதி ஜூலியன் அஸாஞ்ச் ஆவார். கருத்து சுதந்திரத்தின் காவலாளிகள் எனக்கூறும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் இரட்டைவேடம் விக்கிலீக்ஸ் விவகாரத்தில் கலைந்தது.
விக்கிலீக்ஸிற்கு பொருளாதார உதவிகள் வரும் அனைத்து வழிகளையும் அமெரிக்காவும் அதன் கூட்டணிநாடுகளும் அடைத்துவிட்டன.அஸாஞ்ச் மீது ஏராளமான வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்கான எவ்வித வழியும் யாருக்கும் இனி கிடைக்க வாய்ப்பில்லை. ஏகாதிபத்தியத்தின் கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து விக்கிலீக்ஸ் தனது செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
ஆனால், அது வேட்டைக்காரர்களின் கடைசி வெற்றியாக மாறிவிடக்கூடாது. ஏனெனில் விக்கிலீக்ஸ் திறந்த மனங்களைக்கொண்ட சமூகத்தினருக்கு இன்றியமையாததாகும். அதற்கெதிரான அரசு பயங்கரவாதத்தை உலகம் எதிர்த்தே ஆகவேண்டும்!
அ.செய்யது அலீ.
thanks
www.thoothuonline.com
Saturday, October 29, 2011
வெடிப் பொருட்களுடன் வந்த இஸ்ரேல் பெண் மும்பையில் கைது
Saturday, October 29, 2011
No comments
இன்று காலை மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையத்தில் இஸ்ரேலிலிருந்து வந்திறங்கிய ஒரு பெண் வெடிப்பொருட்கள் வைத்திருந்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நூராத் T என்னும் பெயருடைய அந்த 23 வயதுடைய பெண்ணை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தபோது, வெடிக்கத் தக்க விதத்தில் உள்ள துப்பாக்கியில் பயன்படுத்தத் தக்க வெடிப்பொருட்களைக் கண்டெடுத்தனர்.
இதனை முன்னிட்டு, அப்பெண்ணை மாநகர காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறை அப்பெண்ணை கைதுசெய்து விசாரித்து வருகிறது என்று துணை ஆணையர் சத்யநாராயண சவுத்ரி தெரிவித்துள்ளார்.
எத்தனை வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்ற விபரத்தை துணை ஆணையர் தெரிவிக்கவில்லை. நண்பர்களுடன் சுற்றுலா என்னும் காரணத்தில் அப்பெண் இந்தியா வந்துள்ளார். நேபாளம் செல்லவும் திட்டமிட்டிருந்தாராம்.
thanks to puthiya thoothu
அவதூறு பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் இஸ்லாத்தின் நற்செய்தி அடையாளம் காணப்படும்: யுவான் ரிட்லி
அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை மேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும் என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.
கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.
ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன. ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும், ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.
இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.
ஏகாதிபத்தியமும், சியோனிஷமும் தான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி உரையாற்றினார்.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்
By: முகவை சேக்
Subscribe to:
Comments (Atom)


