Friday, June 3, 2011

"எட்ஸ்" இந்தியாவுக்கு 10-வது இடம்!!


JUNE 3, ஐ.நா: வளரும் தலைமுறையினரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் தினமும் எய்ட்ஸ் நோய்க்கு தாக்குதலுக்கு உள்ளாவதாக ஐ.நா சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினரில் பெண்கள் சுமார் 46 ஆயிரமும், ஆண்களில் சுமார் 49 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இளம் தலைமுறையினர் எய்ட்ஸ் பாதிப்பில் தென் ஆப்ரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் சுமார் 2லட்சத்து 10 ஆயிரம் பெண்களும் 82 ஆயிரம் ஆண்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

தொடர்ந்து நைஜீரியாவில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பெண்களும் , ஒரு லட்சம் ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கென்யா நாடு இடம் பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் 60 சதவீதம் வரை வளரும் இளம் பெண்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தாலும் தென்னாப்ரிகாவில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டில் 15-24 வயதினரில் சுமார் 41சதவீதத்தினர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 15 வயது கொண்டவர்களே அதிகமாகும். இவ்விசயத்தில் இந்தியா 10-வது இடத்தை பிடித்துள்ளது.

செல்போனில் பேசினால் புற்றுநோய் வரும்-'ஹூ' எச்சரிக்கை


MAY 3 ணிக்காக செல்போனில் பேசுபவரா? அப்படியெனில் உங்களை மூளைப்புற்று நோய் தாக்கக்கூடும் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார மையத்தின் அங்கமாக உள்ள சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்வில் நடத்தப்பட்ட ஆய்வில், செல்போன் பயன்படுத்துவதன் மூலம் பரவும் கதிரியக்கத்தால் மூளை புற்றுநோய் ஏற்படுகிறது என்ற திடுக்கிடும் உண்மை தெரியவந்துள்ளது.

புற்றுநோய் பாதிப்பு

தினமும் அரைமணிநேரம் ‌மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய் பாதிக்கும் தன்மை 3 மடங்கு அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் பயன்படுத்துவோருக்கு இந்த பாதிப்பு அதிகளவில் இருக்கும் எனவும், அவர்களுக்கு மூளை கட்டி உருவாகும் வாய்ப்பு அதிகம் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் பேர் உயிரிழப்பு

கடந்த 10 ஆண்டுகளில் 13 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 5000 பேர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இளம் வயதினர் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரத்திற்கு அதிகமாக மொபைல் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மூளை கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கு நரம்பு கோளாறு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கதிர்வீச்சின் தாக்கம் குழந்தைகளையும் அதிகம் பாதித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்களை விட இந்தியாவில் இருப்பவர்களுக்கு செல்போன் கதிரியக்க பாதிப்பு அதிகம் தாக்குகிறது. இதற்கு நம் நாட்டில் நிலவும் வெப்பமான சூழலும், உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து குறைவே காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். புற்றுநோய் தவிர மறதி, தூக்கமின்மை, அஜீரணம் போன்றவையும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்

மலிவான செல்போன்களுக்குத் தடை

செல்போன் பயன்படுத்தும்போது வெளியாகும் கதிர்வீச்சு விஷயத்தில் மனித உடலில் ஊருடுவும் ரேடியோ அலைகளின் அளவுக்கு (ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேடி & எஸ்ஏஆர்) கட்டுப்பாடு உள்ளது. அதைப் பின்பற்றாமல் தயாரிக்கப்படும் மலிவான செல்போன்களை தடை செய்ய வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது.

செல்போனை நாம் பயன்படுத்தும்போது தலைப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. மூளைக்கு வரும் ரத்தம் இந்த வெப்பத்தை உடலின் மற்ற பகுதிகளிலும் பரவச் செய்கிறது. இதனால் உடலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதனால் செல்போனை தலைக்கு அருகில் கொண்டு செல்லாமல் ஹெட்போனை பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

ஐரோப்பாவில் பரவும் வெள்ளரிக்காய் நோய்-இதுவரை 17 பேர் பலி


Cucumber
may 3
மாட்ரிட்: ஸ்பெயினில் வெள்ளரிக்காய் மூலம் பரவி வரும் நூதன நோய்க்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் தற்போது ஸ்வீடனுக்கும் பரவி வருவதால் ஐரோப்பிய நாடுகள் பீதியடைந்துள்ளன.

மரபணு மூலம் மாற்றம் செய்து வளர்க்கப்பட்ட வெள்ளரிக்காய் தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஸ்பெயினில் உயிரிழந்த 17 பேரில் 16 பேர் ஜெர்மன் நாட்டவர்கள். ஒருவர் ஸ்வீடனைச் சேர்ந்தவர்.

ஸ்பெயினில் மரபணு மாற்ற வெள்ளரிக்காயை அதிக அளவில் பயிரிடுகின்றனர். நல்ல விளைச்சலைத் தருவதால் இதை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்த வெள்ளரிக்காய்தான் தற்போது வினையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளரிக்காய் சாப்பிட்டு உடல் நலம் பாதித்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்பெயின் வெள்ளரிக்காய்க்கு ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்துள்ளன.

சர்ச்சைக்கிடமான வெள்ளரிக்காயை பரிசோதித்தபோது அதில் இகோலை என்ற பாக்டீரியா இருந்தது தெரிய வந்தது. இதனால் தற்போது வெள்ளரிக்காயை விற்பனை செய்ய ஸ்பெயின் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்பெயினிலிருந்து வரும் பழங்கள், காய்கறிகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என்று ஐரோப்பியநாடுகள் பலவும் தடை விதித்துள்ளன.

சர்ச்சைக்கிடமான வெள்ளரிக்காயை சாப்பிடுவோருக்கு சிறுநீரகம் கடுமையாக, பாதிக்கப்பட்டு மரணத்தில் கொண்டு போய் விடுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்வீடனில் ஒருவர் பலி

தற்போது ஸ்வீடனிலும் இந்த வெள்ளரிக்காய் நோய் பரவி வருகிறது. அங்கு ஒரு பெண் இதுவரை உயிரிழந்துள்ளார். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Thursday, June 2, 2011

மோடியின் ஆட்சியில் நடப்பது என்ன? அதிர்ச்சி ரிப்போர்ட்!!


JUNE 2, ஊழலுக்கு எதிராக போர் முரசம் கொட்டி வரும் சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே   நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் குறித்து தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார்.

மோடி யின் அரசு ஓர் ஊழல் நிறைந்த அரசு என்றும் அது ஏழை விவசாயிகளிடம் இருந்து நிலங் களை கையகப்படுத்தும் செயலில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து வருகிறது என்றும் சமூக நல ஆர்வலர் அன்னாஹசாரே கடுமை யாக சாடியுள்ளார்.

மக்கள் உயிர் வாழ அடிப்படை தேவையான தண்ணீர் வசதியை ஒழுங்கு செய்து கொடுக்க முடியாதவன்தான் இனப்படுகொலை  புகழ்  மோடி. இவர்தான் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராம்,  இந்த மாநிலம்தான் நம்பர் ஒன் மாநிலமாம்,

மேலும் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று குடிநீர் சுமந்து வரும் கொடுமையை இந்த படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

ஹசாரேயின் கருத்துக்கள் மோடி அரசின்  கொடூரத்தை வெளிப்படுத்தி காட்டுவதாக இருந்தது.  இருப்பினும் இனப்படு கொலை தவிர்த்து மோடியின் நிர்வாகம் நல்ல முறையில் நடை பெறுவதாக ஒரு குருட்டு கருத்தோட்டம் திட்டமிட்டு பரப்பப்பட்டு வந்தது.

2002ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலை நிகழ்வுகளுக்கும் மோடிக்கும் எவ்விதத் தொடர்பும்  இருக்க முடியாது என பல ஊடகங்களும் மோடியை வளர்ச்சிக்கான  அரசியல் வாதியாக  வர்ணித்தன. காந்தியடிகள் பிறந்த மாநிலம் ஆதலால் அங்கு பூரண  மது விலக்கு என்றுமே நடைமுறையில் இருப்பது வழக்கமான ஒன்று.

ஆனால் அதைக்கூட மோடியின் சாதனையாக டமாரம் அடிக்க ஒரு கூட்டம் காத்திருந்தது,  மோடிக்கு முன்பாக ஆட்சி செய்தவர்கள் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால் அதைக்கூட மோடியால் செயல்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் அன்னாஹசாரே வெளியிட்ட கருத்துக்கள் மாயை களை உடைத்து உண்மைகளை வெளிப்படுத்தியது. குஜராத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருப்பதாக கூறப்படுவது ஒரு மாயை என்றும் மாநிலத்தில் பாலைவிட அதிகமாக மதுபானங் கள் தான் ஆறாக ஓடுகின்றன என்றும் கூறி பரபரப்பு தீயை பற்றவைத்திருக்கிறார்.

லஞ்ச ஊழலுக்கு எதிராக பாடுபட்டுவரும் அன்னாஹசாரே   கடந்த மாதம்  மோடி அரசை நல்லாட்சி என்று பாராட்டினார். பின்னர் அது தவறு என்று உணர்ந்து கொண்டதாக கூறி தனது மோடி ஆதரவு கருத்துக் களை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தியது


இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நடைபெற்றது அதன் தொட்ர்த்சியாக 


அதிரையில் 

30.05.2011 திங்கள்கிழமை தரகர் தெரு,பெண்கள் மதரஸா வில் 10. மணியளவில் AT. அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது


சிறப்புரையாளர்கள் :சகோ M.ஹாரிஸ் முஹம்மது .
தலைப்பு :நம்மை நாம் புணரமைத்தல்.
சகோ:S.S.A கரீம்
தலைப்பு :குடும்பத்தை புணரமைத்தல்
சகோ:M.ஜெய்னுல் ஆபுதீன்
தலைப்பு:சமுகத்தை புணரமைத்தல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் 
பெண்களுக்கு தனி இட வசதி கொடுக்கப்பட்டது எராளமான பெண்களும் ஆண்களும்  கலந்து கொண்டனர் 

அதிரையில் நடந்த ஊர் பொதுமக்கள் ஜமாத்தார்கள் ஆலோசனை பொது கஊட்டம்

31.05.2011 அன்று ஊர் பொதுமக்கள் ஜமாத்தார்கள் பொதுக்குட்டாம் தலைவர்கள் தேர்ந்து எடுப்பதற்காக நடைபெற்றது அதில் தமீம் அன்சாரி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர் பிறகு நிஜாமுதீன் அவர்கள் சுறாவை தொடங்கி வைத்து சுராவின் ஒழுங்கு முறையை வசித்து தொடங்கி  வைத்தார் பிறகு AT.அப்துல்லாஹ் அவர்கள் ஒற்றுமையை பற்றி சிறப்புரை ஆற்றினார் பிறகு நிஜாமுதீன் அவர்கள் ஊரிலுள்ள பிரச்சினை பற்றி உரை ஆற்றினர்  அன்சாரி அவர்கள் ஒவ்வருவாக கருத்துகள் கேட்க பெற்றது பிறகு ஊர் மக்கள் ஊருக்கு ஒரு தலைவர் வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள் பிறகு நமதூரில் ஒன்பது ஜமாத்தார்கள் 15.06.2011அன்று ஆலோசனை குஊட்டம் நடைபெற வுள்ளது அதில் ஊருக்காக தலைவர்கள் தேர்தெடுக்க படுவார்கள் 

ரூ. 5.6 லட்சம் கோடி செலவில் 16 அணு உலைகளைக் கட்டும் செளதி அரேபியா


Riyadh Saudi Arabia
ரியாத்: பெருகி வரும் மின் தேவையை சமாளிக்க 16 அணு மின் நிலையங்களை அமைக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

பெட்ரோலிய ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான செளதி இப்போது பெட்ரோலி கச்சா எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே தனது மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

ஆனால், மின்சாரத்தில் தேவை மிக மிக அதிகமாகி வருவதாலும், எதிர்காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை மிக மிக அதிகமாக இருக்கும் என்றும் கருதும் செளதி, அந்த எண்ணெய்யை ஏற்றுமதி செய்யாமல் அதை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று கருதுகிறது.

மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் செளதியின் மின் தேவை ஆண்டுக்கு 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து மின் உற்பத்திச் செலவைக் குறைக்க அணு மின் நிலையங்களைக் கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக அடுத்த 20 ஆண்டுகளில் 16 அணு உலைகளைக் கட்ட செளதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது.

மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அணு உலைகளைக் கட்டுவதற்காக சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட உள்ளதாக சவூதி அணுசக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் கனி மாலிபரி தெரிவித்தார்.

அடுத்த 10 ஆண்டுகளில் 2 அணு உலைகள் கட்டி முடிக்கவும், அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2 அணு உலைகளைக் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2030ம் ஆண்டுக்குள் 16 அணு உலைகளைக் கட்டி முடிக்க செளதி முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு அணு உலையும் இன்றைய மதிப்பில் ரூ. 35,000 கோடி செலவில் கட்டப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை செளதியின் மின் தேவையில் 20 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்யுமாம். மேலும் 80 சதவீத மின்சாரம் தொடர்ந்து பெட்ரோலிய எண்ணெய் அடிப்படையிலான மின் நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்யப்படும்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம்-சுனாமியால் புகுஷிமா உள்ளிட்ட அணு மின் நிலையங்களுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவு செய்துள்ள நிலையில் செளதி புதிதாக அதற்குள் காலடி வைக்கிறது.

அண்டை நாடான ஐக்கிய அரபு நாடுகள் ரூ. 1 லட்சம் கோடி செலவில் 4 அணு உலைகளைக் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அணு உலைகளை தென் கொரியா கட்டி வருகிறது.

செளதியின் அணு உலைகளை அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கட்டித் தரலாம் என்று தெரிகிறது.

மாற்று எரிபொருள் இருக்க பெட்ரோல் இறக்குமதி ஏன்?


JUNE 2, "எத்தனால்" இது கரும்பு, மக்காசோளம், போன்றவற்றில் இருந்து தாயாரிக்கப்படுகிறது.

இதை பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளாக உபயோகிக்கலாம். 

இன்னும் சொல்லப்போனால் இது பெட்ரொலை விட சிறந்தது என்றே சொல்லாம். அதுமட்டுமல்லாது இதன் விலையோ மிக குறைவு.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது.

1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆனால் இன்றைய இந்தியாவில் "எத்தனால்" உற்பத்தி 4,80,000 டன்தான்.

"எத்தனால்" உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.

எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் "எத்தனால் பம்ப்" தனியாக இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் "எத்தனாலைக்" கலந்து கொள்ளலாம். "எத்தனாலில்" மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு.

"எத்தனாலின்" விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, "எத்தனால்" அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.

24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம்.

அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

சின்ன சின்ன ஆசை!!


சின்ன சின்ன ஆசை!!

* மெழுகுவர்த்தி தான் உருகி அனைவருக்கும் வெளிச்சத்தை கொடுத்து, கரைந்து காணாமல் போகிறது. அதுபோல் உருக ஆசை!!

* ஒரு கப்பல் மூழ்க போகிறது என்றால் அதன் கேப்டன் அதில் உள்ள எல்லாரையும் தப்பிக்க வைக்க நினைப்பான். அது முடியாத போது 'அந்த கப்பலோடு தானும் மூழ்கி போவான்'.

'பயணிகளை காப்பாற்ற முடியலையே', 'கப்பலை காப்பாற்ற முடியலையே' என்று தன்னை தப்பிக்க  நினைக்காது மூழ்கும் கேப்ட்டனை போல் மூழ்க ஆசை!!

* ஒரு விமானம் பறக்கிறது அதில் மொத்தம் ஐன்பது பேர் பயணிக்கிறார்கள்!  அதில் மொத்தம் நாற்பத்தி ஒன்பது பாராசூட்டுகள்தான் உள்ளனன.

விமானம் பழுது காரணமாக வெடிக்க போகிறது. ஐந்பதாவது நபராகி பாராசூட்டை மற்றவர்களுக்கு கொடுக்க ஆசை!!

* ஒரு படகில் சிலபேர் பயணிக்கிறார்கள்! படகில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு அதில் உள்ள பாரத்தை குறைக்க வேண்டும்! அந்த படகில் இருந்து ஒருவர் கடலில் குதித்து விட்டால் மற்றவர்கள் பிழைத்து கொள்ளலாம்! அந்த ஒருவனாக இருக்க கொள்ளை ஆசை.

இந்த சின்ன சின்ன ஆசைகள் சொல்லும் கருத்து என்னவென்றால்! ஒவ்வொரு சுதந்திரத்திற்க்கும், விடியலுக்கும், மக்கள் எழுச்சிகளுக்கும் பிண்ணியில் சிலர் செய்த ஒப்பற்ற தியாகங்கள் அடங்கி நிற்கின்றன.

நாம் படைக்கப்பட்டதன் லட்சியம் நாம் வாழ மட்டும் இல்லை. மற்றவர்கள் வாழ நம்மால் ஏதாவது செய்யவேண்டும்.  எல்லா மனிதர்களும் இந்த பூமியில் பிறக்கிறார்கள், உண்கிறார்கள், உடுத்துகிறார்கள், திருமணம் செய்து கொள்கிறார்கள், குழந்தைகள் பெற்று கொள்கிறார்கள், எல்லாம் தனக்காக மட்டுமே.

இதில் இருந்து நாம் எப்படி வேறுபட்டு நிற்கிறோம் என்பதே இங்கு கேள்வி.  ஒரு சிலரே தங்களை உருக்கி மற்றவர்களுக்கு வெளிச்சமாக இருக்கும் மெழுகுவர்த்தியாக வாழ்ந்தார்கள். அதுவே இன்று உலகில் நாம் காணும் நல்ல விஷயங்களும், எஞ்சி நிற்கும் மனித நேயம், இதுவெல்லாம் அவர்கள் தங்களை உருக்கி நமக்கு போட்ட பிச்சைகளே.

வெறும் வெளிச்சத்தை நுகரும் ஒரு சராசரி மனிதனாக வாழாமல்!! நாமும் பிறருக்காக ஓளி வீசுவோம். நல்லோர் சிலருக்கு பெய்யும் மழையே நம் எல்லோருக்கும் என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட நல்லோர்களுள் நாமும் ஒருவராக.........

Wednesday, June 1, 2011

ஜீன் 1 முதல் ஜீன் 7 வரை ஆபாச எதிர்ப்பு பிரசாரம் - பாப்புலர் ஃப்ரண்ட்


ஒரு மனிதனை உயர்ந்த கண்ணியத்திற்கு உயர்த்துவது அவனிடமுள்ள ஒழுக்க மாண்புகளே. ஆனால் இன்று உலகளவில் கலாச்சாரம் என்ற பெயரில் இத்தகைய ஒழுக்க மாண்புகள் உடைத்தெரியப்பட்டு வருகிறது. அறைகுறை உடைகளும், ஒழுக்க கட்டுபாடின்மைகளும், இதனை அங்கிகரிக்கும் சமூகம் மற்றும் அரசு, என்று சமூகம் சீரழிவை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. ஆபாசத்தை முன்நிறுத்தி சர்வசாதரணமாக இன்று பல ஆடைகள் தயாரிப்புகள், விளம்பரங்கள், திரைப்படங்கள், பத்திரிகைகள் எனப் பலர் தங்கள் வயிற்று பிழைப்பை நடத்தி வருகின்றார்கள். அரசோ இத்தகைய ஆபாசத்திற்கு எதிராக மக்களை உருவாக்குவதை விட்டு விட்டு ஆபாசத்தினால் எழும் தீமைகளை எவ்வாறு தடுப்பது என்பதிலே கவனம் செலுத்துகிறது. மக்களும், ஒரு மனிதனை ஒழுக்கத்தை கொண்டு மதிப்பிடாமல் வெறுமனே பணத்தை கொண்டு மதிப்பீடு செய்யும் நிலையில் இருக்கிறார்கள். இத்தகைய நடைமுறைகளின் விளைவால் மென்மேலும் இத்தகைய ஆபாசங்கள் வளர்ந்து பல தீமைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஈவ் டிசிங், சிறுமிகள் உட்பட பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல், விபச்சாரம், கற்பழிப்பு, கள்ளத் தொடர்பு மற்றும் அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள், இதனால் கணவன் அல்லது மனைவி கொலை செய்யப்படுதல், விரக்தி மற்றும் தற்கொலை, விவாகரத்து போன்ற பலவேறு சமூக தீமைகள் அன்றாடம் நடந்து வருகிறது. 
இந்நிலையில் இருந்து சமூகம் மீளவேண்டுமெனில் ஆபாசத்தின் ஊற்றாகிய பார்வையில் இருந்து தொடங்கி எண்ணம், சிந்தனை, பேச்சு, செயல்பாடு போன்ற அனைத்திலிருந்தும் மீள வேண்டும். 
ஆபாச பார்வைகளே தீய எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இத்தீய எண்ணம் மன குமுறலை ஏற்படுத்துகிறது. இந்த குமுறல் தீய செயல்களுக்கு வடிவம் கொடுக்கிறது. எனவே ஆபாசத்ததை ஒழிக்க பார்வைகளிலிருந்து ஆரம்பித்து தொடர்ந்து ஆபாசத்தின் பல தீய முகங்களை விட்டு விலக வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறை திருக்குரானில் பின் வருமாறு கூறுகிறான் - 

(நபியே) முஃமின்கனான(நம்பிக்கையாளர்கள்) ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக - அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். - (குர்ஆன் 42.30)

இத்தகைய ஆபாசத்தினால் குடும்ப அமைப்பு சீரழிக்கப்படுகின்றது. கணவன்-மனைவியிடையே உள்ள பிணைப்பை பலகீனப்படுத்துகிறது. இத்தகைய குடும்பங்களில் வளரும் குழந்தைகள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலும் இத்தகைய குழந்தைகள் மற்றும் தகாத உறவில் பிறந்த குழந்தைகள் பிற்காலத்தில் பல சிறிய குற்றங்களிலிருந்து பெரும் குற்றங்கள் வரை புரியவும் காரணமாகிறது. 

எனவே இத்தகைய ஆபாசம் என்ற சமூக தீமையை ஒழிக்கும் முயற்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஜீன் 1 லிருந்து ஜீன் 7 வரை ஆபாசத்திற்கெதிரான பிரசாரத்தை செய்ய உள்ளது. ஆபாசத்தை ஒழித்து ஆரோகியமான சமூகத்தை உருவாக்குவோம்.

மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதை காண்டு மக்களை ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து மக்களை விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றியாளர்கள். அல் குர்ஆன் 3.104.