Showing posts with label ismail blogger. Show all posts
Showing posts with label ismail blogger. Show all posts

Thursday, December 1, 2011

துபாய் அழைப்பு: நூதன முறையில் மோசடி!


தஞ்சாவூரைச் சேர்ந்தவர் உத்திரபதி. இவரது மகன் ராஜா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயிக்கு வேலை சென்றார். அங்கு அவர் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது தனது குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்திரபதியின் பக்கத்து வீட்டுக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர், துபாயில் இருந்து ராஜா பேசுவதாக கூறினார். அவர் தனது தந்தைக்கு விமானம் மூலம்  விலை உயர்ந்த பல்வேறு பொருட்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், இதற்கான வரி கட்டணமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை மதுரை விமான நிலையத்துக்கு வரும் கணேசன் என்பவரிடம் கொடுக்குமாறு தனது தந்தையிடம் கூறிவிடும்படியும் சொல்லிவிட்டு, இணைப்பைத் துண்டித்து விட்டார்.

இது பற்றி பக்கத்து வீட்டுக்காரர் உத்திரபதியிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துடன் உத்திரபதி மதுரை விமான நிலையத்திற்குச் சென்றார். அங்கு ஒருவர் தன் பெயர் கணேசன் என்று கூறி உத்திரபதியிடம் ரூ.1 லட்சத்து 80ஆயிரத்தைப் பெற்றுக் கொண்டார். அதன்பின் அவர் உத்தரபதியிடம், "சிறிது நேரம் இங்கேயே இருங்கள், உங்கள் மகன் அனுப்பிய பொருட்களுடன் வருகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. அதன்பின்தான், தான் ஏமாற்றப்பட்டதை உத்திரபதி உணர்ந்தார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து பெருங்குடி காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் விமான நிலையத்துக்கு வெளியில் வைத்து முதியவரை நூதன முறையில் ஏமாற்றிய மர்ம நபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Monday, November 7, 2011

லேப்டாப்பில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


கொல்கத்தா : தன்னுடைய லேப்டாப்பில் சார்ஜ் செய்து கொண்டு காதுகளில் ஹெட் போன் பொருத்தி கொண்டு பேசிய நபர் மடிக்கணிணி மூலம் மின்சாரம் பாய்ந்து பலியானர். மடிக்கணிணி மூலம் மின்சாரம் பாய்ந்ததே வாலிபர் பலியானதற்கு காரணம் என்ற காவல்துறையினர் மடிக்கணிணியும் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்பட்ட கார்டும் பகுதி எரிந்து போயுள்ளது.
பலியான 34 வயதான் சயான் செளத்ரி சர்வதேச நிறுவனத்தில் பணியாற்றுகிறவர். சம்பவம் நடந்த அன்று அவரின் மனைவி குழந்தை பெறுவதற்காக தன் தாயார் வீட்டிற்கு சென்றிருந்ததால் செளத்ரி சம்பவம் நிகழ்ந்த போது தனியாகவே இருந்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய காவல்துறை துணை கமிஷனர் பிஸ்வரூப் கோஷ் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே உண்மை காரணத்தை சொல்ல முடியும் என்றாலும் மின்சாரம் மடிக்கணிணி மூலம் பாய்ந்ததே காரணமாக இருக்கும்” என்றார்.
இது குறித்து நிபுணர்கள் கருத்து கூறும் போது “ லேப்டாப் சார்ஜ் செய்து கொண்டிருக்கும் போது ஹெட் போன் மூலம் பேசுவதும் மொபைல் போன்களை சார்ஜ் செய்து கொண்டே பேசுவதும் ஆபத்தானவை. ஷார்ட் சர்க்யூட் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும். அது போல் படுக்கையில் வைத்து உபயோகிப்பதும் சரியான செயல் அல்ல. ஏனென்றால் படுக்கை மிருதுவாக இருப்பதால் காற்று வெளியே செல்வதை தடுத்து விடுகிறது. லேப்டாப்கள் உமிழும் வெப்பத்தை வெளியேற்ற காற்றோட்டம் அவசியம். எனவே அவை சமமான தளத்திலேயே வைக்கப்பட வேண்டும்” என்கின்றனர்.

Saturday, November 5, 2011

அதிரடி அம்மா - ஆறு அமைச்சர்கள் டிஸ்மிஸ்


தமிழக அமைச்சரவையில் இன்று அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புது முக அமைச்சர்கள் 6 பேர் நீக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செந்தமிழன், சண்முகவேலு, உதயகுமார், சண்முக நாதன், புத்தி சந்திரன், சிவபதி ஆகியோர் நீக்கப்பட்ட அமைச்சர்களாவார். இவர்களுக்கு பதில் தாமோதரன், காமராஜ், சுந்தரராஜ், பரஞ்ஜோதி, மூர்த்தி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போன ஜெயலலிதா, ஏற்கனவே இருமுறை அமைச்சர்களை நீக்கியும், சேர்த்து இருக்கிறார். பெரிய அளவில் மாற்றம் செய்து இருப்பது இதுவே முதல் முறை. இதனால் பிற அமைச்சர்களும் பீதியில் இருக்கின்றனர்.

Thursday, November 3, 2011

உயர் குழந்தைகள் மருத்துவமனையாகிறது கருணாநிதி திறந்த அண்ணா நூற்றாண்டு நூலகம்

Anna Centenary Library
சென்னை: கடந்த திமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பார்த்துப் பார்த்துக் கட்டிய, சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் உயர் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அங்குள்ள நூலகம் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு மாற்றப்படும், டிபிஐவளாகம் ஒருங்கிணைந்த அறிவு சார் பூங்காவாக மாற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதி நவீன அண்ணா நூற்றாண்டு நூலகம்

இந்தியாவிலேயே அதி நவீன வசதிகள் கொண்ட முதல் நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் எட்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்தான். 172 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ள இந்த நூலகத்திற்கு ஆகஸ்ட்- 16, 2008 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. மூன்று லட்சத்து 75 ஆயிரம் சதுர அடியில், எட்டுத்தளங்களோடு பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த நூலகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் அண்ணா பிறந்த தினத்தன்று அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.

எட்டுத் தளங்களைக் கொண்ட இந்நூலகத்தில் ஒவ்வொரு தளமும் ‘ஏ’ பிரிவு மற்றும் ‘பி’ பிரிவு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளுகுளு வசதியோடு கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தின் அனைத்துத் தளங்களிலும் சுற்றுச் சூழலுக்கு தீங்குவிளைவிக்காத சி.எஃப்.எல். விளக்குகள் பொறுத்தப்பட்டுளளன. இளநீலநிற, கண்ணாடி சுவர் வழியே சூரிய வெளிச்சம் முழுமையாக கட்டடத்திற்குள்ளே செல்லும் படியாக வடிவமைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘பசுமை கட்டடமாக’ கட்டப்பட்டுள்ளது.

இந்த நூலகக்கட்டடத்தினை தற்போது குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த நூலகம் சென்னை கல்லூரிச்சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் டிபிஐ வளாகம் அறிவுசார் பூங்காவாக மாறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

2011-2012 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சென்னை டி.பி.ஐ. (Directorate of Public Instruction) வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலான முடிவுகள் 1.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து இயக்ககங்கள், பயிற்சி மையம், கூட்டரங்குகள், பள்ளிக் குழந்தைகளுக்கான அறிவுசார் பட்டறைகள், விளையாட்டு வளாகம், கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையம், இங்கு பேஷன் சென்டர் மற்றும் நவீன மைய நூலகம் ஆகியவை இந்த ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா வளாகத்தில் அமையப்பெறும்.

ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமையவிருக்கும் டி.பி.ஐ. வளாகம், கன்னிமாரா மைய நூலகம் மற்றும் தேசிய வைப்பு நூலகத்திற்கு மிக அருகில் உள்ளதால் நவீன மைய நூலகத்தினை அறிவுசார் பூங்காவிலேயே அமைப்பது பொருத்தமாகவும், சிறந்ததாகவும் அமையும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

எனவே, சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அண்ணா நூற்றாண்டு நூலகம் டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட பின், தற்போது கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம், உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி அமைக் கப்படும். குழந்தைகளுக்கான இதுபோன்ற அரசு மருத்துவமனை இந்தியாவிலேயே இதுவரை நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

குழந்தைகள் நலனுக்கென இது போன்ற உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம், குழந்தைகள் நலனை பேணிப் பாதுகாப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்..

Wednesday, November 2, 2011

மலேகான்:முஸ்லிம் இளைஞர்களின் ஜாமீன் மனுவை மத்திய அரசு எதிர்க்காது




malegaon295x200புதுடெல்லி:முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைதுச்செய்யப்பட்டு சிறையில் வாடிவரும் 9 முஸ்லிம் இளைஞர்களின் ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்க்காது என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும், வழங்காவிட்டாலும் மத்திய அரசு தலையிடாது. உள்துறை அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கையை தாக்கல் செய்தபிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கவே ப.சிதம்பரம் இதனை தெரிவித்துள்ளார்.

Tuesday, November 1, 2011

அலிகர் பல்கலை கழக சென்டருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனா


17335-city-imageமும்பை:மஹராஷ்ட்ரா மாநிலத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக சென்டர் நிறுவுவதை எதிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாய நிலம் என்ற பெயரால் சென்டருக்கு நிலம் அனுமதிப்பதை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராமவாசிகள் இதனை எதிர்த்தபொழுதிலும் அவர்களை தூண்டிவிட்டு பின்னணியில் செயல்படுவது சிவசேனா என கூறப்படுகிறது. வடக்கு மஹராஷ்ட்ராவில் மலேகானில் முதன் முதலாக அலிகர் முஸ்லிம் பல்கலை கழக சென்டர் நிறுவ நிலம் தெரிவுச்செய்யப்பட்டது.
அங்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து ஒளரங்காபாத்தில் குல்தாபாதில் நிலம் தெரிவுச்செய்யப்பட்டபோதிலும் அங்கும் எதிர்ப்பு கிளம்பும் என கருதப்படுகிறது.
மலேகானில் கஜவாரே கிராமத்தில் உள்ள நாம்பூரியில் அலிகர் பல்கலைக்கழக கேம்பஸிற்கு நிலம் தெரிவுச்செய்யப்பட்டது. ஆனால் அந்நிலம் விவசாய நிலம் எனவும் அங்கே கட்டிடம் கட்ட அனுமதிக்கமாட்டோம் எனவும் கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.நாஸிக் மாவட்டத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் வெல்ராசு, தொகுதி எம்.பியும் பூஜ்பாலின் உறவினருமான ஸமீர் பூஜ்பால், மாநில சிறுபான்மை கமிஷன் செயலாளர் ஸெய்யத் ஹாஷ்மி ஆகியோருடன் தெரிவுச்செய்த நிலத்தை பார்வையிட வந்த அலிகர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அப்துல் அஸீஸை கிராமவாசிகள் தடுத்ததோடு அவரையும், பல்கலைக்கழக பிரதிநிதிகளையும் நிலத்தை பார்வையிட அனுமதிக்கவில்லை.
இதனால் அவர்கள் திரும்பிச்செல்ல நேர்ந்தது.முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் மோஸம் நதியின் இருபகுதியிலும் முஸ்லிம்களும், ஹிந்துக்களும் வசிக்கின்றனர்.முஸ்லிம்கள் நெசவுத்தொழிலை புரிந்துவருகின்றனர்.
அவர்களுகு நெசவுத்தொழிலுக்கு தேவையான பொருட்களையும், நெசவுச்செய்த ஆடைகளையும் வாங்குவது எதிர் புறம் வசிக்கும் ஹிந்துக்கள் ஆவர். ஹிந்து சமூகம் வசிக்கும் பகுதியில்தான் அலிகர் பல்கலைக்கழக சென்டருக்கு தேர்வுச்செய்யப்பட்ட நிலம் அமைந்துள்ளது.
இப்பகுதி சிவசேனா தலைவரும், அப்பகுதி எம்.எல்.ஏயுமான பாபு பூஸேவின் ஊராகும். கிராமவாசிகளின் எதிர்ப்பின் பின்னணியில் சிவசேனா செயல்படுவதாக மலேகான் முஸ்லிம்கள் கருதுகின்றனர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வாய்ப்பு பட்டியலில் மற்றொரு பகுதியான ஒளரங்காபாத்தில் குல்தாபாத்தை துணைவேந்தரின் தலைமையில் பிரதிநிதிக்குழு பார்வையிட்டது.அங்கேயும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Monday, October 31, 2011

சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட 61 கட்டடங்களுக்கு சீல்

சென்னை, அக்.31: சென்னை, தி.நகர் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

சென்னை தியாகராய நகர் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டங்களை இடிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக ஒரு மாதம் முன்னரே அறிவிப்பும் கொடுத்திருந்தது. எந்த நடவடிக்கையும் இல்லாத சூழ்நிலையில், கடந்த வாரம், சென்னை உயர்நீதிமன்றம் இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை கண்டித்தது.


இந்நிலையில், இன்று காலை 5 மணி முதல் தி.நகர் பகுதியில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில், சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை, ரத்னா ஸ்டோர்ஸின் 3 கடைகள், காதிம்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 61 கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணியை அவர்கள் மேற்கொண்டனர்.

சில கட்டடங்கள் வர்த்தகக் கட்டடங்கள் என்பதால், இரவு தூங்கிக் கொண்டிருந்த பணியாளர்கள் உள்ளிருப்பில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரிகள் அவர்களை வெளியேற்றிய பிறகு சீல் வைக்கும் பணியை மேற்கொண்டனார்.