Wednesday, December 19, 2012

போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ!

  BJP MLA Jetha Bharwad   19 Dec 2012
 
    அஹ்மதாபாத்:பா.ஜ.க எம்.எல்.ஏயின் மெய்க்காப்பாளர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ ஜேதா தர்வாத் போலீஸாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பிவிட்டார்.
 
     தலையில் காயமடைந்ததை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தர்வாத், அங்கிருந்து போலீஸை ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
 
     சம்பவத்தை தொடர்ந்து பாதுகாவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த எட்டு போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீஸ் ஆலோசித்துவருகிறது. கோத்ராவில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ தர்வாத், சி.டி ஸ்கேன் எடுப்பதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது போலீஸை ஏமாற்றிவிட்டு தப்பிவிட்டார் என்று டி.ஐ.ஜி சித்தரஞ்சன் சிங் தெரிவித்தார்.
 
    நேற்று முன் தினம் டார்ஸாங் கிராமத்தில் வாக்குச் சாவடியில் வைத்து சிலர் தர்வாத் மீது கல்வீசினர். இதனைத் தொடர்ந்து அவரது மெய்க்காப்பாளர் துப்பாக்கியால் சுட்டார். கல்வீச்சில் தர்வாதின் தலையில் காயம் ஏற்பட்டது.
 
     தர்வாத் மற்றும் 10 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் கள்ள ஓட்டு போடுவதற்காக தர்வாத் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச்சாவடிக்கு வந்தார் என்று எதிர் கட்சியான காங்கிரஸின் வேட்பாளர் தக்ஹத் சிங் சோலங்கி குற்றம் சாட்டுகிறார். நன்றி, தூது

கெளஸியா மஸ்ஜிதை மீண்டும் கட்டக்கோரி பாராளுமன்றம் நோக்கி நடந்த பேரணி!

Rally, Demanding the Delhi GOvt to rebuild Ghousiya Masjid      
  புதுடெல்லி:டெல்லி மெஹ்ராலியில் நானூறு ஆண்டுகள் பழமையான கெளஸியா மஸ்ஜிதும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஐந்நூறுக்கும் அதிகமான முஸ்லிம் வீடுகளை இடித்து தள்ளிய டெல்லி வளர்ச்சி ஆணையத்தின்(டி.டி.ஏ) அட்டூழியத்தை கண்டித்து கவுஸியா காலனி மறுவாழ்வு பேரவையின் சார்பில் பாராளுமன்றத்தை நோக்கிய பேரணியும், தர்ணாவும் நடைபெற்றது.
 
    இடிக்கப்பட்ட மஸ்ஜிதையும், வீடுகளையும் மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். கைக்குழந்தைகளுடன் குடும்ப பெண்மணிகளும், வயோதிகர்களும் பேரணியில் கலந்துகொண்டு கடுமையான தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பேரணியை ஜந்தமந்தரில் வைத்து போலீஸ் தடுத்து நிறுத்தியது.
 
    இப்போராட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.டி.பி.ஐ தேசிய பொது செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் தனது உரையில் கூறியது: இடிக்கப்பட்ட மஸ்ஜிதையும், வீடுகளையும் மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும். டெல்லி வக்ஃப் போர்டு இவ்விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, சட்டரீதியான அனைத்து உதவிகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றார்.
 
    இடிக்கப்பட்ட மஸ்ஜித் மற்றும் வீடுகளை பார்வையிட்ட எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், கெளஸியா காலனி மக்கள் நடத்தும் சட்டரீதியான, ஜனநாயகரீதியான போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதியளித்தார்.
 
 
    பேரவையின் கன்வீனர் அலாவுதீன் கூறியது:பிறந்த மண்ணில் டி.டி.ஏ எங்களை அநாதைகளாக மாற்றிவிட்டது. எனக்கு 40 வயதாகிறது. டி.டி.ஏவால் இடிக்கப்பட்ட காலனியில் நான் பிறந்தேன். சொந்தமண்ணில் என்னைப்போன்ற நூற்றுக்கணக்கான குடும்பத்தின் சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். டெல்லி அரசு தலையிட்டு டி.டி.ஏவின் அட்டூழியங்களுக்கு முடிவுக்கட்ட வேண்டும் என்றார்.
 
 
    பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது தன்வீர் கூறியது:இந்த நிலம் வக்ஃப் செய்யப்பட்டதா? டி.டி.ஏவுக்கு சொந்தமானதா? என்பது 2-வது விஷயம்.கடுமையான குளிர்காலத்தில் நூற்றுக்கணக்கான சாதாரண முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகளை இடித்து தள்ளியது காட்டு மிராண்டித்தனமாகும்.
 
     குதுப்மினாரோடு சேர்ந்துள்ள பகுதியை ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு விற்கவே தங்களை அப்புறப்படுத்தியுள்ளார்கள் என்று கெளஸியா காலனியை சார்ந்த நஃபீஸா பானு கூறினார்.
 
 
    வாக்கு அளித்த காங்கிரஸ், தங்களின் வீடுகளை இடித்து தள்ளியுள்ளது. மீண்டும் கட்டி தராவிட்டால் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் நடத்துவோம் என்று ஆஸிஃப் பர்வீன் தெரிவித்தார்.
 
    இப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ தேசிய செயலாளர் அப்துல் மஜீத் ஃபைஸி, வழக்கறிஞர் அஜய் பாண்டே, கேம்பஸ் ஃப்ரண்டின் காலித் கான், பாப்புலர் ஃப்ரண்டின் மவ்லான அஷ்ஃபாக், எஸ்.டி.பி.ஐ டெல்லி மாவட்ட செயலாளர் முஹம்மது ஜாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
    மஸ்ஜிதையும், வீடுகளையும் மீண்டும் கட்டித் தரவேண்டும் என்று கோரி மனுவை டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்திடம் பேரவையின் நிர்வாகிகள் அளித்தனர். ஒருவாரத்திற்குள் காலனியில் மஸ்ஜிதையும், வீடுகளையும் மீண்டும் கட்டித் தராவிட்டால் எஸ்.டி.பி.ஐயுடன் இணைந்து போராட்டங்களை வலுப்படுத்துவோம் என்றும், டெல்லி முழுவதும் போராட்டம் வலுப்பெறும் என்றும் பேரவையின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நன்றி, தூது

கஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் வஃபாத்தானார் !

   DEC 19,
    
     கஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் "அஷ்ஷைக் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்ஸபீல்" நேற்றுமுன்தினம் (17/12) வஃபாத்தானார், நேற்று "அசர்"க்குப்பிறகு கஃபதுல்லாஹ்வில், "ஜனாசா தொழுகை" நடத்தப்பட்டு "அல்-அத்ல்" கபரஸ்தானில் அடக்கம் செய்ய்யப்பட்டார், அவருக்கு வயது 89.

     அரபுலக மார்க்க பிரச்சாரகரான அவர், 1923ல் சவூதி அரேபியாவின் "அல்பகீர்" நகரத்தில் பிறந்தார்.

    தனது தந்தை அப்துர்ரஹ்மான் அவர்களிடம் கல்வி கற்ற அவர், 1945ல் "அல்பகீரியா பிரைமரி ஸ்கூலில்" ஆசிரியரானார்.

    பின்னர் 1951ல் "அல்புரைதா இன்ஸ்டிடியூட்டில்" பேராசிரியராக நியமிக்கப்பட்ட அவர், மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க (தனது 40வது வயதில்) 1963ல் கஃபதுல்லாஹ்வின் இமாமானார்.

    1968 முதல் கஃபதுல்லாஹ்வின் அனைத்து மார்க்க காரியங்களுக்கும் பொறுப்பாளியாக நியக்கப்பட்ட அவர், மூன்றாண்டுகளுக்கு பின்னர் 1971 முதல் கஃபதுல்லாஹ் மற்றும் "மஸ்ஜிதுன்நபவி" ஆகிய இரு பள்ளிவாசல்களின் நிர்வாகக்குழுவுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டு, 29 ஆண்டுகள் அப்பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டார்.

     நீண்ட காலம் கஃபதுல்லாஹ்வில் இமாமாக இருந்த, அவரது விருப்பத்தின் பேரில், கடந்த 2000ம் ஆண்டு முதல், பொறுப்புக்களிலிருந்து விடுவிக்கப்பட்டு ஓய்விலிருந்தார்.

Tuesday, December 18, 2012

விஷம் கக்கும் விஸ்வரூபம்? : களம் இறங்கும் முஸ்லிம் சமூகம்!

     DEC18, "உன்னைப்போல் ஒருவன்" படத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கிய கமலஹாசனின் சுயரூபம், தற்போது "விஸ்வரூபம்" எடுத்துள்ள நிலையில், அனைத்து முஸ்லிம் அமைப்புக்களின் "அவசர ஆலோசனைக்கூட்டம்" நேற்று சென்னையில் நடைபெற்றது.

     கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சித்தரிப்புகள் இருக்கின்றன, என்ற கருத்துகளும், சந்தேகங்களும் வலுத்துள்ள நிலையில், நேற்று மாலை 7 மணியளவில், சென்னை அண்ணா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் "அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் ஒருங்கினைப்புக்கூட்டம்" நடந்தது.

     ஜமாத்துல் உலமா தலைவர், மவுலவி அப்துல் ரஹ்மான் அவர்களின் தலைமையில், விஸ்வரூபத்தை எந்த ரூபத்தில் எதிர்கொள்வது? என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கூட்டத்தில், எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃப்ரண்ட், ம.ம.க., தமுமுக, இ.த.ஜ, ஜமாத்தே இஸ்லாமி, ஜம்யியதுல் உலமா, தேசிய லீக் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.

     2 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக்கூட்டத்துக்குப் பிறகு கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

1.விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக வரும் தகவல்களின் அடிப்படையில், சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட, உள்துறைச்செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை 20/12/12 அன்று நேரில் சந்தித்து மனு கொடுப்பது.
 
    (துப்பாக்கி திரைப்பட சர்ச்சை வந்தபோது, விரைந்து செயல்பட்டு தீர்வை ஏற்படுத்திய தமிழக அரசு "விஸ்வரூபம்" விஷயத்திலும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும், என பல தலைவர்களும் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்)

2.இரண்டு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காத பட்சத்தில், 22/12/12 அன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்வு காணவும், முடிவு செய்யப்பட்டது.
 
3.வழக்குப்பதிவு செய்த பிறகு, அன்றைய தினமே "பத்திரிக்கையாளர் சந்திப்பை" நிகழ்த்தி கூட்டமைப்பின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
     தமிழ் சினிமாக்களில், "பாகிஸ்தான்" முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருந்தவர்கள், இப்போது, இந்தியாவில் "உங்கள் ஊரில் - உங்கள் கடைகளுக்கு பக்கத்திலயே அவர்கள் "ஸ்லீப்பர்" செல்களாக இருக்கலாம், என முஸ்லிம்களை காட்சிப்படுத்தியது, விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி.
 
    தமிழ் சினிமாவில் மணிரத்னத்தின் 'ரோஜா' (1992) முதன்முதலில் "விஷக்கருத்துக்களை" விதைத்தது. "ரோஜா"வில் முஸ்லிம் வேடத்தில் இருக்கும் தீவிரவாதி ஒருவர், இந்திய "தேசியக்கொடி"யை எரிப்பது போலவும், பார்ப்பன வகுப்பைச் சார்ந்த கதாநாயகன், எரியும் கொடியின் மீது படுத்து தீயை அணைப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது.

    இந்த காட்சியின் மூலம் முஸ்லிம்கள் என்றால் இந்திய தேசத்துக்கு எதிரானவர்கள் என்ற கருத்தையும், பார்ப்பனர்கள் என்றால் தேசத்தைக் காக்க உயிரையே பணயம் வைப்பவர்கள் போலவும் காண்பித்து முஸ்லிம்களை இழிவு படுத்திய அதே வேளையில், தான் சார்ந்த பிராமனீயத்தை போற்றி "விஷமம்" செய்திருந்தார்,மணிரத்னம்.

     ரோஜாவுக்குப் பின் பம்பாய், பம்பாய்க்குப் பின் அதே பாணியில் விஜயகாந்தின் பல படங்கள், அர்ஜுனின் படங்கள், கமலஹாசனின் படங்கள் என முஸ்லிம் விரோத படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன. அந்த வரிசையில் சமீபத்திய வரவு "விஸ்வரூபம்"

இந்திய தலைநகரமா? காம கொடூரர்களின் புகலிடமா?


     Dec 18: இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் 25 பேர் கொண்ட ஒரு கும்பல் மருத்துவ கல்லூரி மாணவியை கற்பழித்தது, பின்னர் அவரை பஸ்ஸில் இருந்து தூக்கி வீசி எரிந்தது.

     இதுதான் இந்தியாவின் கேடு கெட்ட தலைநரம். டெல்லி பல கட்ட பாதுகாப்புகளை கொண்டது என்று இந்திய அரசு பீற்றி திரிகிறது. ஆனால் கடந்த10 ஆண்டுகளில் இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி சிட்டியில் ஓடும் வாகனங்களில் மட்டும் 10 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடந்துள்ளது.
     புது டெல்லி பெண்கள் மீது 580 பாலியல் தொந்தரவுகளும், 480 பாலியல் வன்புணர்வு சம்பவங்களும் நடந்துள்ளது. இவைகள் எல்லாம் தனி நபர் கற்பழிப்பு சம்பவம் இல்லை, கூட்டாக, கும்பலாக சேர்ந்து கற்பழித்தது. இப்படி காம கொடூரர்கள் நிறைந்து கிடக்கும் நகரம்தான் இந்தியாவின் தலைநகர் புது டெல்லி.
     இந்தியா ஒளிர்கிறதாம் சிலர் வெக்கம் இல்லாமல் சொல்லி திரிகின்றனர். தலைநகரில் பெண்கள் நிம்மதியாக பயணம் செய்ய முடியவில்லை. பெண்களை கூட்டமாக சேர்ந்து கற்பழிக்கும் காம கொடூரர்கள் நிறைந்துள்ளனர். இப்படி பட்ட கொடூரர்கள் மீது சரியான நடவடிக்கை எடுத்து இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியவில்லை. இந்தியா வல்லரசாம்! ஒளிர்கிறதாம்!

    ஹிட்லரின் போர் தந்திரம் குறித்து சொல்லும்போது, ஹிட்லர் பத்தாயிரம் அழகிய பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு ஊசி மூலம் ஒரு மருந்தை ஏற்ற செய்தார். அந்த பெண்களை எதிரி நாட்டு ராணுவ வீரர்கள், அவர்களாக செக்ஸ்க்கு வந்தாந்தால் சரி இல்லையேல், வழிய போயி செக்ஸ் உறவுக்கு அழைக்கும் படி ஏவினார். யார் அந்த பெண்களோடு செக்ஸ் உறவு கொள்கிறார்களோ அவர்ளது ஆண் உறுப்பு சிதைந்து உடனே மரணம் வந்து சேர்ந்தது என்று சொல்வார்கள். அதுபோல்........
வெறி நாய்களுக்கு விஷம் வைத்து கொல்வது மாதிரி, இந்த காம கொடூரர்களை கொல்ல வேண்டும். நன்றி,

சிரியாவில் ராணுவமும், எதிர்ப்பாளர்களும் வெற்றி பெற முடியாது: துணை அதிபர்!

Syria VP Farouq al-Sharaa says neither side can win war  
 
     டமாஸ்கஸ்:சிரியாவில் கடந்த 21 மாதங்களாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் ராணுவமோ, எதிர்ப்பாளர்களோ வெற்றிப் பெற முடியாது என்று அந்நாட்டின் துணை அதிபர் ஃபாரூக் அல் ஷர்ஆ தெரிவித்துள்ளார். லெபனான் பத்திரிகையான அல் அக்பருக்கு அளித்த பேட்டியில் ஷர்ஆ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
     2011மார்ச்சில் ஆஸாதிற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் துவங்கிய பிறகு அபூர்வமாக பொதுமேடைகளில் தென்பட்டார் ஷர்ஆ. இப்போரில் ஆஸாத் வெற்றிப் பெற முடியாது என்று ஷர்ஆ உறுதியாக தெரிவித்தார். எதிர்ப்பு போராளிகளின் முன்னேற்றம் தலைநகரின் அனைத்து பகுதிகளும் நடக்கிறது என்ற செய்திகள் வெளியாகி உள்ள சூழலில் ஷர்ஆவின் பேட்டி வெளியாகியுள்ளது.
அ
     வர் மேலும் கூறியது: அரபு நாடுகளும், ஐக்கிய நாடுகள் அவையும் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நேரம் இது. விசாலமான அதிகாரங்களைக் கொண்ட தேசிய ஐக்கிய அரசை உருவாக்கவேண்டும். ஒவ்வொரு தினங்கள் கழியும் பொழுது அரசியல், ராணுவ தீர்வுகள் கைவிட்டுப் போகின்றன. ஆயுதங்களை உபயோகித்து போரை முடிவுக்கு கொண்டுவர முடியாது. சிரியாவின் ஸ்திரத்தன்மைக்கு தேவையான நிலைபாடுகள்தாம் தேவை. ஒரு தனிநபருக்கோ, ஆட்சிக்கோ சிரியாக்காரர்கள் போர் செய்யவில்லை. இவ்வாறு ஷர்ஆ கூறினார்.
 
     இதனிடையே யர்முக்கில் ராணுவத்திற்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான மோதல் நீடிக்கிறது. ஃபலஸ்தீன் அகதிகள் முகாமில் நேற்று முன் தினம் ஆஸாத் ராணுவம் அநீதமான தாக்குதலை நடத்தியதில் 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆஸாதை ஆதரிக்கும் ஃபலஸ்தீன் அமைப்பு ஒன்றின் டமாஸ்கஸ் அலுவலகம் மீது நேற்று எதிர்ப்பாளர்கள் கடுமையான தாக்குதலை நடத்தினர்.

தமிழகத்தில் சாலையில் சைக்கிள் ஓட்டிகள் உயிரிழப்பு அதிகம்!

        தமிழகத்தில் சாலையில் சைக்கிள் ஓட்டிகள் உயிரிழப்பு அதிகம்!   18 Dec 2012
 
    புதுடெல்லி:இந்தியாவிலேயே சைக்கிள் ஓட்டுபவர்கள் சாலை விபத்துக்களில் சிக்கி இறக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை வகிப்பதாக மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
 
     வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தான் தமிழ்நாட்டை விட அதிக அளவில் சைக்கிள் ஓட்டுபவர்கள் விபத்துக்களில் உயிரிழந்திருக்கிறார்கள்.
 
     தமிழ் நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 1412 பேர் சைக்கிளில் பயணிக்கும் போது ஏற்பட்ட சாலை விபத்துக்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதாவது ஒரு நாளுக்கு நான்கு பேர் என்ற விகிதத்தில்.
 
     உத்தரப்பிரதேச மாநிலத்தில், கடந்த ஆண்டு 2,338 பேர் சைக்கிளில் பயணம் செய்யும்போது விபத்துக்களில் சிக்கி இறந்திருக்கிறார்கள்.
 
     தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சைக்கிள் ஓட்டுபவர்களுக்கென்று சாலைகளில் தனியாக ஒதுக்கப்பட்ட வழிகள் இல்லாத்தே, இந்த அளவு அதிக எண்ணிக்கையில் சைக்கிள் பயணிகள் விபத்தில் சிக்கி இறப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்று தமிழ் நாடு சைக்கிளிங் சங்கத்தின் செயலர் எஸ்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
 
     அது போல சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது பற்றிய போதிய அளவு பயிற்சியின்மையும் ஒரு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
 
     அரசைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல் மற்றும் உடல் நல காரணங்களுக்காக, சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று சைக்கிளிங் அமைப்புகள் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

5 ஆண்டுகளில் உ.பியில் போலீஸ் செய்த என்கவுண்டர்களின் எண்ணிக்கை 499!

18 Dec 2012
 
     லக்னோ:கடந்த 5 ஆண்டுகளில் உத்தரபிரதேச மாநில போலீஸ் என்கவுண்டரில் 499 பேரை படுகொலைச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸலீம் பேக் என்ற நபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த மனுவிற்கு உ.பி போலீஸிடமிருந்து கிடைத்த பதிலில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
 
     ஒன்றரை வருடங்களுக்கு பிறகே ஸலீம் பேக்கிற்கு உ.பி போலீஸ் புள்ளிவிபரங்களை அளித்துள்ளது. இக்கோரிக்கையை முன்வைத்து மாநிலத்தின் முதன்மை தகவல் அறியும் ஆணையரை அணுகிய பொழுதே இந்த தகவல்கள் ஸலீம் பேக்கிற்கு அளிக்கப்பட்டன.

குஜராத் தேர்தலில் பெய்ட் நியூஸ் அதிகம்! – பிரஸ் கவுன்சில்!

paidnews   18 Dec 2012
 
     புதுடெல்லி:குஜராத் தேர்தலில் கையூட்டு வாங்கிவிட்டு செய்தியை வெளியிடும் பெய்ட் நியூஸ் அதிகம் நடந்துள்ளதாக ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா(பி.சி.ஐ)வின் உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்துள்ளது.
 
     இந்த அறிக்கை அதிர்ச்சி அடையச் செய்வதாகவும், ஊடகங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாலே இதனை தடுக்க முடியும் எனவும் ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மன் மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். பி.சி.ஐ உறுப்பினர் ராஜீவ் ரஞ்சன் நாகின் தலைமையிலான குழு ஒன்று, குஜராத்தில் பெய்ட் நியூஸ் சம்பந்தமான புகார்களின் விசாரணைக்கு நியமிக்கப்பட்டது. பத்திரிகைகளில் மட்டுமல்ல, சானல்களிலும் பெய்ட் நியூஸ் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
     முழுமையான அறிக்கை கிடைத்த பிறகு தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் கமிஷனையும், இதர அதிகாரிகளையும், பொதுமக்களையும் அணுகுவோம் என்று கட்ஜு தெரிவித்தார். ஊடகங்களை கட்டுப்படுத்த ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு கூடுதல் அதிகாரங்கள் தேவை என்ற தனது கோரிக்கையை நியாயப்படுத்தும் விதமாக விசாரணையின் முடிவு அமைந்துள்ளது என்று கட்ஜு கூறினார். நன்றி, தூது

ஒன்பது வருடங்கள் அநியாயமாக சிறையில் அடைத்த மோடியின் பயங்கரவாதத்திற்கு எதிராக வாக்களித்த இஸ்ஹாக் முஹம்மது!

muslim in jail
 
    கோத்ரா:அப்பாவியான, கண்பார்வை இழந்த தன்னை அநியாயமாக ஒன்பது வருடங்கள் சிறையில் அடைத்த பயங்கரவாதி மோடியை எதிர்த்து தனது அகக்கண்ணின் வெளிச்சத்தில் வாக்களித்துள்ளார் இஸ்ஹாக் முஹம்மது மம்முது. சிறையில் இருந்து விடுதலையான பிறகு நடைபெறும் முதல் தேர்தலில், தனது துயரம் இனி யாருக்கும் வரக்கூடாது என்ற பிரார்த்தனையுடன் இஸ்ஹாக் முஹம்மது, ஒருவரின் உதவியுடன் நேற்று ஜஹுர்புரா குஜராத்தி ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு வந்து வாக்களித்தார்.
 
    2002-ஆம் ஆண்டு கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பற்றிய சம்பவத்தை தனது நண்பர்கள் மூலமே தெரிந்து கொண்டார் இஸ்ஹாக் முஹம்மது. ஊன்றுகோலின் உதவியுடன் மட்டுமே நடக்கும் இஸ்ஹாக், உறவினரின் வீட்டில் இருக்கும் வேளையில் மோடியின் போலீஸ் பிடித்து சென்று கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றவாளியாக்கியது.
 
    ரெயிலில் சலுகை கட்டணத்துடன் பயணம் செய்ய மூன்று தடவை அரசு மருத்துவர்கள் இஸ்ஹாக், கண்பார்வை இழந்தவர் என்று அளித்த சான்றிதழ்களை காண்பித்த பிறகும் மோடியின் ஹிந்துத்துவா போலீஸ் அலட்சியம் செய்துவிட்டது. கொலை, குற்றகரமான சதித்திட்டம் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டு இஸ்ஹாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
     பொடா சட்டத்தின் கீழ் பரோல் கூட கிடைக்காமல் சிறை வாசம். ஒருமுறை விசாரணை நீதிமன்றத்தில் இஸ்ஹாக்கின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்தபொழுது நீதிபதி, கண் பார்வை தெரியாத இவர் எவ்வாறு கொலைச் செய்தார்? என்று கேள்வி எழுப்பினார். அப்பொழுது மெகா ஃபோன் மூலமாக ரெயில் பெட்டி பற்றி எரியும் பொழுது’ அவர்களை கொல்லுங்கள்’ என்று இஸ்ஹாக் கூறியதாக மோடியின் போலீஸ் விசித்திரமான காரணத்தை கூறியது.
 
     மேலும் சதித்திட்டம் தீட்டியதிலும் இஸ்ஹாக் பங்கேற்றார் என்று போலீஸ் கூறியது. மோடி போலீஸின் முட்டாள்தனமான வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதியும் ஜாமீனை மறுத்தார். துயரம் நிறைந்த ஒன்பது ஆண்டுகள் சிறை வாழ்க்கையின் போது மரணமடைந்த தாய் மற்றும் சகோதரி கணவரின் இறுதி சடங்குகளில் கூட(ஜனாஸா) இஸ்ஹாக்கால் பங்கேற்க முடியவில்லை.
 
    இறுதியாக ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நீதிமன்றம் இஸ்ஹாக் நிரபராதி என்று கூறி இதர 14 பேருடன் சேர்த்து விடுதலை செய்தது. சிறை வாழ்க்கை இஸ்ஹாக்கின் இளமையையும், வாழ்க்கையையும் வீணாக்கிவிட்டது. கோத்ராவில் ஜஹுர்புரா மஸ்ஜிதில் பிறருடையை கருணையை எதிர்பார்த்து தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார் இஸ்ஹாக். 42 வயதான பிறகும் இன்னமும் திருமணம் புரியாமல் உள்ளார் இஸ்ஹாக். மஸ்ஜிதுக்கு அருகே உள்ள ஒரேயொரு அறையை மட்டுமே கொண்ட வீட்டில் தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்துவருகிறார் அவர்.
 
    தாமதமாக கிடைக்கும் நீதி, நீதியை மறுப்பதாகும் என்று உச்சநீதிமன்றம் கூறியது இஸ்ஹாக்கிற்கு தெரியாது. பார்வையில்லாத தான், நிரபராதி என்பதை நிரூபிக்க ஒன்பது ஆண்டுகள் சிறையில் பலிகொடுக்க நேர்ந்தது என்பது மட்டும் இஸ்ஹாக்கிற்கு தெரியும். நூறு குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்ற இந்திய நீதிபீடங்களின் கொள்கை வாக்கியமும் இந்த அப்பாவியை காப்பாற்றவில்லை.
 
    நிரபராதியாக ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால், மோடி அரசும், நீதிமன்றமும் இவருக்கு இழப்பீடு வழங்கவில்லை. இழப்பீட்டைக் கோரி உயர் நீதிமன்றங்களை அணுகுவதற்கு அன்றாட உணவுக்கு அல்லாடும் இஸ்ஹாக்கால் அவ்வளவு தொகையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
 
    இந்த அப்பாவிக்கு யார் தான் உதவுவார்? அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் என்னதான் தீர்வு? நன்றி தூது