Showing posts with label tamilkathir. Show all posts
Showing posts with label tamilkathir. Show all posts

Saturday, April 30, 2011

உலகின் மிக நீளமான பேருந்து !



பிரேசிலில் தாவர எண்ணெய் மூலம் ஓடும் உலகின் மிக நீளமான பேருந்து தனது பயணத்தை தொடங்கியது.

பிரேசிலில் பிரபல நிறுவனம் பி.ஆர்.டி என்ற உலகின் நீளமான பேருந்து ஒன்றை தயாரித்துள்ளது. 28 மீற்றர் நீளமுள்ள அந்த பேருந்தில் 250 பேர் பயணிக்கலாம்.

இயற்கை எரிபொருளான தாவர எண்ணெயில் இயங்குகிறது என்பது தான் அதன் தனிச் சிறப்பு. தற்போது இந்த பேருந்தின் சேவை குருடிபா நகரில் தொடங்கப்பட்டு உள்ளது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 25,000 பயணிகள் 10 கிலோ மீற்றர் தொலைவுக்கு பயணம் செய்யும் வகையில் மொத்தம் 24 பேருந்துகளை இந்நிறுவனம் இயக்க உள்ளது.

மேலும் மணிக்கு 28 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த பேருந்துகள் தயாரிக்கப்படுவதாக அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.



Monday, April 25, 2011

மாதுளம் பழம்......



மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள். ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம். மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து உள்ளது. புரதச்சத்து , நார்ச்சத்து விழுக்காடும், கார்போ ஹைட்ரேட், தாதுக்கள் சுண்ணாம்புச் சத்து மக்னீஷியம் அடங்கியுள்ளன.

மேலும், விற்றமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு மாதுளத்தில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்துமே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாமாயம் செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பல பிணிகளும் அகலும்.

மாதுளம் பழ ரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறைபாடுகளை அகற்றும். இதுதவிர, காதடைப்பு, வெப்பக் காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழ ரசம் விலக்கும்.

மாதுளம் பழ ரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகுபதத்தில் காய்ச்சி வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும்.