“ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் தூதர்களை அனுப்பி இருக்கிறோம்। (அத்தூதர்கள் அச்சமுகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள்(ஷைத்தான்களாகிய) தாகூத்துகளிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.” (அந்நஹ்ல்: 36)“உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம்முடைய தூதர்களிடம் அர்ரஹ்மானையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஆக்கியிருந்தோமா? என்று கேட்பீராக!.” (அல்ஜுக்ருஃப்: 45)“எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனைக் கொத்திக்கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை...