Friday, February 8, 2019

கருவை காக்கும் கருவேப்பிலை

கருவை காக்கும் கருவேப்பிலை
உணவு வகைகளில் ருசிக்காகவும், மணத்திற்காகவும் மட்டுமே கருவேப்பிலை சேர்க்கப்படுவதாக பலரும் கருதுகிறோம்.
ஆனால் இதில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.
கருவேப்பிலை ஒரு சத்து நிறைந்த உணவு பொருளாகும், இதில் 63 சதவிகித நீரும், 6.1 சதவிகித புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவிகித நார்ச்சத்தும், 18.7 சதவிகித மாவுச்சத்தும் இருக்கின்றன.
சுண்ணாம்பு சத்து. மக்னீசியம், இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் போன்றவையும் கருவேப்பிலையில் உண்டு.
நாட்டுக் கருவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டுக் கருவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும்.
நாட்டுக் கருவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.
கருவேப்பிலையின் இலை, ஈர்க்கு, பட்டை, வேர் போன்ற இதர பொருட்களும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
கருவேப்பிலை குழம்பு
துவரம்பருப்பு, மிளகு, வரமிளகாய், கருவேப்பிலை மற்றும் புளி ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி அரைக்கவும். இத்துடன் எண்ணெயில் வதக்கிய தேங்காய் துருவலை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த கலவை சேர்த்து கொதிக்கவிட்டு கெட்டியான குழம்பானதும் இறக்கவும்.
பயன்கள்
இதை கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடுவதன் மூலம் வளரும் கருவுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கும்.
பெண்களுக்கு இருக்கும் முடிக் கொட்டும் பிரச்சனை நீங்குவது மட்டுமின்றி கண்பார்வையும் நன்றாக தெரியும்.
கருவேப்பிலை துவையல்
கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, தேவையான அளவு இஞ்சி, பச்சைமிளகாய் போன்றவற்றை வதக்கி கொள்ள வேண்டும்.
இதில் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் மிதமாக அடித்தால், கருவேப்பிலை துவையல் ரெடி.
பயன்கள்
இதை சாதத்தில் கலந்து சாப்பிடுவதன் மூலம் புத்தி கூர்மை அதிகரிக்கும், பித்தத்தை தணித்து உடலின் உஷ்ணத்தை குறைக்க உதவும்.
சளி இரும்பலை உடனடியாக விரட்டியடிக்கும், மேலும் மனநலம் சரியில்லாதவர்களுக்கு இதை அளிப்பதன் மூலம், பைத்தியம் நீங்கி சுயநினைவு திரும்ப பல வாய்ப்புகள் உள்ளன.

Wednesday, February 6, 2019

இஸ்லாத்திற்கு எதிராக புத்தகம் எழுத ஆரம்பித்தவர் இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.



நெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன் - Joram van Klaveren இரண்டு நாட்களுக்கு முன் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
=========================
நெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன் - Joram van Klaveren தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளார். - சர்வதேச ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
டச்சு – நெதர்லாந்தின் தீவிர வலதுசாரி கட்சியின் முன்னால் உறுப்பினரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோரம் வான் லவரன் இஸ்லாத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வந்தவராவார்.
2010 – 2014 காலப் பகுதியில் நெதர்லாந்து சுதந்திரக் கட்சியின் - Freedom Party (PVV) பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட ஜோரம், பின்னர் தனிக் கட்சி ஆரம்பித்து 2017ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தேர்தல் தோல்வியுடன் தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த ஜோரம் அவர்கள் தான் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து வந்த இஸ்லாத்தைப் பற்றிய ஒரு நூலை எழுத ஆரம்பித்திருந்தார்.
ஜோரம் அவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை பொய்யான மார்க்கம் என்றும், குர்ஆன் என்பது விஷம் என்றும் கடுமையான விமர்சனத்தை தொடர்ந்தும் முன்வைத்து வந்தவராவார்.
தான் இஸ்லாத்தின் மீதும், குர்ஆன் மீதும் முன்வைத்து குற்றச்சாட்டுக்கள் மிகத் தவறானவை என்பதை தற்போது உணர்வதாக ஜோரம் தெரிவித்துள்ளார்.
தான் இஸ்லாத்தை விமர்சித்து எழுத ஆரம்பித்த நூலுக்காக இஸ்லாம் பற்றிய பல செய்திகளை அவர் ஆழமாக படிக்க ஆரம்பித்திருந்தார்.
இஸ்லாத்தின் மிகப் பெரும் எதிரியாகவும், மிகப் பெரும் விமர்சகராகவும் இருந்து, இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே புத்தகம் எழுத ஆரம்பித்த ஜோரம் பின்னர் இஸ்லாத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். - அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
40 வயதாகும் ஜோரம் அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார். அதனை வெளியுலகுக்கு பகிரங்கப்படுத்தாமல் இருந்தார்.
“இஸ்லாத்தை விமர்சிக்கும் விதமாக நான் ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்த நிலையில், இஸ்லாத்தை நானே ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது.”
“புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது இஸ்லாத்தைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதுதான் இஸ்லாம் பற்றிய என்னுடைய முழுமையான பிழையான கருத்துக்களையும் மாற்றி விட்டது.” என்று நெதர்லாந்தின் வானொலி சேவைக்கு ஜோரம் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தின் உண்மைத் தன்மையை பற்றிய செய்திகளை படித்துணராமல் விமர்சிப்போர் மாத்திரமே இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள்.
குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளையும் படித்துணர்ந்து கொள்ளும் யாரும் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு விடுவார்கள் என்பதற்கு கடந்த கால வரலாற்றுடன் இவரும் ஓர் வரலாற்று முன்னுதாரணமாகும்.
திருமறைக் குர்ஆனின் நேர்வழிக்கான தெளிவான அழைப்பை ஏற்றுக் கொள்ளும் எவரும் இஸ்லாத்தின் இன்பத்தை அடைந்து கொள்வார்கள்.
வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வை அன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!
இறை வேதம், அல்குர்ஆன் 03:64
-ரஸ்மின் MISc

Tuesday, February 5, 2019

அதிரையில் சாலை மறியல் போராட்டம்

ஏறிப்புரைக்கரை அங்காடியில் புயல் நிவாரணம் 27 பொருட்கள் முறையாக தராததால் மக்கள் காதிர் முகைதீன் கல்லூரி அருகில் உள்ள ECR சாலையில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் .








Monday, February 4, 2019

அறிவின் பக்கங்கள் - தெரிந்து கொள்ளுங்கள்

தெரிந்து கொள்ளுங்கள்

நாம் அனைவரும் ஃபோன் கால்களை எடுத்ததும், நம்மையும் அறியாமல் 'ஹலோ' என்று கூறுவோம். இந்த 'ஹலோ' என்ற வார்த்தை எப்படி பிறந்த்து தெரியுமா???

தொலைப்பேசியை கண்டுப்பிடித்த அலெக்சான்டர் க்ராஹம் பெல்-ன் காதலியின் பெயரிலிருந்து வந்த வார்த்தை தான் 'ஹலோ'.

அதிரையில் ரயில்வே பணிகள் தீவிரம்

அதிரையில் சில நாட்களாகவே ரயில்வே பணிகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொன்று இருக்கிறது .மிக விரைவில் அதிரைவாசிகள் பழைய ஞாபகத்துடன் ரயிலில் பயணிக்க காத்துகொண்டு இருக்கின்றனர் .

உங்களுக்காக சில ரயில்வே பணிகளின் புகைப்படங்கள் .











அதிரையில் குளிர்ந்த காற்றுடன் மேகமூட்டம் .

அதிரையில் குளிர்ந்த காற்றுடன் மேகமூட்டம் காணப்படுகிறது . ஒரு சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டது , இந்த மேகமூட்டத்தால் அதிரைவாசிகள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர் .

Sunday, June 9, 2013

நீதிபதிகள், அமைச்சர்கள் பங்களாக்கள் பராமரிப்பு பெயரில் ஆண்டுக்கு ரூ5கோடி ஊழல்…

poor house  green  justice_chandru

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் பெரிய பெரிய மதில் சுவர் கட்டப்பட்டு அதன் நடுவில் காட்சியளிக்கும் பங்களாக்களில் தமிழக அமைச்சர்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வசிக்கிறார்கள்..
 
    இந்த நவீன வசதிகள் கொண்ட பங்காளக்கள், தமிழக அரசுக்கு சொந்தமானது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் உள்ளது. அமைச்சர்கள், நீதிபதிகள் வசிக்கும் இந்த பங்களாக்களுக்கு, பொதுப்பணித்துறை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒவ்வொரு பங்களாவுக்கு ரூ5 இலட்சம் செலவு செய்வதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கு காட்டுகிறார்கள்.
 
     இந்த செலவுகள் அமைச்சர்கள், நீதிபதிகள் விருப்பத்தின் பேரில், செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் நமக்கு எழுந்தது.
 
     நம் சந்தேகத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அமைச்சர்கள், நீதிபதிகளின் வேண்டுகோளின்படியேதான் நாங்கள் செலவு செய்கிறோம் என்று பதில் அளித்தார்கள்..
 
     ஆனால் வாக்களித்து, அரசியல்வாதிகளை ஆட்சி கட்டிலில் அமரவைக்கும் அப்பாவி மக்கள் இன்னும் ஓட்டை குடிசையில், பிளாட்பாரத்தில்தான் வசிக்கிறார்கள்.
 
     பொதுப்பணித்துறை அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் பங்களாக்களில் பல செலவு செய்ததாக போலியாக பில் போட்டு ஆண்டுக்கு ரூ5 கோடி வரை ஊழல் செய்கிறார்கள் என்ற பொதுவான கருத்து ஏற்பட்டுள்ளது.
 
     தமிழக அரசின் பொதுப்பணியிலிருந்து, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் பெறப்பட்ட உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் குடியிருக்கும் பங்களாவுக்கு செய்த2012-13ம் ஆண்டிற்கான செலவை அப்படி தருகிறோம்.

திரு நீதியரசர் K. சந்துரு(ஒய்வு)…
Committed judiciary  என்றால் கெட்ட வார்த்தை என்று விமர்சனம் செய்கிறார்கள் என்று வெளிப்படையாக பேட்டி அளிக்கும் ஒய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் பங்களாவில் குடியிருந்த செய்யப்பட்ட செலவு…
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 3,89,714
  2. ANNUAL MAINTENANCE             — Rs  2,28,208
  3. WATER CHARGES                          –  RS 37,380
                          TOTAL..                                         –  RS 5,55,302
elipr dhama rao justice     justice jaichandran   justice chitra venkatraman         justice sugana
திரு நீதியரசர் எலிப்பி தர்மராவ்…
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 3,53,960
  2. ANNUAL MAINTENANCE             — Rs  1,76,109
  3. WATER CHARGES                          –  RS 37,380
                      TOTAL..                                    –  RS 5,67,449
நீதிபதி செல்வி சுகுணா…
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 3,89,931
  2. ANNUAL MAINTENANCE             — Rs  1,60,109
  3. WATER CHARGES                          –  RS 37,380
                       TOTAL..                                      –  RS 5,87,420
 
நீதிபதி திருமதி சித்ராவெங்கட்ராமன்…
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 18,275
  2. ANNUAL MAINTENANCE             — Rs  2,58,060
  3. WATER CHARGES                          –  RS 37,380
                         TOTAL..                                      –  RS 3,13,715.
நீதியரசர் திரு ஹரிபரந்தாமன்…
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 8,58,633
  2. ANNUAL MAINTENANCE             — Rs  2,71,549
  3. WATER CHARGES                          –  RS 37,380
                            TOTAL..                                      –  RS 11,67.562.
நீதியரசர் திரு எம்.ஜெயசந்திரன்..
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 4,05,978
  2. ANNUAL MAINTENANCE             – Rs  2,49,601
  3. WATER CHARGES                          –  RS 37,380
                            TOTAL..                                      –  RS 6,92,959.
87efe__5F3C12B18F381A24CEE51CA51D       181272573_c335f28bd2
நீதியரசர் திரு எம்.துரைசாமி…
  1. SPECIAL REPAIR EXPENDITURE – Rs 24,93,511(ரூ24.93 இலட்சம்)
  2. ANNUAL MAINTENANCE             — Rs  2,19,197
  3. WATER CHARGES                          –  RS 37,380
                            TOTAL..                                      –  RS 27,50,088 thanks, makkal seithimaiyam

தொடரும் சிங்கள பேரினவாதத்தின் அடாவடி!


ஜூன் 08: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வேட்டையாடப்படுவது தொடர் கதை ஆகிவிட்டது. மத்திய மாநில அரசுகள் இதுவரை ஒழுங்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை.

ராமேஸ்வரத்தில் இருந்து 5-6-2013 அன்று 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். மதியம் சுமார் 3 மணியளவில், நெடுந்தீவு அருகில் இவர்களில் ஒரு பிரிவினர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்தனர்.

இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சாக்கிட்டு, 5 படகுகளையும், அவற்றில் இருந்த 24 மீனவர்களையும் மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். பின்னர் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை வருகிற 20-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அனுராதபுரம் சிறையில் இவர்கள் இப்போது அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த அதிர்ச்சியில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீளாமல் இருக்கின்ற நிலையில், நேற்றையதினம் 6-6-2013 அன்று கிடைத்த செய்திப்படி, கச்சத்தீவு பகுதியில் ரோந்து கப்பல்களுடன் முகாமிட்டுள்ள இலங்கை கடற்படையினர் மேலும் 25 தமிழக மீனவர்களை சிறைபிடித்து, தங்கள் கப்பலுடன் படகுகளை இணைத்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த 25 மீனவர்கள் யாழ்ப்பாணம் ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜூன் 19-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு, யாழ் சிறையிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 

கைது செய்த 49 மீனவர்களை அன்னியில், அந்தப் பகுதியிலே மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களையும் துப்பாக்கி முனையில் அடித்து விரட்டியிருக்கிறார்கள். இதன் காரணமாக 2 படகுகள் பாறையின் மீது மோதி விபத்திற்குள்ளானதாகவும், படகிலே இருந்த மீனவர் முனியசாமி கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த 49 மீனவர்கள் தவிர, நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் போஸ், பாபு, ரீகன் ஆகிய 3 மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படை போலீசார் சிறை பிடித்திருக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் என்பதால் இவர்களை நிச்சயம் மத்திய அரசு பாதுகாக்காது. எனவே தமிழர்களே தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதே சாலச்சிறந்தது.

*மலர் விழி* thanks, sinthikkavum
 

ஆப்கான் கூட்டுப்படுகொலை:குற்றத்தை ஒப்புக்கொண்ட அமெரிக்க வீரர்!

US soldier confesses of afghan mass killing
 
     வாஷிங்டன்: குழந்தைகள், பெண்கள் உள்பட 16 அப்பாவி ஆப்கானியர்களை அநியாயமாக கூட்டுப்படுகொலைச் செய்த சம்பவத்தில் அமெரிக்க ராணுவ வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். மரணத் தண்டனையில் இருந்து தப்பவே 39 வயதான அமெரிக்க ராணுவ வீரர் ராபர்ட் பெயில்ஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அவனுடைய வழக்குரைஞர் கூறுகிறார். தான் செய்த கொலை பாதகங்களை ஒவ்வொன்றாக விவரித்து வாஷிங்டனில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான் ராபர்ட் பெயில்ஸ்.
 
       கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக மக்களின் மனசாட்சியை அதிரவைக்கும் மனித குலத்திற்கு எதிரான மாபாதக செயலை நிகழ்த்தினான். காந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ மையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வெளியே வந்தான் ராபர்ட் பெயில்ஸ். இரண்டு கிராமங்களைச் சார்ந்த அப்பாவிகளான 16 பேரை இந்த கொடூரன் படுகொலைச் செய்தான். இதில் ஒன்பது குழந்தைகள் ஆவர். இந்த கொடூர சம்பவத்தில் ஆறுபேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.