Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Friday, September 28, 2012

அதிரையில் திடீரென ஏற்பட்ட சூறை காற்றுடன் சாரல் மழை!

கடந்த சில வாரங்களாக அதிரையை வெயில் வாட்டி வதைத்து வந்தது.வெயில் வாட்டி  வதைப்பது ஒருபுறம் இருந்தாலும், மின் தடையும் அதிகமாக இருந்து வந்தது.இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.


நேற்று மாலை 5.50 மணியளவில் அதிரையில் சூறை காற்று வீசியதால்   நடுத்தெரு உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருந்தாலும் இதனை தொடர்ந்து சில நிமிடங்கள் பெய்த சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று அதிரையில் மூன்று மணி நேரம் மட்டுமே மின் தடை இருந்தது.......!
எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத காரணத்தால் மாலை 5 மணிக்கே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றனர். (இடம் : பட்டுகோட்டை செல்லும் சாலை )
புகைப்படங்கள் : M.I.அப்துல் வஹாப்.

Monday, July 16, 2012

அதிரையில் பலத்த மழை மரங்கள் முறிந்து விழுந்தன....


அதிரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ததில், மரக் கிளைகள் முறிந்து விழுந்தன.இந்த மழை இரவு 12.00 மணிக்கு தொடங்கி சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது.மழையுடன்  பலத்த காற்றும் விசியதால் புதுமனை தெருவில் ஒரு வீட்டின் கல்யாண பந்தல் அடியோடு முறிந்து விழுந்தது. மேலும் ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்து இருக்கிறது பகலில் கடும் வெயில் கொளுத்தியதால் வெப்பத்தால் தவித்த மக்களுக்கு,  இரவுயில் பெய்த மழை குளிர்ந்த சூழலை ஏற்படுத்தியது.


படங்கள் உதவி: முபின்