Friday, June 7, 2013

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் இட ஒதுக்கீடு:விரைவில் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!

6 Jun 2013
 
     புதுடெல்லி:கல்வி, வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான்கான் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறியது:கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். இந்த வழக்கு தொடர்பாக அட்டர்னி ஜெனரலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
 
     சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் மறுப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில், இது புதிய விஷயம் அல்ல. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டின்படி, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஏற்கெனவே இட ஒதுக்கீடு பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே, முஸ்லிம்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் விருப்பம் என்றார்

சரணடையவந்தவர்களை தீவிரவாதிகள் என்று கைதுச் செய்த பாதுகாப்பு படை!

6 Jun 2013
 
    பஹ்ரைச்(உ.பி):கஷ்மீர் மாநில அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சரணடைய வந்த 3 நபர்களை பாதுகாப்பு படையினர்தீவிரவாதிகள் என்று கூறி அநியாயமாக கைதுச் செய்துள்ளனர். இவர்கள் இந்தோ-நேபாள எல்லைக்கு அருகில் உள்ள ருபைடிஹா சோதனைச் சாவடிஅருகே எஸ்எஸ்பி படையினரால் கைது செய்யப்பட்டனர். இதுக்குறித்து கைதுச் செய்யப்பட்ட முஹம்மது அக்பர் லோன், முஹம்மது ஷஃபிக் பர் மற்றும் மன்சூர் அஹ்மது ஜர்கர்  ஆகியோர் விசாரணையின் போது கூறுகையில்,’1990-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரில்உள்ள முஸஃப்ராபாத்திற்கு சென்றோம். அங்கேயே பாஸ்போட்ர்ட் பெற்றோம். கஷ்மீர் மாநில அரசின் திட்டப்படி, போலீசாரிடம் சரணடைய வரும்போது கைதுச் செய்துள்ளனர்’ என்று தெரிவித்தனர்.

முஸ்லிம் விவாகரத்து நடைமுறை:சான்றிதழ் வழங்கும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்க கோரி வழக்கு!

                                6 Jun 2013 divorce
 
     சென்னை:முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரலுமான பதர் சயீத் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பது: ”விவாகரத்தைப் பொறுத்தவரை மற்ற மதங்களைச் சார்ந்த பெண்களுக்குப் பல்வேறு பாதுகாப்புகள் உள்ளன. ஆனால் ஒரு முஸ்லீம் கணவர் தன்னிச்சையாக விவாகரத்து செய்துவிட முடியும். இது குறித்த சட்டங்கள் முறைப்படுத்தப்படவில்லை. ஷாரியா தொடர்பான சட்டம் செல்லாது என முன்னர் 2002ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது, அம்மனு நிராகரிக்கப்பட்டது.
 
     ஆனால் அப்போது நீதிமன்றம் தலாக் சொல்லுவதற்கு போதுமான முகாந்திரம் வேண்டும். தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முன் தம்பதியருக்கிடையே சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும், அவை தோற்றாலேயே தலாக் மூலம் விவாகரத்து அனுமதிக்கப்படலாம் என வலியுறுத்தியிருந்தது. ஆனால் அவ்வித நடைமுறைகள் எதனையும் கடைபிடிக்காமலேயே தலாக் மூலம் பல முஸ்லீம் கணவர்கள் விவாகரத்து செய்வதை தான் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராயிருந்தபோது தெரியவந்தது. அதற்கு காஜிகளும் உடன்போய் சான்றிதழும் வழங்குவதால் பெண்கள் அல்லலுறுகின்றனர். ஆனால் காஜிகளுக்கோ அவ்வாறு சான்றிதழ் வழங்கவே உரிமை கிடையாது’ என வாதிடுகிறார் பதர் சயீத்.
 
     தற்காலிகத் தலைமை நீதிபதி ஆர்.கே அகர்வால் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மனு குறித்த தங்கள்விளக்கங்களை அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கும் மாநிலத் தலைமை காஜிக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்திரவிட்டது.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்:மஹராஷ்ட்ரா, மத்திய பிரதேச ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இடையே நெருங்கிய தொடர்பு- என்.ஐ.ஏ!

                                    6 Jun 2013 NATIONAL INVESTIGATION AGENCY OF INDIA
 
     புதுடெல்லி: முஸ்லிம் மையங்களை தாக்குவதற்கு மஹராஷ்ட்ராவிலும், மத்திய பிரதேசத்திலும் உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டுபிடித்துள்ளது. மஹராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளும், மத்தியபிரதேசத்தில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி தலைமையிலான ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது. 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மஹராஷ்ட்ரா மாநில நந்தத்தில் நிகழ்ந்த வெடிக்குண்டை தயாரிக்கும்போது  ஹிந்துத்துவா தீவிரவாதிகளான ஹிமான்ஷு பான்ஸேவும், நரேஷ் ராஜ் கோண்டோவாரும் கொல்லப்பட்ட சம்பவத்தை பரிசோதித்த பிறகு என்.ஐ.ஏ இம்முடிவுக்கு வந்துள்ளது.
 
    பான்ஸே உள்ளிட்ட மஹ்ராஷ்ட்ராவைச் சார்ந்த 4 ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மத்திய பிரதேச மாநிலம் தேவாஸில் உள்ள பாக்லியா காட்டில் நடந்த ஆயுத பயிற்சியில் பங்கேற்றதாக 2006-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் விபரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைக்கவில்லை. 2006-ஆம் ஆண்டு பான்ஸே, மத்திய பிரதேசத்தில் வைத்து சுனில்ஜோஷியை சந்தித்துள்ளான் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
     2003 நவம்பர் 21-ஆம் தேதி மஹராஷ்ட்ரா மாநிலம் பார்பானி, 2004-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பூர்ணா, ஜால்னா ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான மஸ்ஜிதுகளுக்கு அருகே வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின் போது நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பான்ஸே தலைமை வகித்துள்ளான். 2006-ஆம் ஆண்டு மாலேகானில் தொழுகையின் போதுதான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இவ்வழக்கில் மனோகர், டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறைக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் நன்றி!

                            6 Jun 2013 cfi
 
     சென்னை: தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை சார்பாக ஆண்கள் அரசு பள்ளிகளில் ஆண்கள் மட்டுமே, மற்றும் பெண்கள் அரசு பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற உத்தரவிற்க்கு மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.
 
     இதுகுறித்து கேம்பஸ் ஃப்ரண்ட வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
 
     தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை சார்பாக ஆண்கள் அரசு பள்ளிகளில் ஆண்கள் மட்டுமே, மற்றும் பெண்கள் அரசு பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றி தெரிவித்து வரவேற்பதோடு தமிழக அரசு மற்றும்  தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஆகியவற்றிற்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
 
     தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி 34,871 ஆரம்பப் பள்ளிகளும், 9,969 நடுநிலைப் பள்ளிகளும், 5,167 உயர்நிலைப் பள்ளிகளும், 5,660 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்,  தனியார் சுயநிதி பள்ளிகள் ஆகியவை அடங்கும். இந்த பள்ளிகளில் ஒன்றரை கோடி மாணவ, மாணவிகள் படிக்கின்றார்கள்.
 
    இவற்றில் அரசு பள்ளிகளான, 23,522-ஆரம்பப் பள்ளிகள், 7,651-நடுநிலைப் பள்ளிகள், 3,096-உயர்நிலைப் பள்ளிகள், 2,595-மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. அரசு பள்ளிகளில் 2-இலட்சத்திற்க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றார்கள். தற்போது அரசு பள்ளிகளில் ஆசிரியர் பதவிகளில் ஆண்கள் பள்ளிகள், பெண்கள் பள்ளிகள் என்று பாகுபாடு இல்லாமல் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பணியாற்றி வருகின்றார்கள்.
 
     இந்நிலையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நியமனத்தில் திடீர் மாற்றத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை கொண்டு வர உள்ளது. அதன்படி இனி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளிலும், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். அதேபோல் ஆண்கள் உயர்நிலைப் பள்ளிகளிலும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளார்கள்.
 
 
     இதற்க்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், திருமதி. டி.சபீதா அவர்கள் வெளியிட்டுள்ளார். இதனை தேசிய மாணவ இயக்கமான ‘கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’, வரவேற்பது மட்டுமின்றி தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றது. இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, June 5, 2013

அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகை!




திருச்சியிலிருந்து செயல்படும் M.V.R.C.TRUST (Muslim voluntary Religious Charitable Trust) ஒவ்வொரு வருடமும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.

அதன்படி இவ்வருடமும், 10 ஆம் வகுப்பில் தேறிய அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் அவரவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ரூ.1000 முதல் ரூ.3000 வரை ஊக்கத் தொகை வழங்க உள்ளது.
மதிப்பெண்கள் வரையறைகல்வி ஊக்கத்தொகை
480 மற்றும் அதற்கு மேல்ரூ.3,000
460-479ரூ.2,500
400-459ரூ.2,000
300-399ரூ.1,500
299 அல்லது அதற்கு கீழ்ரூ.1,000
இந்த அறக்கட்டளை மூலம் ஊக்கத் தொகை பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்கள், 31.05.2013 அன்று காலை 10:00 மணி முதல் விண்ணப்பிக்கத் துவங்கலாம்.
கவனிக்கவும்: விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 03.06.2013 மாலை 4 மணி
 
 
கூடுதல் விபரங்களுக்கு http://mvrc.miet.edu/ என்ற இணைய தளத்தைக் காண்க.
தகவல்: ஜாஃபர்

ஈராக்-ஆப்கானில் சித்திரவதைகள் குறித்து விசாரணை நடத்த பிரிட்டனுக்கு ஐ.நா வலியுறுத்தல்!

2 Jun 2013
 
     ஜெனீவா:ஈராக் மற்றும் ஆப்கானில் ராணுவம் நடத்திய சித்திரவதைகள் குறித்த விசாரணையை துரிதப்படுத்துமாறும், குற்றவாளிகளை தண்டிக்குமாறும் பிரிட்டனை ஐ.நா வலியுறுத்தியுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்புக் காலக்கட்டத்தில் பிரிட்டீஷ் ராணுவம் நடத்திய சித்திரவதைகள் குறித்த விசாரணைகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
 
     இதுவரை யாரையும் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவோ, தண்டிக்கவோ செய்யவில்லை என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஏஜன்சி சுட்டிக்காட்டியுள்ளது. விசாரணைகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரவேண்டும், ஈராக்கிலும், ஆப்கானிலும் ராணுவ தலையீட்டின் போது சாதாரண மக்களை சித்திரவதைச் செய்தது கவலையை ஏற்படுத்துகிறது என்று ஐ.நா ஏஜன்சியின் 10 நிபுணர்கள் அடங்கிய குழு கூறியுள்ளது.
 
     பிரிட்டீஷ் சட்டத்தின் சிக்கல் மிகுந்த சட்டங்களே, இத்தகைய விசாரணைகளை தாமதப்படுத்த காரணம் என்று இக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினரான அலஸியோ ப்ரூணி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பிரிட்டீஷ் ராணுவம் நடத்திய கொடுமைகள் குறித்து சர் பீட்டர் கிப்ஸனின் புலனாய்வு அறிக்கை ஓரளவு வெளியே வந்தது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறினார்.

சிரியா அகதிகளின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது!

                             2 Jun 2013 syrian-refugee-camp
 
     ஐ.நா:உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள சிரியாவில் புலன்பெயர்ந்து அயல்நாடுகளில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளதாகஐ.நா தெரிவித்துள்ளது.
 
     துருக்கி, லெபனான், ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருப்போரின் எண்ணிக்கையே இதுவாகும்.முகாம்களில் பெயரை பதிவுச் செய்யாதவர்கள் லட்சத்திக்கும் அதிகமானோர் உள்ளனர் என கருதப்படுகிறது. அகதிகள் முகாம்களில் சிரியா மக்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது என்று ஐ.நா அகதிகள் ஏஜன்சியின் செய்தி தொடர்பாளர் டான் மக் நோர்டன் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். டயோரியா, தொற்றுநோய்கள், காய்ச்சல், காதுகளில் தொற்று போன்றவை முகாம்களில் பரவியுள்ளன. கடந்த 15 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும்அதிகமானோர் சிரியாவில் இருந்து அயல் நாடுகளுக்கு புலன் பெயர்ந்துள்ளனர்

ரெட்க்ராஸ் அலுவலகம் மீதான தாக்குதலில் எங்களுக்கு பங்கில்லை – தாலிபான் மறுப்பு!

                          photo_1369976291051_5_0-18qhbpq
 
     காபூல்:கிழக்கு ஆப்கானில் உள்ள ரெட்க்ராஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் தங்களுக்கு பங்கில்லை என்று தாலிபான் போராளிகள்அறிவித்துள்ளனர்.ரெட்க்ராஸ் நடத்தும் போலியோ மருந்து விநியோகத்தை தாங்கள் முற்றிலும் ஆதரிப்பதாகவும், தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரெட்க்ராஸ் ஆர்வலர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தாலிபானின் செய்தி தொடர்பாளர் காரி யூசுஃப் அஹ்மதி தெரிவித்துள்ளார்.சுதந்திரமாக இயங்கும் எந்த அமைப்பையும் தாங்கள் தாக்கமாட்டோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே அரசு ஆதரவுப் பெற்ற ஆயுதக்குழுவுடன் நடந்த மோதலில் 38 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆறுமணிநேரம் மோதல் நீடித்ததாக போலீஸ் கமாண்டர் லுத்ஃபுல்லாஹ் கம்ரான் கூறுகிறார்.

சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டிற்காக 5 பல்கலைக்கழகங்கள்!-மத்தியஅமைச்சர் ரஹ்மான் கான்!

                           4 Jun 2013 aa2fbd84185ad6eb07860def6175-grande
 
    புதுடெல்லி:சிறுபான்மையினர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 5 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறைஅமைச்சர் கே.ரஹ்மான் கான் கூறியுள்ளார்.
 
     இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டுக்காக 5 பல்கலைக்கழகங்களை தொடங்குவது என முடிவு செய்துள்ளோம். இப்பல்கலைக்கழகங்கள் அமையவுள்ள இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். சிறுபான்மை மதத்தினருக்கு கல்வி அளிப்பதற்காகத் தொடங்கப்படும் இப்பல்கலைக்கழகங்களில் மதம் தொடர்பாக கவனம் செலுத்தப்படமாட்டாது. கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். நாட்டில் சிறுபான்மையினரின் வாழ்க்கைத் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்த சச்சார் குழு, சிறுபான்மையினரின் கல்வி நிலை, எஸ்.சி., எஸ்.டி.,யினரின் நிலையை விட பின்தங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதனால்தான் இப்பல்கலைக்கழகங்களைத் தொடங்க முடிவு செய்தோம்” என்றார்.
 
     தலித் சமூகத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வசதியாக பட்டியல் இனத்தில் சேர்ப்பது குறித்து ரஹ்மான் கான் கூறியதாவது: “”நியாயப்படி இக்கோரிக்கை சரியானதுதான். ஆனால், அரசியல் சாசன சட்டப்படி அவ்வாறு வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும். அரசியல் சாசனம் கூறுவதுதான் இறுதியானதாக இருக்கும்” என்றார்.அடுத்த ஆண்டு வரவுள்ள மக்களவைத் தேர்தலை மனதில்வைத்துத்தான் இந்த 5 பல்கலைக்கழகங்களை தொடங்குகிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, “”நான் ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வர முயன்றால், அதை அரசியல் ரீதியாக பார்க்கிறீர்கள்.
 
     தேர்தல் வரும்வரை பணி எதையும் மேற்கொள்ளாமல் அமர்ந்திருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார் ரஹ்மான் கான்.