உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
சென்ற ஆண்டு, சார்லஸ் டார்வினின் "Origin of species" புத்தகம் வெளிவந்து 150 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டும், டார்வின் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டும் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் பிரதிபலிப்பு தான் "தி கார்டியன்" பத்திரிகையின் இந்த தலைப்பு.
பரிணாமம் தொடர்பாக ஆய்வில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளையும் அதற்குண்டான பதில்களையும் இந்த பதிவில் பார்ப்போம். ஆய்வு முடிவுகளை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலே பார்த்த கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு மக்கள் சொன்ன பதில்கள்,
இதற்கு மக்கள் சொன்ன பதில்கள்,
நிச்சயமாக உண்மை - 13%
ஏறக்குறைய உண்மையில்லை - 27%
நிச்சயமாக உண்மையில்லை - 30%
ஆக, சுமார் 57% மக்கள், "பரிணாமம் இறைவனை பொய்பிக்காது, மறுக்காது" என்று நம்புகின்றனர்.
இதற்கு அடுத்து வந்த மக்கள் கருத்து தான் பரிணாமவியலாளர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது.
அப்படி என்ன கேள்வி, அதற்கு அப்படி என்ன பதில் என்று கேட்கின்றீர்களா?....தொடர்ந்து படியுங்கள்.
2) பரிணாமத்திற்கு (Evolution Theory) மாற்றாக கருதப்படும் ஒரு கோட்பாடென்றால் அது
"Intelligent Design" கோட்பாடு.
இந்த உலகில் உயிரினங்கள் தற்செயலாக (Natural Selection + Random Mutation) வர வாய்ப்பில்லை, இவ்வளவு சிக்கலான உடலமைப்பை கொண்ட உயிரினங்கள் இருக்கிறதென்றால், அதற்கு ஒரு அறிவார்ந்த சக்தி (Intelligent Designer) தான் காரணமாய் இருக்க வேண்டுமென்று வாதிடுகின்றது இந்த கோட்பாடு.
டெக்னிகலாக சொல்லுவதென்றால், இந்த பிரபஞ்சம் மற்றும் உயிரினங்களின் குறிப்பிடத்தக்க தன்மைகளை விளக்க இயற்கை தேர்வு (Natural Selection) ஒத்துவராது, ஒரு அறிவார்ந்த சக்தி பின்னணியில் இருக்கின்றது என்ற விளக்கமே சிறந்தது என்று கூறுகின்றது இந்த கோட்பாடு.
The theory of intelligent design holds that certain features of the universe and of living things are best explained by an intelligent cause, not an undirected process such as natural selection. --- Centre for Intelligent Design.
இதனை படைப்பு கோட்பாட்டோடு (Creation Theory) குழப்பிக்கொள்ள கூடாது.
படைப்பு கோட்பாடென்பது, கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்று கூறும் கோட்பாடு. Intelligent Design கோட்பாட்டை பொறுத்தவரை, கடவுள் என்ற வார்த்தையை அது உபயோகிக்காது, புத்திசாலித்தனமான சக்தி என்றே குறிப்பிடும். அது போல குரான், பைபிள் போன்றவற்றை நிரூபிக்கவும் முயலாது.
இதனை பின்பற்றுபவர்களை பொறுத்தவரை, இந்த சிக்கலான உலகம், நிச்சயம் தற்செயலாக வர வாய்ப்பில்லை, இந்த சிக்கலான வடிவமைப்பிற்கு பின்னால் ஒரு "Intelligent Designer" இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இந்த உலகின் உருவாக்கத்திற்கு பின்னால் ஒரு புத்திசாலித்தனமான சக்தி இருக்கிறதென்பதை தர்க்க ரீதியாக நிரூபிக்க முயல்பவர்கள் (Intelligent design logically implies a designer).
இந்த கோட்பாடை அறிவியலாக பரிணாமவியலாளர்கள் ஏற்பதில்லை.
படைப்பு கோட்பாடை அறிவியலாக ஏற்க முடியாததால் Intelligent Design என்ற கோட்பாட்டை கொண்டு வந்து அதற்கு அறிவியல் சாயம் பூசி கடவுள் என்ற conceptடை நிரூபிக்க பார்க்கின்றார்கள் ஆத்திகர்கள் என்பது பரிணாமவியலாளர்களின் குற்றச்சாட்டு.
இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரிக்கின்றார்கள் Intelligent Design கோட்பாடை ஆதரிக்கும் அறிவியலாளர்கள். இந்த கோட்பாட்டை படைப்பு கோட்பாட்டோடு சேர்த்து விட்டால் இதனை எளிதாக முறியடித்து விடலாம் என்று கருதுவதால் தான் பரிணாமவியலாளர்கள் அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் என்று விளக்கம் சொல்கின்றனர் இவர்கள்.
பரிணாமவியலாளர்களுக்கும், Intelligent Design கோட்பாட்டை ஆதரிப்பவர்களுக்கும் இடையே நடக்கும் கருத்து யுத்தம் அறிவியல் உலகம் நன்கு அறிந்த ஒன்று.
சரி, விசயத்திற்கு வருவோம்.
பரிணாமவியலாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அந்த விஷயம் என்னவென்றால், சுமார் 51% பிரிட்டன் மக்கள், "Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மை/ஏறக்குறைய உண்மை என்று சொன்னதுதான்.
"Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மை என்று 14% மக்களும், ஏறக்குறைய உண்மையென்று 37% மக்களும் கருத்து தெரிவித்திருக்கின்றார்கள். "Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மையில்லை என்று 19% மக்களும், ஏறக்குறைய உண்மையில்லை என்று 21% மக்களும் கருத்து தெரித்திருக்கின்றார்கள்.
ஆக, பெரும்பாலான மக்கள் Evolution Theoryயை நம்புவதை விட அதற்கு சவாலாக இருக்கக்கூடிய Intelligent Design Theoryயை நம்புகின்றார்கள். இது பரிணாமவியலாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.
இதுதான் பரிணாமவியலாளர்களுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டார்வின் பிறந்த நாட்டில், அவர் மூலமாக பிரபலமான கோட்பாட்டை பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை.
ஏற்கனவே "Intelligent Design" கோட்பாடை பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த நேரத்தில் இப்படியொரு கருத்து வந்து, எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றினால் டென்ஷன் அடையாமல் வேறு என்ன செய்வர்!!!!
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிச்சர்ட் டாகின்ஸ், பிரிட்டன் மக்களின் அறிவியல் அறியாமை வருத்தப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் பரிணாமவியலாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்றால் அமெரிக்க ஆய்வு முடிவுகளோ பேரதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளன.
ஆம், அமெரிக்க மக்களிடம் கடந்த இருபது வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் பரிணாமத்திற்கு எதிராகவே உள்ளது.
கடந்த ஆண்டு, தனது பரிணாமம் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பிரபல
"Gallup"நிறுவனம், அதற்கு என்ன தெரியுமா தலைப்பு வைத்தது...
"டார்வினின் பிறந்த நாளன்று, பத்தில் நான்கு பேரே பரிணாமத்தை நம்புகின்றார்கள்"....எப்படி இருக்கின்றது தலைப்பு?
மொத்தத்தில், பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்களின் பரிணாமத்திற்கு எதிரான இந்த நிலைப்பாடு பரிணாமவியலாளர்களை திணறடித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், பள்ளிகளில், படைப்பு கோட்பாடையும் (Creation Theory), Intelligent Design கோட்பாட்டையும் சேர்க்க வேண்டுமென்று அதிகரித்து வரும் குரல்களால் பரிணாம உலகம் திக்குமுக்காடுகின்றது.
உதாரணத்திற்கு, பிரிட்டனில், அறிவியல் ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் ஒருவர் படைப்பு கோட்பாட்டை அறிவியல் வகுப்புகளில் பரிணாமத்துடன் சேர்ந்து நடத்த வேண்டுமென்று கூறியிருக்கின்றார்களாம்.
இங்கு நாம் பார்த்த செய்திகள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும். இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு இன்னும் ஆச்சர்யத்தை தரலாம்.
உலகில், படித்த மக்கள் அதிகமுள்ள நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. அங்கு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில்,
சுமார் 28% மக்கள் மட்டுமே பரிணாமத்தை நம்புவதாக தெரியவந்துள்ளது.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, இந்த ஆண்டின் துவக்கத்தில், இஸ்ரேல் கல்வித்துறையின் தலைமை விஞ்ஞானியான கவ்ரியல் அவிடல் (Gavriel Avital) பரிணாமத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி மிகுந்த பரபரப்பை உண்டாக்கினார்.
ஆக, உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேலின் பெரும்பாலான மக்கள் பரிணாமத்திற்கு எதிராகவே உள்ளனர். முஸ்லிம் நாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்ட கோட்பாடாகவே அது கருதப்படுகின்றது.
இவ்வளவுக்கும் என்ன காரணம் என்று பரிணாமவியலாளர்கள் கருதுகின்றார்கள்?....
பதில் எளிதானது தான். பரிணாமம், பள்ளிகளில் சரியான முறையில் கற்பிக்கப்படுவதில்லை என்பது முக்கிய காரணங்களில் ஒன்று.
எது எப்படியோ, பரிணாமவியலாளர்கள் முன் மிகப்பெரிய சவால் இருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்க செய்வானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
Please Note:
Intelligent Design கோட்பாடு குறித்த தகவல்களை தமிழ் படுத்தியதில் சிரமங்கள் இருந்தன. சரியாக மொழி பெயர்த்திருக்கின்றேன் என்றே எண்ணுகின்றேன். என்னுடைய மொழிப்பெயர்ப்பில் தவறு இருப்பதாக கருதும் சகோதரர்கள் சரியான மொழிப்பெயர்ப்பை மறுமொழி வாயிலாக தெரியப்படுத்தவும்.
My sincere thanks to:
1. The Guardian.
2. The Daily Telegraph.
One can download the Rescue Darwin report from:
1.
http://www.comres.co.uk/page1657513.aspx