Monday, November 7, 2011

லேப்டாப்பில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


கொல்கத்தா : தன்னுடைய லேப்டாப்பில் சார்ஜ் செய்து கொண்டு காதுகளில் ஹெட் போன் பொருத்தி கொண்டு பேசிய நபர் மடிக்கணிணி மூலம் மின்சாரம் பாய்ந்து பலியானர். மடிக்கணிணி மூலம் மின்சாரம் பாய்ந்ததே வாலிபர் பலியானதற்கு காரணம் என்ற காவல்துறையினர் மடிக்கணிணியும் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்பட்ட கார்டும் பகுதி எரிந்து போயுள்ளது.
பலியான 34 வயதான் சயான் செளத்ரி சர்வதேச நிறுவனத்தில் பணியாற்றுகிறவர். சம்பவம் நடந்த அன்று அவரின் மனைவி குழந்தை பெறுவதற்காக தன் தாயார் வீட்டிற்கு சென்றிருந்ததால் செளத்ரி சம்பவம் நிகழ்ந்த போது தனியாகவே இருந்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய காவல்துறை துணை கமிஷனர் பிஸ்வரூப் கோஷ் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே உண்மை காரணத்தை சொல்ல முடியும் என்றாலும் மின்சாரம் மடிக்கணிணி மூலம் பாய்ந்ததே காரணமாக இருக்கும்” என்றார்.
இது குறித்து நிபுணர்கள் கருத்து கூறும் போது “ லேப்டாப் சார்ஜ் செய்து கொண்டிருக்கும் போது ஹெட் போன் மூலம் பேசுவதும் மொபைல் போன்களை சார்ஜ் செய்து கொண்டே பேசுவதும் ஆபத்தானவை. ஷார்ட் சர்க்யூட் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும். அது போல் படுக்கையில் வைத்து உபயோகிப்பதும் சரியான செயல் அல்ல. ஏனென்றால் படுக்கை மிருதுவாக இருப்பதால் காற்று வெளியே செல்வதை தடுத்து விடுகிறது. லேப்டாப்கள் உமிழும் வெப்பத்தை வெளியேற்ற காற்றோட்டம் அவசியம். எனவே அவை சமமான தளத்திலேயே வைக்கப்பட வேண்டும்” என்கின்றனர்.

0 comments:

Post a Comment