Saturday, January 28, 2012

அனாதை இல்லத்திற்காக வாங்கிய இடத்தில் அறிவாலயமா? மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை.


ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதாகக் கூறி, சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய இடத்திற்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். விதிப்படி ஆதரவற்றோர் இல்லம் அமைக்காததால், சிறப்பு அனுமதியை ரத்து செய்து, திறந்த வெளி இடத்தை மாநகராட்சியிடமே ஒப்படைக்கும் வகையில், அரசு ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, சென்னை மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
இதனால், அறிவாலயஇடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும் கேள்வி நேரம் நடந்தது. கவுன்சிலர் ஆறுமுகம் (எ) சின்னையன், ""அறிவாலயத்தில் திறந்த வெளி நிலங்களுக்கு சி.எம்.டி.ஏ., மூலம் தான பத்திரம் வழங்கி, பத்திரப்பதிவு செய்திருக்கின்றனரா, பொதுமக்கள் அங்குள்ள பூங்காவை பயன்படுத்த அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா?'' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து சைதை துரைசாமி பேசியதாவது: கடந்த 1980ல் எம்.ஜி.ஆர்., ஆட்சி கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சியின் போது, தி.மு.க., அறக்கட்டளை ஒரு கோரிக்கை வைத்தது. அறிவாலய இடத்தில் பல மாடி கட்டடம் கட்ட, அரசாணை வெளியிடப்பட்டது. இதில், 10 சதவீத திறந்தவெளி நிலத்தை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

ஆறு ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க., அறக்கட்டளை சார்பில், சில சலுகைகள் கேட்டு அரசாணையில் திருத்தம் வேண்டி மேல்முறையீடு செய்தனர். அது நிலுவையிலேயே இருந்தது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், கவர்னர் ஆட்சியின் போது, "அனாதை இல்லம்' கட்டுவதாகக் கூறி, அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றனர். கடந்த 2004ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது, அறக்கட்டளைக்கு அனுமதி அளித்ததை ஏன் ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அடுத்து தி.மு.க., ஆட்சிவந்ததும், 2007ம் ஆண்டில்,தி.மு.க., அறக்கட்டளை எழுதிய விளக்க கடிதத்தை ஏற்று, மேல் நடவடிக்கை தேவையில்லை என கோப்பு முடிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்றோர் இல்லம் கட்ட சிறப்பு அனுமதி பெற்று, இதுவரை அதை செயல்படுத்தாமல் இருப்பதால், தி.மு.க., அறக்கட்டளை திறந்தவெளி நிலத்தை பதிவு செய்யாமல் பெற்ற சிறப்பு ஆணையை ரத்து செய்யவும், நிலத்தை மாநகராட்சிக்கு வழங்க அரசு ஆணை பிறப்பிக்கக் கோரி, அரசுக்கு பரிந்துரைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்தார்.
இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அவர்களை பேச விடாமல் சத்தம் போட்டனர். இதனால், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. "அந்த இடத்தில் பூங்கா உள்ளது; பொது நூலகம் உள்ளது. மன்றத்தில் தவறான தகவல்களை மேயர் தருகிறார்' எனக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர்போஸ் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் போஸ் கூறும்போது, ""தி.மு.க.,வினர் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதிக்கப்படுவதில்லை. வீடியோகிராபர்களை உள்ளே அனுப்ப மறுக்கின்றனர். மன்றம் மன்றமாக நடக்கவில்லை. மேயர் சர்வ அதிகாரம் படைத்தவர் போல் செயல்படுகிறார். எனவே,வேறு வழியின்றி தான் வெளிநடப்பு செய்தோம்,'' என்றார். கவுன்சிலர் மீது தாக்குதல்: தி.மு.க., கவுன்சிலர் வாசு, "விரிவாக்கப் பகுதிகளில் ஏற்கனவே கட்டிய கட்டடங்களின் மேல், கட்டடம் கட்டப்படுகிறது. இதில் விதிமீறல் இருந்தால் என்ன செய்வது' என, கேள்வி எழுப்பினார். பதிலளித்த மேயர், "எவ்வித கட்டடமாக இருந்தாலும், விதிமுறைப்படி தான் கட்ட வேண்டும்.
புதிதாக கட்டுமானப் பணி துவங்கும்போதே, விதிமுறை மீறல் உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது' என்றார். வாசு மேலும் கேள்விகள் கேட்க முயன்றபோது, "ஒரு துணை கேள்வி தான்; அதற்கு மேல் அனுமதிக்க முடியாது,'' என்று மேயர் அனுமதி மறுத்தார். அப்போது வாசு, மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்படுவதாகக் கூறி, தி.மு.க., கவுன்சிலர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.
வெளியேறிய வாசுவை, பெண் கவுன்சிலர்கள், கையில் இருந்த தீர்மான நோட்டு மற்றும் கைகளைக் கொண்டு தாக்கினர். ஆத்திரமடைந்த கவுன்சிலர் சத்தம் போட்டுக் கொண்டே மேயர் இருக்கை நோக்கிச் சென்றார். அவரது சத்தம் கேட்டு, தி.மு.க., கவுன்சிலர்களும் வந்தனர். மேயர் இருக்கை அருகே சென்று தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்துவிட்டு மீண்டும் வெளியேறினர்.

as
thanks to thedipaar.com

ஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம் - உணர்வு!



கடந்த சில மாதங்களாக அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நேரடி களத் தொகுப்பு என்ற பெயரில் சில நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.

புலனாய்வு நிகழ்ச்சிகளின் சாயலில், ‘நடந்தது என்ன’ என்பதை மக்களுக்குக் காட்டுகிறோம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் தவறான செயல்கள், நாகரிக சமுதாயத்தை மீண்டும் மூட நம்பிக்கைப் படுகுழிக்குள் தள்ளும் செயல்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தின் மூலம் தமிழகத்தில் இருக்கும் மக்கள் இப்போதைக்கு கொஞ்சமேனும் பேய், பிசாசு என்பனவற்றையெல்லாம் மறந்து அதெல்லாம் மூடநம்பிக்கை என்ற நிலையை ஓரளவிற்கு அடைந்து விட்டார்கள்.

இந்தத் தந்திரத்தைக் கையாளும் தொலைக்காட்சி சேனல்கள் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று அங்கிருக்கும் மக்களிடம் பேய் எப்படி வந்தது, பிசாசு எப்படிச் சென்றது என கதையளந்து இவர்களாகவே காட்சிகளைச் சித்தரித்து மக்களைக் குழப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பேய் பிசாசெல்லாம் கிடையாது என்று முடிவெடுத்துத் தெளிந்து விட்டவரின் மனநிலை, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது ஒருவேளை பேய் இருக்குமோ என்ற குழப்பமான நிலைக்கு மீண்டும் கொண்டு வந்து விட்டுவிடும்.

சித்தரிக்கப்படும் காட்சிகள் திகிலடைய வைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளதால், மக்கள் இதை விரும்பிப் பார்க்கிறார்கள். அத்தோடு இந்தக் காட்சிகளை உண்மை என நம்பி இதுபோல நமக்கும் எதுவும் வந்துவிடக் கூடாது என்ற நிலைக்கு மக்கள் வந்துவிடுகின்றனர்.

அதன் பிறகு அவர்கள் குடும்பத்திலோ அல்லது தொழிலிலோ ஏதாவது வித்தியாசமாகத் தென் பட்டால் அதற்கான பரிகாரம் வேண்டி போலிச் சாமியார்களையும், போலி ஜோஸ்யர்கள் மற்றும் வாஸ்து, கல் என போலித்தனம் செய்பவர்களையும் நாடிச் சென்று, தங்களின் காசு பணங்களை இழந்து நிற்கின்றனர்.

இதெல்லாம் போதாது என்று சமீபத்தில் ஒரு தனியார் தொலைக் காட்சி சேனல், முன் ஜென்ம வாழ்க்கையைத் தோண்டி எடுக்கிறேன் என்ற பெயரில் மீண்டும் மக்களைக் குழப்பும் வேலையை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு பிரபலத்தை ஆழ்நிலை உறக்க நிலைக்குக் கொண்டு சென்று அவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். கேள்வி கேட்பவர் தன்னை ஒரு மருத்துவர் என்றும் சொல்லிக் கொள்கிறார்.

ஆழ்நிலை உறக்கத்திற்குச் சென்றுவிடும் அந்தப் பிரபலத்திடம் இவர் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கத் துவங்குகிறார். நீங்க  இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் சம்பந்தமே இல்லாமல், நான் இப்போது திருப்பதி கோவிலில் இருக்கிறேன் என்று சொல்கிறார். இன்னும் சில நிமிடத்தில் பழனி முருகன் கோவிலில் இருக்கிறேன் என்று சொல்கிறார். இப்படியாகத் தொடர்கிறது இந்த நிகழ்ச்சியின் முட்டாள்தனம்.

இது முடிந்து அவரிடம் இன்னும் கொஞ்சம் முன்னால் செல்லுங்கள் எனக் கேட்க, அவர் இன்னும் முன்னால் சென்று தன்னுடைய முன் ஜென்மத்தை அடைகிறாராம். அந்த ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் எனக் கேட்கப்படும் போது அந்த ஜென்மத்தில் நான் மானாக இருந்தேன், மயிலாக இருந்தேன், பட்டாம்பூச்சியாக இருந்தேன் என பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள், ஆய்வுக்கு உட்படக் கூடியவர்கள். ஆனால் அதிலே வருபவர்களில் ஒருவர்கூட நான் முன் ஜென்மத்தில் நாயாக இருந்தேன், கழுதையாக இருந்தேன், பன்றியாக இருந்தேன் எனச் சொல்வதில்லை. சொல்வதில்லை என்று சொல்வதைவிட சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்று சொன்னால் சாலப் பொருந்தும்.

முன் ஜென்மம் என்ற முட்டாள் தனமான விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தினர் அதை வைத்து காசு பார்க்கும் வேலையைச் செய்கிறார்கள். லாபம் கிடைத்தாலும் அதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்ற நிலையாவது அதில் இருக்கிறதா என்றால் இல்லவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டுமிராண்டி காலத்திலிருந்து நவீன காலத்திற்கு நாகரிகமான மனிதனாக மாறிவிட்ட மக்களை மீண்டும் பழைய அறியாமைக் காலத்திற்குத் தள்ளிச் செல்லும் கீழ்த்தர வேலைகளை இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்து வருகின்றது.

தொலைக்காட்சி வழியாக எதைச் சொன்னாலும் நம்பும் மக்கள் இவைகளையும் கொஞ்சமும் ஆராயாமல் அப்படியே உண்மை என நம்பி விடுகின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதற்கு பரிகாரம் செய்கிறேன்என பல போலிகள் கிளம்பி மக்களின் பொரு ளாதாரங்களுக்கு வேட்டு வைக்கும் வேலைகளில் ஈடுபடுவதற்கும், அதன் மூலம் பல பெண்களின் கற்பைச் சூறையாடுவதற்கும் இதுபோன்ற மூடநம்பிக்கையை உருவாக்கும் செயல்பாடுகளே காரணம் ஆகும்.

உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய ஊடகங்கள் தங்களின் சுய நலனுக்காக இதுபோன்ற முட்டாள் தனமான சம்பவங்களை ஒளிபரப்பி, அது குறித்த எவ்வித விழிப்புணர்வையும் மக்களுக்குத் தெரி விக்காமல் சுயநலத்துடன் நடந்து கொள்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.


நன்றி: கீற்று

இஸ்ரேலிடம் 300 அணு ஆயுதங்கள் உள்ளன-அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர்



ஈரானின் அணுசக்தி பரப்புரைச் செய்வது போல் கவலை அளிப்பது அல்ல என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் தெரிவித்துள்ளார். டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் கார்டன் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது: அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என உறுதியாக மத உணர்வு மிக்க ஈரான் ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். அவர்கள் அதனை மீறுவார்கள் என கருதவில்லை. தாங்கள் அணு ஆயுதத்தை தயாரிக்கவில்லை என தொடர்ந்து அவர்கள் கூறி வருகிறார்கள்.
ஒருவேளை, அவர்கள் கூறுவது பொய்யாக இருந்தால் கூட அது ஒரு அபாயமாக மாறும் என கருதமுடியாது. ஒன்று அல்லது இரண்டு அணு ஆயுதங்களை தவிர அதற்கு அதிகமாக அணு ஆயுதங்களை ஈரானுக்கு தயாரிக்க முடியாது.
அதேவேளையில், இஸ்ரேலிடம் ஏறத்தாழ 300 அணு ஆயுதங்கள் இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இஸ்ரேலின் எதிர்காலம் குறித்து எனக்கு நல்ல எதிர்பார்ப்பு இல்லை. அந்த நாடு உருவான பிறகு மேற்காசியாவில் தற்போதைய சூழலைப்போல முன்பு அமெரிக்காவின் மீதான செல்வாக்கு குறையவில்லை.
ஃபலஸ்தீன் மக்களை கூட்டுப் படுகொலைச் செய்யும் இஸ்ரேலை ஆதரிப்பதன் மூலம் அமெரிக்கா மீதான நம்பிக்கை அரபுலகத்தில் மங்கிப்போனது. எனக்கு பிறகு அமெரிக்காவின் அதிபர்களாக வந்தவர்கள் எல்லாம் போர் விரும்பிகளாகவே இருந்தனர். உலகத்தின் பிரச்சனைகளை தீர்க்க போர் மூலம் முடியாது. அமைதியின் மூலமாகத்தான் உலகின் பிரச்சனைகளை தீர்க்க இயலும்.
நமது செல்வங்களில் இருந்து மிகவும் குறைந்த அளவு கூட உலகில் பிறருக்கு வழங்க நாம் முன்வருவதில்லை. அமெரிக்காவில் அரசியல்வாதிகள் கிறிஸ்தவ துருப்புச் சீட்டை இறக்கி விளையாடுவதில் கெட்டிக்காரர்கள் என்று ஜிம்மி கார்டர் கூறியுள்ளார்.
87 வயதான ஜிம்மி கார்டர் 2002-ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றவர்.

பகவத் கீதையை தடை செய்யாமல் ஓயப்போவதில்லை - ரஷ்ய போராட்டக்காரர்கள் அறிவிப்பு !


மாஸ்கோ: சமூக அமைப்பில் பிரிவினையை தூண்டும் வகையில் இஸ்கான் அமைப்பால் வெளியிடப்பட்ட பகவத் கீதையை ரஷியாவில் தடை செய்யாமல் ஓயப்போவதில்லை என்று கிறிஸ்டியன் ஆர்த்தோடாக்ஸ் சர்ச் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ரஷியாவின் டோம்ஸ்க் நகரில் பகவத் கீதைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இருப்பினும் அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய புதன்கிழமை வரை அனுமதியும் அளித்திருந்தது. 

இந்நிலையில் டோம்ஸ்க் நீதிமன்றத்தில் நேற்று வரை மேல்முறையீடு செய்யப்படவில்லை. டோம்ஸ்க் நீதிமன்றத்தைவிட மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்து பகவதக் கீதைக்கு தடை வாங்கியே தீருவோம் என்று கிறிஸ்டியன் சர்ச் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

பகவத் கீதைக்கு தடையா? என பொங்கியெழுந்த இந்து அமைப்பினரின் வேண்டுகோளை ஏற்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ரஷியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து சாதகமாக தீர்ப்பை பெற்றுத் தந்தார். இருபபினும் பிரச்சினை முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.
thanks to asiananban.blogspot.com

ஐ.நா தலைமமையக்திலிருந்து... பெருந்தொகை போதைப் பொருள் மீட்பு!........


நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் பிரிவிலிருந்து கொக்கைன் எனப்படும் ஒரு தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
 ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ இலட்சினை பொறிக்கப்பட்ட பை ஒன்றிலிருந்து 16 கிலோகிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தப் பையில் பெயர் விபரங்கள் பொறிக்கப்படாதபோதிலும் மெக்சிக்கோவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இந்தப் பை தவறுதாலாக ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
thanks to qahtan.blogspot.com

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?...


லண்டனில் 15 ஆண்டுகளாக கோழிக்கறி மட்டுமே சாப்பிடும் சிறுமி: மூச்சு திணறலால் ஆஸ்பத்திரியில் அனுமதி
நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.
நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், ந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.

"இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்" என்று ஆதங்கப்படுகிறார் பிரபல டயட்டீஷியன் ஷோனாலி.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.

thanks to qahtan.blogspot.com

Friday, January 27, 2012

பத்மஸ்ரீ என்கிற மாயக்கண்ணாடி!

பத்மஸ்ரீ விருது இந்த விருது என்பது இந்திய அரசால் வழங்கப்படும் முதன்மை விருதுகளில் ஒன்றாகும். பத்ம விபூசன், பாரத ரத்னா, பத்ம பூசன் போன்ற விருதுகளுக்கு அடுத்து நான்காவது இடத்தில்  பத்மஸ்ரீ விருது அமைந்துள்ளது.

இது கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூகசேவை, பொதுவாழ்வில் சிறப்பான பங்களித்தல் போன்றவைகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது 1954  ஜனவரி 2 நாள் இந்திய ஜனாதிபதியால் ஏற்ப்படுத்தப்பட்டது.

இது ஒன்றும் அப்படியே நூறு சதவீதம் திறமை உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாக எண்ணிவிட வேண்டாம். இது ஆளும் வர்க்கத்திற்கும், அரசு துதிபாடுபவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும், சினிமா கூத்தாடிகளுக்கும் கொடுக்கப்படும் ஒரு விருதே தவிர வேறொன்றும் இல்லை.

ஒருபக்கம் பசி, வறுமையால் தற்கொலை சாவுகள்! மறுபக்கம்  உயர்குடிகளுக்கு இதுபோல் சாதனை பூச்செண்டுகள். வறுமையில் வாடும் மக்களை கவனியுங்கள் என்று சொன்னால் குடியரசு தினம் நடத்துகிறோம், ராக்கெட்டு பறக்க விடுகிறோம், விமானத்தில் சாகசம் காட்டுகிறோம், பத்மஸ்ரீ விருது வழங்குகிறோம் பாருங்கள் என்று சொல்கிறார்கள். பசிக்கும் வயிறோடு இதையெல்லாம் பார்த்து விட்டு பட்டினியில் சாகுங்கள் என்று சொல்கிறார்கள்.

மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (பியுசிஎல்) அமைப்பில் உள்ள டாக்டர் பினாயக் சென். இவரை நீங்கள்  மறந்திருக்கலாம். இவர்தான்  சத்தீஸ்கர் மாநில பழங்குடியின மக்களுக்கு கிராமம்தோறும் சென்று மருத்துவம் செய்து வந்தவர்இவருக்குத்தான் சத்தீஸ்கர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. இந்த பழங்குடிமக்கள் வாழும் மலைகளில் இருந்துதான் இந்திய அரசு கனிமவளங்களை எடுக்க உள்நாட்டு யூத்தம் செய்துவருகிறது. இவரைப்போல் ஏழை, எளிய மக்களுக்கு சேவைகள் செய்யும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு எல்லாம் விருதுகள் கிடையாது.

ஆனால் மக்கள் சேவை செய்யாத, சேவை நோக்கம் இல்லாத மருத்துவர்களுக்கும்,  நாதஸ்வர வித்வான், மிருதங்க வித்வான், வயலின் வித்வான், நடிகை, நடிகர்கள், தொழில் அதிபர்கள்இவர்களைத்தான் இந்த விருது சென்றடையும். இவர்கள் ஏற்கனவே பெரும் பணமும், புகழும் சம்பாதித்து வாழ்க்கையை வளமோடும், செல்வ செழிப்போடும் வாழ்பவர்கள். இவர்களுக்கு இந்த விருதுகளை வழங்குவதால் என்ன பிரோஜனம் இருக்கிறது. ஏழை, எளிய மக்களில் திறமை உள்ளவர்களுக்கு, சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு விருது கொடுத்து உதவி செய்து கவுரவிப்பதே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு  உறுதுணையாக அமையமுடியும்.

இந்தியாவில் நரோரா என்ற இடத்தில் உள்ள அணு உலையில் ஒரு தீவிபத்து நடக்கிறதுஅதை அதன் ஊழியர்கள் நான்குபேர் தங்கள் உயிரை பணயம் வைத்து அணைக்கின்றனர். இவர்களுக்கு எந்த விருதும் வழங்கப்படவில்லைஇதே போல் ஒரு விபத்து அமெரிக்காவில் நடக்கிறது அதை சரி செய்த ஒருவருக்கு அமெரிக்க சுதந்திர தினத்தில் அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்படுகிறது. ஆனால் நமது பத்மஸ்ரீ விருதுகளால்  லிவிங் டுகெதர் (Living together) என்பதை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்த மாமேதை கமல்ஹாசன் போன்றவர்களைத்தான் சென்றடைய முடிந்துள்ளது என்பதை நினைத்து நாம் பெருமைபட்டுக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நமது டாக்டர் பட்டங்கள் எப்படி ரவுடிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும் காற்றில் பறக்கவிடும் பட்டமாக ஆகிவிட்டதோ அதுபோல் தான் இதுவும். இதில் ஒரு ஆறுதலான செய்தி என்னவென்றால் புச்சேரி வேங்கடபதி என்ற  விவசாயிக்கு இந்தவருடம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பதே.
*மலர்விழி*    

குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர்கலை விசாரியுங்கள் : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவினால் மோடி கலக்கம்


டெல்லி: 2003 முதல் 2006ம் ஆண்டு வரை குஜராத்தில் நடந்த பல்வேறு போலி என்கவுண்டர்கள் குறித்த வழக்குளை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது நரபலி   நரேந்திர மோடிக்கு ஏற்பட்டுள்ள பெருத்த பின்னடைவாக இது கருதப்படுகிறது. இதுதொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா நடத்துவார் என்றும் அப்தாப் ஆலம் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் அறிவித்துள்ளது.



2003 முதல் 2006 வரை குஜராத்தில் நடந்த பல்வேறு என்கவுண்டர்கள் போலியானவை என்று புகார்கள் குவிந்துள்ளன. குறிப்பாக 20 என்கவுண்டர்கள் போலியானவை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை குறித்துத்தான் ஷா தலைமையிலான விசாரணை அமைப்பு விசாரிக்கவுள்ளது.



 ஷா தலைமையிலான அமைப்பு, தனக்கு தேவையான விசாரணைக் குழுக்களை நியமித்துக் கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுக்களில் இடம் பெறுவோர் குஜராத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களா என்பதையும் நீதிபதி ஷாவே முடிவு செய்து கொள்ளலாம்.

அமித் ஷா 
 ஷா தலைமையிலான அமைப்பு 20க்கும் மேற்பட்ட என்கவுண்டர் வழக்குகளை விசாரித்து அவை உண்மையான என்கவுண்டரா அல்லது போலி என்கவுண்டரா என்பதை தெளிவுபடுத்தி அதை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தனது முதல் விசாரணை அறிக்கையை 3 மாத காலத்திற்குள் அளிக்க வேண்டும் என்றும் ஷாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக போலி என்கவுன்ட்டர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரபல கவிஞர் ஜாவீத் அக்தரும், பத்திரிகையாளர் பிஜி.வர்கீஸும் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தனர். போலி என்கவுன்ட்டர்கள் குறித்து விசாரணை நடத்த 2011-ல் நீதிபதி ஷாவை குஜராத் அரசு நியமித்திருந்தது. இந்த வழக்குகளை சிறப்பு அதிரடிப் படை விசாரித்து வருகிறது.

சோரபுதீன், அவரது மனைவி கெளஸர்பி
 சோரபுதீன், அவரது மனைவி கெளஸர்பி, துள்சிராம் பிரஜாபதி, இஷ்ரத் ஜஹான், ஜாவீத் ஷேக் என்கிற பிரனீஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹர் உள்ளிட்ட வழக்குகள் போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் பிரபலமானவை. இந்த என்கவுன்ட்டர்களில் குஜராத் மாநில உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சோரபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ-125 குடும்பங்கள் தப்பின !


Sharjah fire
ஷார்ஜா அல் தவுன் ஏரியாவில் உள்ள 25 மாடி குடியிருப்பில் நேற்று  அதிகாலை 2.15 மணிக்கு திடீர் என்று தீப்பிடித்தது. இதனால் அங்கு தங்கியிருந்த 125 குடும்பங்கள் வீடுகள், சொத்துக்களை இழந்து தவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக அந்த குடும்பங்கள் உயிர் தப்பியுள்ளன. ஷார்ஜா அல் தவுன் ஏரியாவில் உள்ள 25 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு திடீர் என்று தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இறுதியாக காலை 9.15 மணி அளவில் தான் தீயை அணைக்க முடிந்தது.

அதிகாலை 2.15 மணிக்கு ஏற்பட்ட தீ சீதோஷ்ன நிலை காரணமாகவும், காற்று காரணமாகவும் மளமளவென 25 மாடிகளிலும் பரவியது என்று ஷார்ஜா தீயணைப்பு துறை டைரக்டர் ஜெனெரல் பிரிகேடியர் அப்துல்லாஹ் சயீத் அல் சுவைதி தெரிவித்தார். இந்த விபத்தில் அந்த குடியிருப்பில் தங்கியிருந்த 125 குடும்பங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின. ஆனால் அவர்கள் அனைவரும் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவிக்கின்றனர்.

37 வயதாகும் அஹம்து யாகூப் என்பவர் தன்னுடைய வீட்டில் 60,000 திர்ஹம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகவும், எலலாவற்றையும் புதிதாக வாங்க வேண்டும் என்றும், அதற்காக புகார் செய்யப் போவதாகவும் கூறினார்.

அறை எண் 805ல் இருந்த இஃபியானி டவ் என்பவர் தன்னுடைய குழந்தையை கையில் வைத்திருந்த சமயத்தில் தீ பிடித்த செய்தி பற்றி தெரிந்ததாகவும், அதனால் எல்லாவற்றையும் விட்டு விட்டு வீட்டை வெளியேறியதாகவும், தற்போது தன்னிடத்தில் உடுத்திய உடை மட்டும் தான் மிஞ்சியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தீயினால் பாதிக்கப்பட்டு விடுகளை இழந்த குடும்பங்கள் பல இடங்களில் பாதுக்காப்பாக தங்க வைக்கப்ப்ட்டுள்ளனர். ஷார்ஜா சாரிட்டியின் மேலாளர் சாலேஹ் அல் ஷுவைஹி அவர்கள் தங்களின் 24 தன்னார்வத் தொண்டர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகவும், 1000 திர்ஹம் முதல் 2000 திர்ஹம் வரை குடும்பத்தின் அளவை பொறுத்து நிதியுதவி செய்வதாகவும், அவர்களுக்காக வீடுகள் பார்க்கப்படுவதாகவும், இன்னும் ஓரிரு நாளில் அவர்களை வேறு வீடுகளில் குடியமர்த்த போவதாகவும் தெரிவித்தார்.
thanks to asiananban.blogspot.com

மாடு ஏற்றி வந்த லாரியை மறித்து வழிப்பறி செய்த இந்து முன்னணி நிர்வாகிகள் !


 
முசிறி: முசிறியில் மாடுகளை ஏற்றி வந்த லாரியை வழிமறித்து மிரட்டி பணம் பறித்ததாக இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
பொள்ளாச்சியை அடுத்த தீபகம்பட்டியைச் சேர்ந்தவர் ஜோதிமணி (42). அவர் முசிறி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார்.


அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது,

நான் மாடுகள் வாங்கி சந்தையில் விற்கும் தொழில் செய்து வருகிறேன். பொள்ளாச்சி சந்தையில் வாங்கிய மாடுகளை விற்பனை செய்ய பெரம்பலூரில் இருந்து துறையூர் வழியாக முசிறிக்கு வந்து கொண்டிருந்தேன்.

அப்போது முசிறி திருமுருகன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே முசிறியைச் சேர்ந்த இந்து முன்னணி புறநகர் மாவட்டச் செயலாளர் நீலமேகம் (35), துலையாநத்தம் உறுப்பினர் திருப்பதி, முசிறி ஒன்றியச் செயலாளர் தேவராஜ் (32) ஆகியோர் லாரியை வழி மறித்து லாரியில் மாடுகளை ஏற்றி வந்தது தவறு என்றும், ரூ.2,000 பணம் கொடுக்காவிட்டால் வாகனத்தை காவ்ல நிலையத்தில் ஒப்படைத்து சிறையில் அடைப்போம் என்று மிரட்டினர். பின்னர் ரூ.2,000 பணத்தை எங்களிடம் இருந்து பறித்துச் சென்றனர். எனவே, அவர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் முசிறி இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி வழக்குப் பதிவு செய்து இந்து முன்னணி நிர்வாகிகள் நீலமேகம் (35), துலையாநத்தம் திருப்பதி, தேவராஜ் (32) ஆகிய 3 பேரை கைது செய்தார்.thanks to asianan
thanks to asiananban.blogspot.com