Tuesday, January 25, 2011

இந்திய மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் முகம்மது அலி ஜின்னா - ஜஸ்வந்த் சிங்


ந்திய மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் முகம்மது அலி ஜின்னா என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி வீரர், பாகிஸ்தானை நிர்மாணித்தவர், அந்நாட்டின் தந்தை என்று பல பெருமைகளை பெற்றவர் மறைந்த ஜின்னா.

ஜஸ்வந்த் சிங் எழுதியுள்ள ஜின்னா-சுதந்திர இந்தியா பிரிவினை என்ற நூல், தில்லியில் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த நேர்காணலின் போது கூறியதாவது:

மகாத்மா காந்தியால் உயர்ந்த மனிதர் என்று பாராட்டப்பட்டவர் ஜின்னா. அவர் மிகுந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர். சுதந்திர இந்தியாவை பிரிவினைப்படுத்தியவர் ஜின்னா என்ற தவறான கருத்துகள் இன்னமும் இருக்கின்றன.. அதைப் போலவே இந்துக்களுக்கு அவர் எதிரானவர் என்ற தவறான எண்ணமும் உள்ளது. அவர் மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். மிகச் சிறந்த இந்தியர். சுதந்திரத்தின்போது மைய அதிகார முறையை கொண்டு வர நேரு முயற்சித்தார். ஆனால், கூட்டாட்சி முறை வேண்டும் என ஜின்னா விரும்பினார். இதை காந்தியும் விரும்பினார். ஆனால், நேரு இவற்றை ஏற்கவில்லை.

இதனால் பிரிவினை கோரினார் ஜின்னா. பிரிவினையை அவர் கோரினாலும் மகாத்மா காந்தி, ராஜாஜி, மெளலானா அபுல்கலாம் ஆசாத் போன்ற தலைவர்களால் நிறைவாக முடிவு செய்யப்பட்டே பிரிவினை அளிக்கப்பட்டது.

பிரிவினையின்போது இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் அன்னியர்களாக பார்க்கப்பட்டனர். அவர்கள் மிகுந்த மன வலியுடன் இதை தாங்கி கொண்டனர். இருப்பினும், இந்தியாவின் ஒற்றுமைக்காக அவர்கள் குறிப்பிடும்படியாக செயல்பட்டனர் என்றார்.

"ஜின்னா பற்றிய கருத்துகள் என்னுடைய சொந்த கருத்துகள் தான். கட்சியின் கருத்து அல்ல. ஜின்னாவை பற்றிய நூலை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நான் எழுதவில்லை.. இந்தியனாக இருந்தே எழுதியுள்ளேன். இது எனது கட்சியின் ஆவணமல்ல.

நான் இவ்வாறு புத்தகம் வெளியிடுவது கட்சிக்கு தெரியும்' என்றார் ஜஸ்வந்த் சிங்.

ஜின்னா விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி ஏற்கெனவே சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.


எழுத்துதான் உலகத்தின் மிகப்பெரிய ஆயுதம் என்பதை ஜஸ்வந்த்சிங் மீது பா.ஜ.க. எடுத்திருக்கும் நடவடிக்கை மீண்டும் உணர்த்துகிறது. இந்திய வரலாறு இது வரையில் சரியான முறையில் மூன்று முக்கிய அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை, 1935 முதல் 1948 வரையில் உள்ள காலகட்டத்தை இவர்கள் பார்த்தவிதம், எடுத்து வைத்த அரசியல் வாதங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த மூன்று முக்கிய தலைவர்கள் :தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா ஆகியோர்.

அரசியல் என்பது சாமானிய மக்களுக்கு அதிகாரம் தருவதாக இருக்க வேண்டும். மேலாதிக்கம் என்பதை எதிர்க்க உதவும் ஒரு கருவிதான் அரசியல். மதம், சாதி மற்றும் மொழியின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள்தான் இவர்கள். ஆனால் இன்று இந்த மூன்று முக்கிய தலைவர்களின் அரசியல் பங்களிப்பு மிகவும் சுருங்கிய பார்வையில் அடைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் வெறும் தமிழகத் தலைவராக மட்டும் அகில இந்திய அளவில் பார்க்கப் படுகிறார். அம்பேத்கரை வெறும் ஒரு தலித் தலைவராக சுருக்கும் முயற்சியில் மேலாதிக்கவாதிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஜின்னாவின் நிலை இன்னும் மோசம். இவரை ஒரு பிரிவினைவாதி, பாகிஸ்தானை உருவாக்க இந்தியாவை துண்டாக்கியவர், ஒரு முஸ்லிம் மதவாதி என்று இந்திய இந்து வலதுசாரிகள் சித்தரிக்க, அந்த பிம்பம்தான் பொதுவான தளத்தில் மக்களின் கற்பனையை கவர்ந்துள்ளது.

இந்த நிலையை குறுகிய அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முடியும். ஆனால், பரந்த அரசியல் புரிதலுக்கு இதுபோன்ற வறட்டு வாதங்கள் உதவாது. ஜின்னாவைப் பற்றி நம்முடைய பார்வையை மீள் ஆய்வுக்கு உட்படுத்த உதவியிருக்கும் ஜஸ்வந்த்சிங்குக்கும், அவரை கட்சியை விட்டு நீக்கிய பா.ஜ.க. தலைமைக்கும் நாம் ஒருவிதத்தில் கடமைப்பட்டுள்ளோம்.

ஜின்னாவின் அரசியலைப் புரிந்துகொள்ளுவதற்கு முன் அவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தை அறிந்துகொள்வது அவசியம். 25-12-1876 அன்று கராச்சி நகரில் மித்திபாய் மற்றும் ஜின்னாபாய் பூஞ்சா என்கிற செல்வந்தருக்கும் முதல் மகனாய் ஜின்னா பிறந்தார். அவரது தாய்மொழி குஜராத்தி. கராச்சியிலும் மும்பையிலும் பள்ளிக் கல்வி கற்ற ஜின்னா, சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார். தன்னுடைய 19-வது வயதில் மிக குறைந்த வயதுடைய வழக்கறிஞராக இங்கிலாந்து நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டார்.

அரசியல் ரீதியாக இங்கிலாந்தில் அப்போது பிரபலமாக இருந்த வில்லியம் களாட்ஸ்டோனின் "லிப்ரல் பார்வையால்' கவரப்பட்டு, முற்போக்கு கொள்கைகளும் ஜனநாயக மரபுகள் மீதும் அதிக நம்பிக்கை வைத்தார். 1900-ல் இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தாதாபாய் நௌரோஜியின் வெற்றிக்கு பாடுபட்டவர்களில் மிகவும் முக்கியமானவர் ஜின்னாதான்.

நவீனத்துவம் என்பது மதவாதிகளின் கைகளில் சிக்கி, வளர்ச்சிக்கு எதிராகப் போய்விடக்கூடாது என் பதில் மிகவும் அக்கறை கொண்ட ஜின்னா நவீனத் துவத்தின் ஒரு அடையாளமாக எப்பொழுதும் கோட் மற்றும் சூட்தான் அணிந்து காட்சியளித்தார். முஸ்லிம் மதவாதிகள் சிலர் அந்த காலத்து உடை விஷயத்தில் குறிப்பாக பெண்கள் உடை விஷயத்தில் கடைபிடித்த பிற்போக்கான நிலையை தன்னுடைய எழுத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னுடைய மனைவி மற்றும் சகோதரிகளின் ஆடை அணியும் முறையிலும் கட்டுபெட்டித் தனத்தை எதிர்த்து செயல்பட்டவர்தான் ஜின்னா.

1902-ல் குடும்ப வியாபாரத்தை கவனிக்க இந்தியா திரும்பிய ஜின்னா, மும்பையில் ஒரே ஒரு ஆண்டுதான் வியாபாரத்தில் ஈடுபட்டார். 1903 முதல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செயல்பட ஆரம்பித்தார். இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் பிரபல வக்கீல்களில் அவரும் ஒருவர் என்கிற புகழைப் பெற்றார்.

1905-ல் பாலகங்காதர திலகர் மீது தேசகுற்றம் சுமத்தி ஆங்கில அரசு கைது செய்தபோது, திலகரின் சார்பாக வாதிட்டவர் ஜின்னாதான். அவருடைய வாதங்கள்: "சுதந்திரம் கேட்பது பிறப்புரிமை, தேச குற்றமல்ல. சுயஆட்சி என்பதுதான் முறையே அன்றி அந்நிய ஆட்சி அல்ல'' -இந்த வாதங்களே பின்னாளில் இந்திய சுதந்திர வேட்கையை வழிநடத்திச் செல்ல உதவிய வாதங்கள்.

கோபாலகிருஷ்ண கோகலே, பிரோஷா மேத்தா மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோரின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்ட IMPERIAL LEGISLATIVE COUNCIL உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்னா, குழந்தை திருமண தடை சட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். முஸ்லிம் மக்களுக்கு வஃக்ப் வாரியத்தை உரு வாக்கினார். பின்னர் SANDHURST COMMITEE-யில் உறுப்பினராகச் சேர்ந்து இந்தியாவின் முதல் ராணுவப் பயிற்சிக் கல்லூரியான INDIAN MILITARY ACADEMYஐ டேராடூன் நகரில் உருவாக்கியதும் ஜின்னாதான்.

1906-ல் அகில இந்திய முஸ்லிம் லீக் உருவானபோது அதில் சேர முடியாது என்று அறிவித்த ஜின்னா, அரவணைத்துச் செல்லும் அரசியலுக்கு மத அடிப்படையில் கட்சி அமைத்தது எதிரான செயல் என்று நம்பினார். ஆனால் 1905-ல் வங்க மாகாணத்தை பிரித்தவுடன் ஏற்பட்ட இந்து மேல்ஜாதிஅமைப்பினரின் வகுப்புவாதம் அவரை மிகவும் வாட்டியது. விளைவு... 1913-ல் முஸ்லிம் லீக்கில் ஜின்னாவே சேர்ந்தார். 1916-ல் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியும் லீக்கும் அந்த ஆண்டே ஒரு ஒப்பந்தத்தை போட்டு, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு பொது நிலையை எடுக்க உதவி செய்தார். 1918-ல் ரத்தன்பாய் பெட்டிட் என்கிற பார்சி பெண்ணை திருமணம் செய்துகொண்ட போது, முஸ்லிம் தலைவர்களும், பார்சி தலைவர்களும் ஒன்றாக இந்த கலப்புத் திருமணத்தை எதிர்த்தனர். 1919-ல் இந்த தம்பதிகளுக்கு பிறந்த ஒரே ஒரு குழந்தை டினா ஜின்னா. இந்த டினா ஜின்னாவின் மூத்த மகன்தான் பாம்பே டையிங் கம்பெனியின் இன்றைய தலைவர் நுஸ்லி வாடியா.

1924 முதல் முஸ்லிம் லீக்கை முழுவதும் சீராக்கி, இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க ஏழு ஆண்டுகள் பாடுபட்டார். "இந்திய விடுதலைக்கு இந்திய-முஸ்லிம் ஒற்றுமையே அடிப்படை காரணமாக இருக்க முடியும் என்பதை திரும்பத் திரும்ப கூறுகின்றேன். இதற்கு எதிரான நிலையை யாரும் எடுத்தால் அவர்களை முஸ்லிம் மக்களின் விரோதி என்று அழைக்கத் தயங்கமாட்டேன்'' என்று லாகூர் நகரில் பிரகடனப்படுத்தியவர்தான் ஜின்னா. 28-3-1929-ல் தன்னுடைய புகழ்பெற்ற 14 அம்ச அறிக்கையை ஜின்னா வெளியிட்டார். இந்த அறிக்கை இந்து-முஸ்லிம் உறவுகளை மேம்படுத்தி பரந்த அதிகார பரவலாக்கலை உருவாக்கும் என்று ஜின்னா நம்பினார். ஆனால், இந்த நம்பிக்கை எடுபடாமல் போய்விட்டது என்பதே உண்மை.

எப்படி காங்கிரசுடன் எந்த உறவும் வைக்க முடியாது என்ற முடிவுக்கு 1920-களில் பெரியார் வந்தாரோ, அதேபோல் ஒரு முடிவுக்கு ஜின்னா 1929 முதல் தள்ளப்பட்டார் என்பதே வரலாற்று உண்மை. மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரம் -குறிப்பாக ஸ்டாலின் தலைமையில் சோவியத் நாடுகளில் ஏற்பட்ட அதிகார கட்டமைப்பு மத்தியில் இருக்கும் முறையை- நேரு அவர்களும், பட்டேல் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் என்பது உண்மை.

1927 சைமன் கமிஷன் முன்பு முஸ்லிம் மக்களுக்கு தனி வாக்கு தொகுதிகள் வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தபோது, அதை நேரு நிராகரித்தார்.

தொடர்ந்து வட்டமேஜை மாநாடுகள் தோல்வியடைய, 1936-ல் இந்தியா திரும்பிய ஜின்னா, தேர்தலில் போட்டியிட்டு முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளை பெற முடிவு செய்தார். அந்தத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் லீக் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ்தான் பெருவாரியான இடங்களைப் பெற்றது. இந்த நிலையில் லீக்கும், காங்கிரசும் இணைந்து செயல்படுவது சீக்கிரம் சுதந்திரத்தை அடைய வழிவகுக்கும் என்று கருதிய ஜின்னா, இதற்காக அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராஜேந்திரபிரசாத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தினார். இந்த முயற்சிக்கு எதிராக செயல்பட்ட பல காங்கிரஸ் தலைவர்கள், 1938-ல் காங்கிரஸ் மற்றும் லீக்குக்கு இடையிலான பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்ததாக அறிவித்தனர். இதுவே பாகிஸ்தான் என்கிற கோஷம் உருவாக காரணமாக அமைந்த விஷயம். 1940-க்கு முன்பு பாகிஸ்தான் என்று ஒரு சொல்லே அகராதியில் கிடையாது. 1940-ல் லாகூர் நகரில் நடைபெற்ற லீக் மாநாட்டில்தான் இந்த சொல் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

சிறுபான்மையினர் உரிமை என்கிற அடிப்படையில் உருவான இந்த கருத்தாக்கம் பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. TWO NATION THEORY என்று பல்வேறு பரிமாணங்கள் உடைய இந்தியாவை இந்து-முஸ்லிம் என்று இரு தேசிய அடையாளமாக சுருக்கியதுதான் ஜின்னாவின் மிகப்பெரிய பலவீனம். மதத்தின் அடிப்படையில் உருவான பாகிஸ்தான், 1971-ல் மொழியின் அடிப்படையில் பாகிஸ்தான்-பங்களாதேஷ் என்ற பிரிவு TWO NATION THEORY என்பதின் தவறான புரிதலின் வெளிப்பாடு ஆகும்.

மதத்தின் அடிப்படையில் தேசியத்தை கட்டமைக்காமல் சிறுபான்மையினர் என்கிற முறையில் ஜின்னா தன்னுடைய அரசியலை நடத்தியிருந்தால் இன்றைய உலக அரசியல் வேறு ஒரு அழகிய பரிமாணத்தைப் பெற்றிருக்க முடியும். இதை அவர் செயல்படுத்த முடியாமல் போனதற்கு அவரே ஒரு காரணம் என்றாலும், காங்கிரஸ் கட்சியின் ""மத்தியில் அதிகார குவிப்பு'' என்கிற நிலைதான் ஊற்றுக்கண் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்பதைத்தான் ஜஸ்வந்த்சிங்கின் நூல் எடுத்துரைக்கிறது.

அதற்காக அவர் கொடுத் திருக்கும் விலை தான் உருவாக்கிய கட்சியிலிருந்து நீக்கப்படும் நிலை. இது ஒன்றும் பெரிதல்ல என்றே நாளைய வரலாறு தீர்மானிக்கும்.

-நன்றி நக்கீரன்

Saturday, January 22, 2011

கமல்ஹாசனுக்குப் பகிரங்கக் கடிதம் மன்மதன் அம்பும், மதிகெட்ட வம்பும்!!!


அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு,

தங்கள் மீது, ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழியப்படவும், தாங்கள் நேர்வழி பெறவும், பிரார்த்தித்துக் கொள்கிறோம்.(மாற்றுக் கருத்துடையோர்க்கும் பிரார்த்திப்பது எங்கள் மரபு) வாசிப்பு வாசனையற்ற எத்தனையோ திரைக்கூத்தாடிகளுக்கிடையே, ஆழமான வாசிப்பாளராக, மனிதநேயராக, மதமாச்சரியம் அற்றவராக, சாதி கடந்தவராக, தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறீர்கள். சினிமா, என்ற சக்திவாய்ந்த ஊடகத்தின் உச்சத்தில் இருக்கும் தாங்கள், சிதைக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, வாழ்வுரிமையே கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் ஒரு சிறுபான்மை சமுதாயத்தை மேலும், சிதைப்பதிலும், சீண்டுவதிலுமா உங்கள் கலைஞநானத்தையும், ஆற்றலையும் காட்ட வேண்டும்.



முஸ்லிம்கள் மீதான ஊடக வன்முறையின் உச்சகட்டமாக, உங்களது ‘உன்னைப்போல் ஒருவன்’ படம் அமைந்தது. தங்களை நேரில் சந்தித்து எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். சுமார் ஒரு மணிநேரம் நான் முஸ்லிம் எதிர்ப்பாளன் அல்ல என்று விளக்கினீர்கள்

‘கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த நன்றொன்று உள்ளக் கெடும்‘ (கொல்கிற அளவுக்குக் கொடுமை செய்தவரானாலும், அவர் செய்த ஒரு நன்மையை நினைத்துப் பார்த்து, மன்னிக்க வேண்டும், மறக்க வேண்டும், என்பார் வள்ளுவர்.)

‘உன்னைப்போல் ஒருவன்’ எங்களைக் காயப்படுத்திய படம் என்பது தான் இப்போதும் எங்கள் நிலை. ஆனால், பாபரி மஸ்ஜித் இடிப்பு நேரத்தில், மனிதநேயத்தோடு தாங்கள் வெளிப்படுத்திய கருத்துகளையும், மும்பை கலவரத்தின்போது அன்றைய பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து துணிவோடு குற்றம் சாட்டியதையும், நாங்கள் நினைத்துப் பார்த்தோம், நீங்களும் அதை நினைவூட்டினீர்கள்.

இப்போது, முதல்வர் கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் ‘மன்மதன் அம்பு’ வந்துள்ளது. உங்கள் அம்பு சரியாகவே பாய்ந்துள்ளது. அது தந்த வலிகளே இந்தக் கடிதம்..

‘அம்பு’ படத்தில் வாகன விபத்தில் இறந்துபோன உங்கள் முதல்மனைவி (ஜுலியட்) பற்றி, கதாநாயகியிடம் சொல்லும்போது, காஷ்மீரில் ‘லஷ்கர் இ தொய்பா’ பயங்கரவாதிகள் அந்தப் பெண்ணைக் கடத்தி வைத்திருந்ததாகவும், அவரை மீட்பதற்கு ராணுவ மேஜரான நீங்கள் இரண்டு வீரர்களை பலி கொடுத்ததாகவும் கூறுகிறீர்கள்.

என்ன சொல்ல வருகிறீர்கள் கமல்?

காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் வெளிநாட்டிலிருந்து அழகான பெண் வந்தால் கடத்தி வைத்துக் கொள்வார்கள். பெண்களைப் பெரிதும் மதித்து, துதித்துப் பெண்ணியம் போற்றும் (?) நமது பாதுகாப்புப் படையினர் கடத்தப்பட்டப் பெண்ணை உயிரைப் பணயம் வைத்து மீட்பார்கள்? என்று தானே சொல்ல வருகிறீர்கள்.

உங்கள் மீட்பர்களின் லட்சணத்தை உண்மை யிலேயே அறிந்துள்ளீர்களா? கமல்.

பேரா.அ.மார்க்ஸ், எழுதியுள்ள ‘காஷ்மீர் என்னதான் நடக்கிறது அங்கே, என்ற நூலைப் படியுங்கள்.

நட்சத்திர விடுதியில் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு எழுதப்பட்ட எழுத்தல்ல அது, திகிலூட்டப்பட்ட காஷ்மீருக்கு, உண்மை அறியும் குழுவோடு நேரில் சென்று பார்த்த உண்மைகள் அவை.

காஷ்மீரில் தொடரும் துயரம் என்ற நூலையும் படியுங்கள்.

அருந்ததிராய், பேரா.கீலானி உள்ளிட்ட மனிதஉரிமைப் போராளிகளின் காஷ்மீர் குறித்த கருத்துகளை வாசியுங்கள்.

‘காஷ்மீரில் ஷோபியான் என்ற இடத்தில் முஸ்லிம் இளம்பெண்களை உங்கள் மீட்பர்கள் பாலியல் வன்மம் செய்து கொன்ற செய்தி எல்லா ஏடுகளிலும் தொடர்ந்து வெளிவந்ததே...

கலைஞானி அவர்களே.. கண்ணுறவில்லையா?

காஷ்மீரில், குறைந்தபட்சத் தண்டனையே மரண தண்டனைதான் என்பதையும், காஷ்மீரியாகப் பிறந்துவிட்டால், வாழ்க்கையே ஒரு தண்டனைதான் என்பதையும், இதற்கெல்லாம் காரணம் அந்த மீட்பர்கள் என்பதையும் அறியாமலா இருக்கிறீர்கள்? நிச்சயமாக அறியாமல் இருக்க மாட்டீர்கள் பிறகு ஏன்.?

லஷ்கர் இ தொய்பாவை திட்டினால் உங்களுக்கேன் வருத்தம்? என்று நீங்கள் கேட்கலாம். பாகிஸ்தான் என்ற நாசகர ஆக்ரமிப்பு சக்தியின் ஆதரவோடு காஷ்மீரில் இயங்கும் எந்த இயக்கத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். அதே நேரத்தில், தங்களது வாக்களிக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடிவரும் காஷ்மீரிகளை கொச்சைப்படுத்தவும் மாட்டோம்.

காஷ்மீரி என்றாலே அவன் ‘லஷ்கர் இ தொய்பா’வைச் சேர்ந்தவன் என்று முத்திரைக் குத்திதான் ‘மீட்பர்களின் துப்பாக்கிகள்’ அந்த அப்பாவியைப் பலியிடுகின்றன. காஷ்மீர்ப் பெண்களை அன்றாடம் சூறையாடுகின்றன.

காஷ்மீரிகளின் வீடுகளை இடித்துத் தகர்க்கின்றன. சந்தேகத்தின் பேரில் சிறுவர்களையும் கொன்று குவிக்கின்றன.

காஷ்மீரிகளை, இந்த மீட்பர்கள் பொது இடங்களின் வைத்து பெண்களைப் பாலியல் வன்முறை செய்தாலும், அப்பாவிகளைப் படுகொலையே செய்தாலும் யாரும் கேட்க முடியாது.

மீட்பர்களை இப்படி ரட்சிக்கிறது ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டம். மாநில அரசு கூட இந்த சீருடைப் பயங்கர வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தான் நடவடிக்கை எடுக்க முடியும். சீருடைக் கொடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை. 2009ம் ஆண்டு மட்டும் 350 முறை காஷ்மீர் மாநில அரசால் அனுமதி கேட்கப்பட்டு மத்திய அரசால் மறுக்கப்பட்டுள்ளது. இந்த அவலங்களையெல்லாம், சக்திவாய்ந்த ஊடகத்தின் சகலகலா வல்லவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஃபாரன்ஹீட் 9/11 போன்ற படம் எடுக்கும் கலைஞர்களும், ஹிட்லரையே மிரளவைத்த திரைக்கலைஞர் சார்ளி சாப்ளினும் தமிழகத்தில் இல்லையே...

மத்திய அமைச்சராக இருந்த முப்தி முகமது சயீதின் மகள் கடத்தப்பட்டதைப் பின்புலமாகக் கொண்டு உங்கள் மருமகன் மணிரத்னம் ‘ரோஜா’ படம் எடுத்தார். காஷ்மீரிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பொதுப் புத்தியில் பதிய வைத்தார்.

அன்றாடம் நூற்றுக்கணக்கான காஷ்மீர் இளம் பெண்கள் பாதுகாப்புப் படையால் கடத்தப்பட்டு, சிதைக்கப்படுகிறார்களே உங்கள வர்கள் அதைப்படமாக எடுத்த துண்டா?

நீங்கள் கறுப்பு சட்டைக்காரராகவும், இருக்கிறீர்கள், சமயத்தில் சிவப்புச் சிந்தனையும் பேசுகிறீர்கள். கறுப்பு, சிவப்போடு சேர்ந்தும், காட்சி தருகிறீர்கள், படமும் தருகிறீர்கள்.

யாரும் விரும்பிய வண்ணத்தை எங்கள் மீது பூசுவதற்கு வசதியாக நாங்கள் வெள்ளையாக, வெள்ளந்தியாக நிற்கிறோம்.

குடிபோதையின் உச்சத்தில் மகன் அம்மாவுக்கு தொலைபேசி.. நீங்கள் ஜீனியஸ், நாஸ்ட்ரா டாமஸ், கருநாக்கு தேவதை என்கிறான். அதற்கு அம்மா, “பார்ல இருக்கியா, போறுண்டா சாப்டது, வீசிங் வந்துரும், ஆத்துக்கு வந்துடு” என்கிறார்.

சிவப்புச் சிந்தனையாளரான மாவோ, சீனாவில் செய்தது கலாச்சாரப்புரட்சி, அன்பே சிவம் படத்தில் காம்ரேடாக ‘சிவப்புச் சிந்தனை’ பேசிய நீங்கள் ஒரு புதிய கலாச்சார புரட்சியைத் தமிழகத்தில் விதைக்கிறீர்கள்...

‘கட்டிக்கப் போறவனுக்குக் கடுக்காக் கொடுக்கும் பெண்களால்தான், சுனாமி, பூகம்பம், சூறாவளியெல்லாம், வருதுன்னு, இரான் நாட்டு இமாம் சொன்னதாக, உங்கள் குடிகாரக் கதாநாயகன் பேசுகிறார், ‘இதையே தான் எங்க அம்மாவும் சொன்னாங்க” என்கிறான் நண்பன், ‘உங்க அம்மா இமாமா? என்கிறார் கு.கா. ஹீரோ....

இரான் நாட்டு எந்த இமாம் இப்படி சொன்னார் என்பது கதை வசனம் எழுதிய கலைஞானிக்கே வெளிச்சம். இரான் நாட்டு இமாம் அல்ல, ஈஞ்சம்பாக்கத்து இமாமைக் கேட்டால் கூட ‘குடிப்பழக்கம் தான் பாவங்களின் ஊற்றுக்கண்” என்பார்.

இரான் நாட்டு இமாமின் கருத்தையெல்லாம் கவனித்து எழுதிய கலைஞானி(?)க்கு காஷ்மீர் மக்களின் கண்ணீரையும், கதறலையும், கண்டு கொள்ள முடியவில்லை என்பதுதான் வேதனை.

உங்களிடம் மானுடநேயத்தை விட ராணுவ நேயம் விஞ்சி நிற்கிறது. ஜெய்ஹிந்த் கொலைகாரத் துப்பாக்கிகள் நடத்துகிற ஷுட்டிங்காக இருந்தாலும், கலைகாரக் கேமராக்கள் நடத்துகிற ஷுட்டிங்காக இருந்தா லும், விளைவு என்னவோ ஒரே மாதிரிதான் இருக்கிறது...

-ஹாஜாகனி

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிய உச்ச நீதிமன்ற நீதிபதி



மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவன் சலீம் பத்தாம் வகுப்பு படிக்கும் இவன் இஸ்லாமிய முறைப்படி தாடி வைத்து பள்ளிக்கு சென்றான். நிர்மலா கான்வென்ட் என்ற இவனது பள்ளிக்கூட நிர்வாகம் கிருஸ்துவ நிறுவனத்தால் நடத்தப்படுவது. எனினும் சலீம் தாடி வைத்து கொண்டு வர பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை அடுத்து மத்திய பிரதேசத்தின் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தான் சலீம். ஆனால் உயர் நீதி மன்றமும் சலீமுக்கு அரசியல் சாசனம் வழங்கிய சட்ட உரிமைகளை அளிக்க தயாராக இல்லை. மத்திய பிரதேசத்தில் சங்க பரிவாரின் அரசியல் பிரிவான பிஜேபி தான் கடந்த 2004 லிருந்து ஆட்சியில் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. இதனால் நீதி கேட்டு உச்சநீதி மன்றத்தை அணுகினான் சலீம். சலீமுக்காக முன்னாள் நீதிபதியும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பி.எ.கான் ஆஜரானார்.இவ்வழக்கு நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு (முன்னாள் சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி) மற்றும் ஆர்.வீ. ரவீந்தரன் அடங்கிய பெஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது, நாடே இவ்வழக்கை ஆவலோடு பார்த்தது. ஆனால் வழக்கு விசாரணையின் போது நீதிபதி கட்ஜு கூறிய விமர்சனங்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையே கொந்தளிக்க வைத்தது.முஸ்லீம்கள் தாடி வைப்பதை தலீபாநிசம் என்று கூறிய நீதிபதி தலீபாநிசத்தை நாட்டில் அனுமதிக்க முடியாது என்றார். இன்று தாடி வைக்க அனுமதி அளித்தால் நாளை முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்துதான் பள்ளி கூடம் செல் வேன் என்பார்கள் இதை அனுமதிக்க முடியாது என்றார்.மேலும் வழக்கையும் தள்ளுபடி செய்தார்.

இந்திய நாட்டின் சாதரண பாமரனும் கூற தயங்கும் ஒரு விமரிசனத்தை உச்சநீதிமன்ற நீதிபதியே வைத்தது முஸ்லீம் சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சி அலையை தோற்றுவித்தது.நாட்டில் உள்ள முஸ்லீம் சமுதாய அமைப்புகளும் சிறுபான்மை நலனில் அக்கறை கொண்டோரும் நீதிபதியின் கருத்தை வன்மையாக கண்டித்தனர். இந்நாட்டில் வாழும் மொழி மற்றும் மத சிறுபான்மை மக்கள் தங்கள் மொழியையும் மத கலாச்சாரத்தையும் பின்பற்றவும் பாதுகாக்கவும் பரப்பவும் உரிமை உள்ளவர்கள். இந்திய அரசியல் சாசன பிரிவுகள் இதை தெளிவாக கூறுகின்றன.


நாட்டில் வசிக்கும் சீக்கிய சிறுபான்மை மக்கள் இந்த நூற்றாண்டிலும் இடுப்பில் கத்தியை வைத்து கொண்டு பொது இடங்களில் நடமாடவும் தாடி வைக்கவும் தலைப்பாகை அணியவும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் இதே பிரிவுகளின் கீழ்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தாடியும் டர்பனும் அணிந்த சீக்கியர்கள் காவல்துறையில்.ஏன் ராணுவத்தில் கூட பணியாற்றுகின்றனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க் கூட தாடியும் டர்பனும் வைத்து கொண்டுதான் பணியாற்றுகின்றார். அவரை தலீபான்களின் பிரதிநிதி என்று நீதிபதி கூறுவாரா? தாடியை வைத்து கொண்டுதான் மன்மோகன் சிங் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் படித்தார். இன்றும் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் முஸ்லீம்களின் அலீகர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா போன்ற புகழ் பெற்ற பல்கலை கழகங் களில் படிக்கின்றனர்.சீக்கியர்களின் மத உரிமைக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் ஏன் முஸ்லிம் களுக்கு அளிக்கவில்லை. சட்டம் அளித்தாலும் அதை பாதுகாத்து செயல் படுத்த வேண்டிய நீதி மன்றமும் நீதிபதிகளும் ஏன் அளிக்க மறுக்கின்றனர்? என்பதை முஸ்லிம்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.இதனால் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றன.உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கும் தொடரப்பட்டது.

மேலும், அகில இந்திய முஸ்லிம் பர்சனல் லா போர்டின் செயலாளர் மௌலானா முஹம்மது வலி ரஹ்மானி அவர்கள் தலைமையில் ஒரு குழு ஜூன் 24 அன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை சந்தித்து நீதிபதியின் விமர்சனம் குறித்து உரையாடியது. (மன்மோகன் அவர்கள் சீக்கிய மக்கள் தாடி டர்பனுக்கு வைப்பதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்த பிரான்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத் தக்கது.) மேலும் இக்குழு மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மௌலியையும் சந்தித்தது.

இந்நிலையில் உச்ச நீதி மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் தன்னு டைய விமர்சனத்துக்கு மன்னிப்பு கோரிய தோடு மார்ச் 30 அன்று வழங்கிய தீர்ப்பையும் வாபஸ் வாங்கி கொண்ட தோடு, இவ் வழக்கை வேறு ஒரு நீதிபதி புதிய வழக்காக விசாரிக்க வும் கேட்டுக் கொண்டுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனது தீர்ப்புக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. 1979ல் ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தெரிவித்த கருத்துக்கள் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமுதாயத்தையும் கொந்தளிக்க வைத்தது. அப்போதும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் பிரச்சினையை கையிலெடுத்து போராடியது. அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு கண்டது. இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கேட்கும் அளவுக்கு முஸ்லிம்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக அமைந்தன. இதே போன்று முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து பிரச்சினைகளிலும் ஒன்று பட்டு போராடினால் வெற்றி நிச்சயம்.

Wednesday, January 19, 2011

பொறியாளர்களைப் போல் கூடு கட்டும் சிறிய பறவைகள்.


மரக்கிளைகளிலோகட்டிடங்களிலோசிலவேளைகளில் உங்களது வீட்டுப் பால்கனியின் மூலையிலோ சிறிய பறவைகள் கூடுகள் கட்டியிருப்பதை நிச்சயமாக நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இவைகள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்கும் சில சாதாரண பறவையினங்களின் கூடுகளே. ஆனால் இந்த உலகில் வாழும் பறவையினங்களில் நீங்கள் அறியாத எண்ணற்ற பறவையினங்கள் முற்றிலும் வித்தியாசமான முறையில் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. இந்த கூடுகளைப் பற்றி நாம் ஆய்வு செய்வோம்.

மற்ற எல்லா காரணங்களையும் கருத்தில் கொள்ளும் முன்புபறவைகள் தாங்கள் வாழும் இயற்கைத் சூழலுக்கு ஏற்ப தங்களது கூடுகளை கட்டிக் கொள்கின்றன என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கு நாம் கடற்கரை ஓரத்தில் வாழும் பறவையினங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கடற்கரை ஓரத்தில் வாழும் பறவையினங்கள் கடல்நீரின் மேற்பரப்பில்தண்ணீரில் மூழ்கி விடாதபடிதங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. கடல்நீரின் மட்டம் அதிகரித்தாலும்கடல் நீரில் அவைகளின் கூடுகள் மூழ்காத வடிவத்திலும்,தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருட்களையும் கொண்டே பறவைகள் இத்தகைய கூடுகளை உருவாக்குகின்றன. பறவைகள் இந்த உலகில் தோன்றும்போதே,இத்தகைய கூடுகளை உருவாக்கும் திறமை கொண்டதாகவே பிறக்கின்றன. மேலும் அவைகளுக்கு எப்படி கூடு கட்ட வேண்டும் என யாரும் பயிற்சி அளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அல்லது பறவைகள் நீண்ட காலமாக கூடு கட்டும் முயற்சியை மேற்கொண்டு தண்ணீரில் மூழ்காத கூடுகளை உருவாக்கியிருக்கலாம் என கற்பனை செய்து பார்த்தோம் எனில்பறவைகள் எடுக்கும் முதல் முயற்சியிலேயே அவைகளின் கூடுகள் கடல் நீரில் மூழ்கிப் போயிருக்கும். எப்படியிருப்பினும் அது போன்ற செயல் ஒருபோதும் நடைபெறவில்லை. ஏனெனில்,இவ்வவுலகில் தோன்றிய முதல் நாளிலிருந்தே மேலே குறிப்பிடப்பட்ட அதே முறையில்தான் பறவைகள் தங்களது கூடுகளை உருவாக்கி வருகின்றன.

சதுப்பு நிலப்பகுதியில் வாழும் பறவையினங்கள் தங்களது கூடுகளின் சுவர்களை சற்று உயரமாக அமைத்துக் கொள்கின்றன. ஏனெனில் தாங்கள் இடும் முட்டைகள்,வேகமாக காற்று வீசும்போது கீழே விழுந்துவிடாமல் இருக்க பறவைகள் மேற்கண்ட முறையை கையாளுகின்றன. முட்டைகள் கீழே விழுந்தால் உடையக்கூடிய அபாயம் உண்டு என்பதை உணர்ந்துதங்களது முட்டைகளை முழுக்கவனத்துடனும் பாதுகாக்க வேண்டும் என்கிற இந்த அறிவு இச்சிறிய பறவைகளுக்கு எப்படி வந்ததுபறவைகள் எடுக்கும் மதிநுட்பமுள்ள ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத்தான் இங்கு நாம் காண்கிறோம்.

சதுப்பு நிலப்பகுதியில் வாழும் மற்றொரு பறவையினம்நிலத்தை விட்டு விட்டு புதர்களில் தன்னுடைய கூட்டினை அமைத்துக் கொள்கிறது. அவ்வாறு அது புதர்களில் தனது கூட்டினை அமைத்துக் கொள்ள வேண்டிய காரணம் என்னவெனில்நிலத்திற்கும் புதருக்கும் இடையேயுள்ள தட்பவெப்ப நிலை. நிலத்தில் இருக்கும் வெப்ப நிலையைவிடபத்து டிகிரி சென்டிகிரேட் குறைவாகவே இருக்கும் புதர்களின் வெப்பநிலை. நிலத்திற்கும்புதருக்கும் இடையில் வெப்பநிலையில் மாறுதல் உண்டு என்கிற விபரம் நம்மில் அநேகம் பேருக்கு தெரியாது. ஆனால் இச்சிறிய பறவைகள் நிலத்திற்கும்புதருக்கும் வெப்ப நிலையில் மாறுதல் உண்டு என்கிற விபரத்தை தெரிந்து கொண்டு தங்களையும்,தங்களது குஞ்சுகளையும் சூடான வெப்ப நிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சூடான வெப்பநிலை உள்ள நிலத்தை விட்டு விட்டுகுளிர்ந்த வெப்பநிலை உள்ள புதர்களில் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன.

ஐந்தறிவு மாத்திரமே கொண்டுபகுத்தறியும் திறன் இல்லாதவைகள் என நாம் கருதிக் கொண்டிருக்கும் இச்சிறிய பறவைகள் எப்படி இத்தனை நேர்த்தியான திறமைகள் கொண்டிருக்கின்றன என்பது பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

பல ஆண்டுகள் படித்துபட்டம் பெற்று தங்களது துறையில் பயிற்சியும் பெற்றுக்கொண்ட பொறியாளர்கள் கொண்டுள்ள திறமையைஇச்சிறிய பறவைகள் கொண்டுள்ள திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு வீட்டை கட்ட வேண்டுமெனில் திறமையான பொறியாளார் ஒருவர் விபரமாக திட்டமிடுவார். அதாவது - கட்டப்பட வேண்டிய வீட்டிற்கு தேவையான பலத்தைக் கணக்கில் கொள்வார். அதற்கு பயன்படுத்த வேண்டிய பொருட்களை பட்டியலிடுவார். கட்டப்படக் கூடிய பூமியின் தன்மையை ஆராய்ந்து கட்டிடத்தைக் கட்டுவது என தனது வேலையைத் துவங்குவார். இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் பறவைகளும் தங்களது கூட்டை ஒரு வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின் படிதான் கட்டுகின்றன. ஆனால் அவைகளுக்கு தங்களது கூடுகளை கட்ட எந்தவித உபகரணமோஅல்லது படிப்பறிவோ அவசியமில்லை. அவைகள் தாங்கள் செயலாற்ற எடுத்துக் கொண்ட காரியங்களை வல்ல அல்லாஹ் வழங்கிய தூண்டுதல் மூலம் மிகவும் எளிதாக செய்து முடிக்கின்றன. பறவைகள் செய்கின்ற இந்த காரியங்கள் அனைத்தும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு ஒரு அத்தாட்சியாகும். பறவைகள் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் நிச்சயமாக எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே தூண்டுகோலாவான். வல்ல அல்லாஹ் அருள்மறையில் கூறுகிறான்: لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
22:64வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான்.
22:65 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي الْأَرْضِ وَالْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ ۗ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ
22:65(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் நடந்த ஜும்ஆ தொழுகை!!!

டெல்லியில் காங்கிரஸ் அரசின் கரசேவையினால் இடிக்கப்பட்ட மஸ்ஜிதில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஜும்ஆ தொழுகை நடந்தது.

டெல்லி இமாம் அஹ்மத் புகாரி ஜும்ஆ தொழுகைக்கு தலைமை தாங்கினார்.



டெல்லி நிஸாமுத்தினூக்கு அருகிலுள்ள ஜங்புராவில் பழமையான நூர் மஸ்ஜித் கடந்த புதன்கிழமை டெல்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகளால் அநியாயமாக இடித்துத் தள்ளபட்டது.

மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ஜும்ஆ தொழுகை நடத்தப்படும் என முன்னரே டெல்லி இமாம் அஹ்மத் புகாரி அறிவித்திருந்தார். மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தொழுகைக்கு அனுமதிப்பதாகவும், மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்த டி.டி.ஏவிடமிருந்து வாங்கி மீண்டும் மஸ்ஜிதை புனர் நிர்மாணிக்க வக்ஃப் போர்டிடம் ஒப்படைக்கப்படும் எனவும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் டெல்லி இமாமை சந்தித்து உறுதியளித்திருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியபிறகு ஷீலா தீட்ஷித் இந்த உறுதியை அளித்தார்.

டெல்லியில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் நிஸாமுத்தீன் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடைகள் மூடிக்கிடந்தன. போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னாலும் மக்கள் ஜும்ஆ தொழுகையை நடத்தினர். தொடர்ந்து ஊர்வலமாக மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திற்கு சென்றனர். வழியில் போலீஸ் தடுத்தபொழுதிலும் அதனை மீறிய மக்கள் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் கூடினர். ஆனால், போலீசார் மஸ்ஜித் இடிக்கபட்ட இடத்திற்கு மக்களை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து டெல்லி இமாம் அவ்விடத்திற்கு வருகைதந்தார்.

மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தொழுகை நடத்தப் போவதாகவும், போலீசார் தடுக்கக்கூடாது எனவும் டெல்லி இமாம் கூறினார். தொடர்ந்து, போலீசார் தடைக் கட்டைகளை அப்புறப்படுத்தினர். இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்கள் மீது ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஜும்ஆ தொழுகை நடந்தேறியது.

தொழுவதற்குத் தேவையான தொழுகை விரிப்புகளை அருகிலுள்ள வீடுகளிலிருந்து பெண்கள் கொண்டுவந்துக் கொடுத்தனர். அதேவேளையில் பெரும் மக்கள் திரள் போலீஸ் ஸ்டேசன் முன்னால் கூடியிருந்தது. காங்கிரஸின் ரகசிய திட்டம்தான் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நிகழ்வு என டெல்லி இமாம் குற்றஞ்சாட்டினார்.

பின்னர் டெல்லி இமாம் தலைமையில் ஜங்புராவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக புறப்பட்டபொழுது போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து நடந்த மோதலில் ஒரு டி.டி.ஏ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டது. மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவம் துயரமானது என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார். மஸ்ஜித் புனர் நிர்மாணிக்க முஸ்லிம்களுடன் போராடுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Sunday, January 16, 2011

இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை: தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் அறிக்கை

டெல்லி: ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் இந்தியாவில் 30 வயதுக்கு கீழ் உள்ள ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

அன்மையில் 'விபத்து மற்றும் தற்கொலை சாவுகள் 2009' என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கடந்த 2009ம் ஆண்டில் இநதியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 68 சதவீதம் (அதாவது 1 லட்சத்து 27 ஆயிரத்து 151 பேர்) 15 முதல் 44 வயது உள்ளவர்கள் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரசேம் மற்றும் டெல்லியில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 55 சதவீதத்திற்கும் அதிகமானோர் 15 முதல் 29 வயது உடையவர்கள். இதில் அருணாச்சலப் பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட 110 பேரில் 42 பேரும், டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட 1,477 பேரில் 817 பேரும் 15 முதல் 29 வயது உடையவர்கள்.

நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்டவர்களில் 34.5 சதவீதம் பேர் 15-29 வயது மற்றும் 34 வயதுடையவர்கள் ஆவர் என்று கூறப்பட்டுள்ளது.

Saturday, January 15, 2011

குண்டுவெடிப்புகளை மூடிமறைக்க மேலும் கொலைகள்: ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாதம்.

புதுடெல்லி,ஜன.9:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் திட்டமிட்டு நடத்திய குண்டுவெடிப்புகளை மறைப்பதற்கு மேலும் கொலைகளை நிகழ்த்தியதாக ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்பு படை கண்டறிந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்புகளுக்கான பொறுப்பை சுனில் ஜோஷியிடம் ஒப்படைத்திருந்தது. குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பிறகு அவற்றில் முக்கிய பங்காற்றிய சுனில் ஜோஷியால் தங்களது ரகசியங்கள் வெளியாகிவிடுமோ என அஞ்சிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் அவரை கொலைச் செய்தது.

இந்நிலையில், சுனில் ஜோஷியின் நெருங்கிய நண்பரும், மத்தியபிரதேச மாநிலத்தைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான ராம்ஜி என்ற ராமபிரசாத் கலோடா அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு தேவையான குண்டுகளை சுனில் ஜோஷியிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் ராம்ஜியின் உடல் கடந்த 2008 மார்ச் மாதம் மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் கவுதம்புரா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரெயில் தண்டவாளத்தில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வேளையில் அவரைக் கொன்றது யார் என்பது தெரியவில்லை.

தற்பொழுது இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் தங்களது பின்னணி வெளியாகிவிடுமோ என அஞ்சி சுனில் ஜோஷியை கொன்ற விபரத்தை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கண்டறிந்தது.

இதனைத் தொடர்ந்து அஜ்மீர் குண்டுவெடிப்பை விசாரித்துவரும் ராஜஸ்தான் மாநில ஏ.டி.எஸ் ராம்ஜியைக் கொன்றதன் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது. தொடர் விசாரணையில் இந்த உண்மை தெரியவரும் என கருதப்படுகிறது.

சங்க்பரிவாரை தடைச் செய்க - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்துவரும் குண்டுவெடிப்புகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியதுதான் என்பது தெளிவாகியுள்ள சூழலில் அவற்றின் மறைவில் வேண்டுமென்றே கொடிய சித்திரவதைகளுக்கு ஆளாக்கிய முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டுமெனவும், அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச்செய்ய வேண்டுமென காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரே கூறியிருப்பது தேசத்தின் பாதுகாப்பில் கவலைக் கொண்டவர்களுக்கு ஆறுதலை தருகிறது.

ஆனால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த அமைப்புகளை தடைச் செய்வதற்கு காலதாமதம் செய்யக்கூடாது. நீதிமன்றத்தின் முன்பு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ள கொடிய பயங்கரவாதியான சுவாமி அஸிமானந்தாவின் பெயரை மாற்றி 'ஆஸிஃப் கஸ்மானி' என்ற முஸ்லிம் பெயரை சூட்டி சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பின் விசாரணையை திசை திருப்பிய வெளிநாட்டு சக்திகளைக் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

குஜராத்தை மையமாக வைத்து செயல்படும் கேரள மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் நாயரின் கேரள மாநில செயல்பாடுகளைக் குறித்து விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

சுரேஷ்நாயரை 'நய்யார்' என மாற்றி விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்.

காவி பயங்கரவாதத்திற்கு உத்வேகமளித்துக் கொண்டிருக்கும் மலையாள சினிமாத் துறையில் செயல்படும் பிரமுகர்களின் பொருளாதார பின்னணியைக் குறித்து விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்களான பேராசிரியர் டி.பி.விஜயகுமார், டாக்டர் பீம்ஜெயராஜ், ரமேஷ் நன்மண்டா, டாக்டர்.எஸ்.எம்.ஜெயப்பிரகாஷ், கஃபூர், முகுந்தன், பேராசிரியர் ராஜூ தாமஸ், ஜாஃபர்,வழக்கறிஞர் பி.ஆர்.சுரேஷ், பேராசிரியர் பஷீர், வழக்கறிஞர் எஸ்.பிரகலாதன், டாக்டர் உஸ்மான், வழக்கறிஞர் டி.எஸ்.ஜோஷி, அஷ்ரஃப், டாக்டர்.பி.கே.சுகுமாரன், வழக்கறிஞர் எ.ஜெயராம், வழக்கறிஞர் கெ.சுபாஷ் சந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

விக்கிலீக்ஸ்:பல அரபு உயரதிகாரிகள் சிஐஏவின் ஒற்றர்கள்..

கெய்ரோ,ஜன.6:விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸன்ஜே அல்ஜஸீராவுக்கு அளித்த பேட்டியில்,அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கு சார்பாக அரபுலகின் உயரதிகாரிகள் தங்கள் அரசாங்கத்தின் பணிகளை உளவு பார்க்கின்றனர் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் தங்கள் நிறுவனத்திடம் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த அதிகாரிகள் அமெரிக்காவுக்காக தங்கள் நாடுகளில் உளவு பார்க்கின்றனர் என்று கூறிய அஸன்ஜே சித்திரவதைக்காக அமெரிக்கா,
குற்றம் சாட்டப்பட்டவர்களை சில நாடுகளுக்கு அனுப்புவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் தகவல்களும் தங்களிடம் உள்ளதாக கூறுகிறார்.

இந்த நேர்காணலின் போது அஸன்ஜே தன்னிடம் இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆவணங்களை அதிகாரிகளின் பெயர் குறிப்பிடாமல் காண்பித்ததாகவும், அவர் பேச்சிலிருந்து எகிப்தே இந்த செயலில் ஈடுபடுவதாக தெரிகிறது என்று அல்ஜஸீராவின் அஹமத் மன்சூர் உறுதிபடுத்துகிறார்.

பெயர்களை சொல்லுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை. பெயர் குறிப்பிடாமல் ஆவணங்களின் சில பகுதிகளை வெளியிடுவதால் மட்டுமே எங்கள் நிறுவனத்தை பாதுகாத்துக்கொள்ள முடிகிறது என்றார் அஸன்ஜே.