Thursday, February 24, 2011

விக்கிலீக்ஸ்:கத்தாஃபியின் ஊழல்கள்


வாஷிங்டன்,பிப்.24:லிபியா நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி மற்றும் அவரது குடும்ப அங்கத்தினரின் ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியன வெளிவரத் துவங்கியுள்ளன.
அதிகாரத்தைக் கைப்பற்ற கத்தாஃபியின் பிள்ளைகளுக்கிடையே நடைபெறும் போட்டிகளையும், ஊழலையும் விக்கிலீக்ஸ் நேற்று முன்தினம் வெளியிட்டது.

திரிபோலியில் அமெரிக்க தூதரகத்திடமிருந்து விக்கிலீக்ஸிற்கு இதுத் தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளன.

நாட்டின் சொத்துக்களை பயன்படுத்தி கத்தாஃபியும்,அவருடையை பிள்ளைகளும் நடத்திவரும் ஆடம்பரச் செலவுகளும், பகட்டு வாழ்க்கையும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான குடும்ப கலகமும் ரகசிய ஆவணங்கள் மூலமாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

2008-ஆம் ஆண்டு கத்தாஃபியின் மகன் முஃதஸிம் சொந்தமாக ஒரு படையை உருவாக்குவதற்காக 120 கோடி டாலர் தொகையை தேசிய ஆயில் கார்ப்பரேசன் தலைவரிடம் கோரியுள்ளார். சகோதரன் காஸிமின் படைக்கு போட்டியாக ஒன்றை உருவாக்க வேண்டுமென்பதுதான் முஃதஸிமின் நோக்கம்.

நாட்டின் பல்வேறு சொத்துக்களையெல்லாம் கைவசப்படுத்துவதற்கு தனது மகனின் பகை உணர்வுடனான முயற்சிகளை அறிந்து கொண்ட கத்தாஃபி அதனை எதிர்த்தார் என்பதுக் குறித்த 2006-ஆம் ஆண்டிற்கான ரகசிய ஆவணங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

2009, 2010 ஆம் ஆண்டுகளுக்கான ரகசிய ஆவணங்களில் கத்தாஃபி தனது ஆட்சியை காப்பாற்றுவதற்காக நடத்திய கேவலமான அரசியல் ஊழல் கதைகள் வெளிவந்துள்ளன.

குடும்பத்தில் நடக்கும் கலகங்கள் வெளியே கசியாமலிருக்க ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தும், எதிரிகளை அழித்தொழித்தும் கத்தாஃபி ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தார் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சோமாலியாவில் 36 பேர் படுகொலை

மொகாதிஷு,பிப்.24:சோமாலியாவின் தலைநகரான மொகாதிஷுவில் ஆப்பிரிக்க யூனியன் படையும், போராளி இயக்கமான அல் ஷபாபும் மோதிக் கொண்டதில் 36 கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 36 பேர் ராணுவத்தினராவர்.

பெர்முடா, ஹல்வாதிக் ஆகிய மாவட்டங்களில் நடந்த மோதல்களில் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு மொகாதிஷுவின் பகரா சந்தையில் சோமாலிய ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஏழு அல்ஷபாப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இரு பிரிவினரும் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 12 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

லிபியாவில் மக்கள் எழுச்சி தீவிரம்: தனிமைப்படுத்தப்படும் கத்தாஃபி

திரிபோலி,பிப்.24: 42 ஆண்டுகளாக லிபியாவின் அதிகாரத்தில் தொடரும் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்றுவரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து லிபியாவின் உள்துறை, சட்டத்துறை அமைச்சர்கள் ராஜினாமாச் செய்துள்ளனர்.

கத்தாஃபியின் மகன் ஸைஃபுல் இஸ்லாமும், கத்தாஃபியின் மிக நெருங்கிய நண்பரான யூசுஃப் ஸவானியும் ராஜினாமாச் செய்துள்ளனர். சட்ட அமைச்சர் முஸ்தஃபா அப்துல் ஜலீல் ராஜினாமாவை முதலில் அறிவித்தார். ராணுவத்திடம் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறும், மக்களின் நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதன்பிறகு உள்துறை அமைச்சர் ஜெனரல் அப்துல் ஃபத்தாஹ் யூனுஸும் ராஜினாமாச் செய்தார். பிப்ரவரி 17-ஆம் தேதி புரட்சிக்காக தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலிருந்து ராஜினாமாச் செய்வதாக அவர் அல்ஜஸீரா தொலைக்காட்சி மூலமாக அறிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது கொடூரமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டதை கண்டித்து யூசுஃப் ஸவானி ராஜினாமாச் செய்துள்ளார். முன்னர் ஐ.நாவின் லிபியாவின் பிரதிநிதிகள் நாட்டில் கூட்டுப்படுகொலை நடப்பதாக குற்றஞ்சாட்டி கத்தாஃபியை வெளியேற்ற ராணுவத்தின் உதவியை கோரியிருந்தனர். மேலும் பல தூதரக பிரதிநிதிகளும், சர்வதேச சமூகமும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது
கத்தாஃபிக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய கத்தாஃபி, கொலைவெறித்தனமான பேட்டியை அளித்திருந்தார். இதன் பிறகு மக்கள் எழுச்சிப் போராட்டம் மேலும் வலுவடைந்தது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை தங்கள் நாட்டிற்கு அழைத்துவர துவங்கியுள்ளன.

லிபியா மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் 1000 பேர் மரணித்திருக்கலாம் என உறுதிச் செய்யப்படாத செய்திகள் கூறுகின்றன. ஆனால், 198 சாதாரண மக்களும், 111 ராணுவத்தினர் உள்பட 309 பேர்தாம் கொல்லப்பட்டதாக லிபியாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மக்கள் மீது கொடூரமான ஆயுதங்கள் மூலம் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களை மிகக் கொடூரமாக சித்திரவதைச் செய்த புகைப்படங்கள் நேற்று வெளியாகின.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலும், வெளிநாடுகளும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளன. அமைதியை உடனடியாக நிலைநாட்டவேண்டுமென இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அதேவேளையில் கிழக்கு லிபியாவில் மேலும் அதிகமான நகரங்களை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். மிஸுரத்தா, ஸப்ரத்தா, ஸாவியா ஆகிய நகரங்களை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது லிபிய சர்வாதிகார அரசு கொடூர அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட சூழலில் அந்நாட்டுடனான அனைத்து ஆயுத வியாபாரங்களையும் நிறுத்திவைக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


கஷ்மீர் மத்தியஸ்தர் குழு இரண்டு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்

ஜம்மு,பிப்.24:கஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை பரிந்துரைக்கும் முதலாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு மத்திய அரசுக்கு இரண்டு வாரத்திற்குள் சமர்ப்பிக்கும்.

பேச்சுவார்த்தைக்கு கஷ்மீர் அமைப்புகள் தயாராகத சூழலில் அவர்களின் நிலைப்பாடுகள் அறிக்கையில் உட்படுத்தவில்லை என மத்தியஸ்தர் குழு தலைவர் திலீப் பட்கோங்கர் தெரிவித்துள்ளார்.

கஷ்மீர் பிரச்சனைக்கு அனைத்து பிரிவு மக்களிடமும் இறங்கிச் செல்ல வேண்டும். கஷ்மீருக்கு சுயாட்சி தேவை எனக்கோரும் நேசனல் கான்ஃப்ரன்ஸ், பி.டி.பி ஆகிய கட்சிகளின் கோரிக்கையும், அவாமி நேசனல் கான்ஃப்ரன்ஸ், பிரதமரால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஸஹீர் அஹ்மதின் தலைமையில் நியமிக்கப்பட்ட செயற்குழு ஆகியன சமர்ப்பித்த ஆவணங்களையும் மத்தியஸ்தர் குழு ஆய்வுக்கு உட்படுத்தியதாக பட்கோங்கர் தெரிவித்தார்.

ஹுர்ரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர்களான செய்யத் அலிஷா கிலானியும், மீர்வாய்ஸ் உமர்ஃபாரூக்கும் எழுப்பிய நான்கு மற்றும் ஐந்தாவது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன என மத்தியஸ்தர் குழு உறுப்பினரான ராதாகுமார் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருணாநிதி அரசின் முஸ்லிம் விரோத போக்கு!!

சென்னை,பிப்.23: கோவை வெடிக்குண்டு நாடக நாயகன் ரத்தின சபாபதிக்கு அரசு பதவி, உயர்வு அளித்தது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி பின்வருமாறு: 'கடந்த 22.06.2007அன்று கோவையை தகர்க்க சதி என தமிழகத்தையே பீதிக்குள்ளாக்கியவர் ரத்தின சபாபதி. இவர் அப்போதைய உளவுத்துறை உதவி ஆணையாளராக பதவி வகித்தவர். சில பொருள்களை கைப்பற்றியதாகக் கூறி சில முஸ்லிம் இளைஞர்களையும் கைதுச் செய்து அவர்கள் மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் என்று அறிக்கையும் விடுத்தார்.

இவ்வழக்கில் உள்ள போலித் தன்மையை உணர்ந்துக் கொண்ட பொதுமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோரிடையே எழுந்த நீதிக்கான குரல்கள் எழுந்தன. இதன் விளைவாக அரசு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஆர்.பாலன் அவர்களுடைய தலைமையில் சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்த உத்தரவிட்டது.

சுமார் ஒருவருடமாக இவ்வழக்கை விசாரித்த எஸ்.ஐ.டி கடந்த 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், "இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட வெடிக்குண்டுகள் காவல் துறையினராலேயே பொய்யாக புனையப்பட்டு இவ்வழக்கில் சேர்க்கப்பட்டவை. மேலும் இவ்வழக்கின் ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புனையப்பட்டுள்ளன. எனவே இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறி இவ்வழக்கை முடிக்கின்றோம்" என எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் அரசு ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அவருக்கு கோவை மாநகரிலேயே காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இத்தகைய அரசின் கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும், ரத்தினசபாபதி மீது வழக்குப்பதிவுச் செய்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், பொய்வழக்கு புனையப்பட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், பிரச்சாரங்கள், கையெழுத்து இயக்கங்களின் வாயிலாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்தின சபாபதி மீது வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலும், ரத்தின சபாபதிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி அளிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கை தெளிவாக உணர்த்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும், அரசின் இந்த கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து மக்களை திரட்டி போராடும்.' என அவர் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்; இது போல்தான் கோவை கலவரத்திற்கு காரணமாக அமைத்த போலீஸ் கயவர்களுக்கு பதவி உயர்வு அளித்து மகிழ்ந்தார் இந்த கருணாநிதி. கோவையில் ட்ராபிக் போலீஸ்காரர் விசமிகளால் கொல்லபட்டார். இதில் சம்மந்த பட்டவர்கள் மேல் வழக்கு தொடுக்காமல் போலீஸ் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளோடு கூட்டு சேர்ந்து திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது கலவரத்தை நடத்தி 19 முஸ்லிம்கள் கொல்லபட்டார்கள். இதற்க்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு கருணாநிதி பதக்கம் அணிவித்து பதவி உயர்வு கொடுத்தார். இந்த கருணாநிதி எம்.ஜி.ஆர். இடம் தொடர்ந்து 14 வருடங்கள் தோற்று வனவாசம் இருந்த பொது முஸ்லிம் ஒட்டு வங்கி இல்லை என்றால் இவரது கட்சியே இருந்திருக்காது. இந்த காலகட்டத்தில் முஸ்லிம்களின் 99 சதவிதம் ஓட்டை பெற்றே இவர் தமிழகத்தில் கட்சி நடத்தினார். அப்போது முழுக்க திராவிட சிந்தனை உள்ளவர் போல் காட்டி கொண்டு முஸ்லிம்கள் வாக்குகளை பெற்றார். என்று ஆட்சிக்கு வந்தாரோ அதோடு தோளில் மஞ்சள் துண்டு ஏறிவிட்டது. அதில் இருந்து இதுவரை நோன்பு கஞ்சி குடித்து தொப்பி போட்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகிறார்.

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்

கோவை வெடிக்குண்டு நாடக நாயகன் ரத்தின சபாபதிக்கு பதவி உயர்வு - பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

சென்னை,பிப்.23:கோவை வெடிக்குண்டு நாடக நாயகன் ரத்தின சபாபதிக்கு அரசு பதவி, உயர்வு அளித்தது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி பின்வருமாறு: 'கடந்த 22.06.2007 அன்று கோவையை தகர்க்க சதி என தமிழகத்தையே பீதிக்குள்ளாக்கியவர் ரத்தின சபாபதி. இவர் அப்போதைய உளவுத்துறை உதவி ஆணையாளராக பதவி வகித்தவர். சில பொருள்களை கைப்பற்றியதாகக் கூறி சில முஸ்லிம் இளைஞர்களையும் கைதுச் செய்து அவர்கள் மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் என்று அறிக்கையும் விடுத்தார்.

இவ்வழக்கில் உள்ள போலித் தன்மையை உணர்ந்துக் கொண்ட பொதுமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோரிடையே எழுந்த நீதிக்கான குரல்கள் எழுந்தன. இதன் விளைவாக அரசு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஆர்.பாலன் அவர்களுடைய தலைமையில் சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்த உத்தரவிட்டது.

சுமார் ஒருவருடமாக இவ்வழக்கை விசாரித்த எஸ்.ஐ.டி கடந்த 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், "இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட வெடிக்குண்டுகள் காவல் துறையினராலேயே பொய்யாக புனையப்பட்டு இவ்வழக்கில் சேர்க்கப்பட்டவை. மேலும் இவ்வழக்கின் ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புனையப்பட்டுள்ளன. எனவே இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறி இவ்வழக்கை முடிக்கின்றோம்" என எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் அரசு ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அவருக்கு கோவை மாநகரிலேயே காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

இத்தகைய அரசின் கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும், ரத்தினசபாபதி மீது வழக்குப்பதிவுச் செய்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், பொய்வழக்கு புனையப்பட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், பிரச்சாரங்கள், கையெழுத்து இயக்கங்களின் வாயிலாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்தின சபாபதி மீது வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலும், ரத்தின சபாபதிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி அளிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கை தெளிவாக உணர்த்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும், அரசின் இந்த கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து மக்களை திரட்டி போராடும்.' என அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 23, 2011

ஆண்டு விழாவா? ஆட்ட விழாவா?





மார்ச் ஏப்ரல் என்றவுடன் மாணவச்செல்வங்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு நினைவில் வரும் அதே வேளையில் ஆண்டு விழாக்களும் நினைவில் வருவது தவறுவதில்லை.
ஆண்டு விழாக்களை நடத்துவதின் நோக்கமானது கடந்த ஆண்டு பள்ளிக்கூடங்களின் சாதனைகள், பள்ளி மாணவ மாணவிகளின் சாதனைகள், திறமைகள், சிறப்புகளை அரங்கேற்ற வேண்டும் என்பதே. ஆனால் தற்போது ஆண்டு விழா என்றவுடன் ஆசிரியர்களின் நினைவிற்கும், பெற்றோர்களின் நினைவிற்கும் முதலில் வருவது ஆட்டமும் பாட்டமுமே.
ஜனவரி வந்துவிட்டாலே ஆசிரியர்கள் மாணவச்செல்வங்களை தேர்வுக்கு தயார் படுத்துகிறார்களே இல்லையோ எந்தெந்த சினிமா பாட்டிற்கு யாரை ஆடவைக்கலாம், எந்த பாட்டிற்கு ஆட வைக்கலாம், எந்த பாட்டிற்கு யார் பொறுத்தமாக இருப்பார்கள் என்று சிந்திக்க தொடங்கிவிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
இதில் நாம் வருந்த வேண்டிய விஷயம் என்னவென்றால் நம் இஸ்லாமிய பெற்றோர்களும் தமது குழந்தைகளையும், பருவ வயதுடைய பெண்களையும் மேடையில் நூற்றுக்கணக்கான அந்நியர்களுக்கு முன்னிலையில் ஆடுவதற்கு ஊக்கமளிப்பதுதான். அதிலும் சில இஸ்லாமிய தாய்மார்களோ பள்ளிக்கூட ஆசிரியர்களிடம் கெஞ்சிகிறார்கள்.
அதுபோல் பெற்றோர்கள் ஆசிரியகளிடம் சினிமா, ஆட்டம் பாட்டம் போன்றவற்றில் தமது குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிறகும் பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் இதுபோன்ற இழிச்செயலை அரங்கேற்று கட்டாயப்படுத்தப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை.
அன்பார்ந்த தாய்மார்களே! இஸ்லாத்திற்கு துளியும் தொடர்பில்லாத, இதுபோன்ற பாவச்செயலை செய்யும்படி நம் குழந்தைச்செல்வங்களை நாம் ஊக்கப்படுத்துவோமேயானால் மறுமையில் நிச்சயமாக நாம் நஷ்டவாளியாகவே இருப்போம்.
நற்போதனைகளையும், நற்செயல்களையும் கற்பிக்க வேண்டிய நாம் ஆண்டு விழாக்களில் நடைப்பெறும் ஆட்டம்,பாட்டம் போன்ற அசிங்கமான செயல்களில் நம் பிள்ளைகளும் ஈடுபட வேண்டும் என்று நினைப்பதும், அதை கண்டு இரசிக்க முனைவதும் கண்டிப்பாக பாவமான செயலாகும்.
பெற்றோர்களே! எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருந்து ஆசிரியர்கள் எவ்வளவுதான் நிர்பந்தம் கொடுத்தாலும் ஆட்டம் பாட்டம் போன்ற இழிச்செயலிலிருந்து நம் மாணவச்செல்வங்களை காத்திடுவோம்.
சினிமா பாட்டிற்கு ஆட்டம் போடுவதால் ஏற்படும் அற்பமான சந்தோஷம் நம்மை நரகத்தில்தான் கொண்டு சேர்க்கும் என்பதை நாம் மனதில் நிலை நாட்டிக்கொள்வோம்.
வெளிநாடுகளில் வாழும் ஆண்களும், தந்தையர்களும் தத்தமது வீட்டு மாணவர்கள் ஆண்டு விழா மேடை போன்றவைகளில் ஆட்டம் பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்க வீட்டில் உள்ளவர்களிடம் எச்சரிக்கை செய்யுங்கள். தமது குழந்தைகளிடமும் ஆசிரியர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் ஆட்டம் பாட்டங்களிலிருந்து விளகியிருக்க அறிவுரைக்கூறுங்கள்.
''செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.'' (அல் குர் ஆன்: 18:46)

கேலிக்கூத்தான இந்தியாவின் நீதி துறை.

புதுடெல்லி,பிப்.23:கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் நீண்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு 63 பேரை குற்றமற்றவர்கள் என கூறியுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிபீடத்தை நையாண்டிச் செய்வதாகும் என இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். கடந்த ஒன்பது வருடங்களாக ஒரு முறைக்கூட ஜாமீன் வழங்கப்படாமல் சிறையிலடைக்கப் பட்டிருந்த 63 நபர்களைத்தான் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்துள்ளது என அவர் தெரிவித்தார்.

சிறையிலடைக்கப்பட்ட இத்தனை நபர்களின் இழந்துபோன வருடங்களையும், அவர்களுடைய குடும்பம் இவ்வளவு காலம் அனுபவித்த துயரங்களுக்கும் பதிலாக எதனை கொடுக்கவியலும் என அவர் கேள்வி எழுப்பினார். மெளலவி உமர்ஜியைப் போன்ற வயோதிகரையும், ஏறக்குறைய கண்பார்வை இழந்த சிறுவனையும் இவ்வளவு காலம் எக்காரணமுமில்லாமல் சிறையிலடைத்த பிறகு தீர்ப்பு வெளியாகியுள்ள சூழலில் இந்தியாவின் நீதிபீடத்தின் கட்டமைப்பைக் குறித்து மறுபரிசீலனைச் செய்வது இன்றியமையாதது என சமூக நல ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் தெரிவித்துள்ளார். எதனடிப்படையில் கோத்ரா ரெயில் எரிப்பில் திட்டமிட்ட சதி என்ற சித்தாந்தத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்பதை புரிந்துக் கொள்ள இயலவில்லை என அவர் கேள்வியெழுப்பினார்.

நன்றி: தேஜஸ் மலையாள நாளிதழ்

அரசு பயங்கரவாதத்தால் நசுக்கப்படும் மக்கள் போராட்டம்!!

திரிபோலி,பிப்.23: அரசுக்கெதிராக மக்கள் எழுச்சி தீவிரமடைந்துள்ள சூழலில் லிபியாவின் தலைநகரான திரிபோலியில் ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. ஹெலி காப்டர்களும், போர் விமானங்களும் குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களின் உடல்கள் சாலையோரங்களில் சிதறிக் கிடக்கின்றன. 400-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலைச் செய்த லிபியாவின் சர்வாதிகார கொடுங்கோன்மை ஆட்சியை எதிர்த்து இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் லிபியா தூதர்கள் ராஜினாமாச் செய்துள்ளனர்.

இதற்கிடையே, "நான் திரிபோலியில்தான் இருக்கிறேன்" என ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி தொலைக் காட்சியில் தோன்றினார். அதிகாரத்திலிருந்து மாறுவதற்கு நான் விரும்பவில்லை. வெனிசுலாவுக்கு நான் செல்லவில்லை. ஊடகங்களில் குரைக்கும் நாய்களை நம்பாதீர்கள் என கத்தாஃபி தெரிவித்தார். போராட்டத்தை அடக்கி ஒடுக்குவோம் என அவர் மிரட்டல் விடுத்தார்.

கத்தாஃபி ராஜினாமாச் செய்யவேண்டுமென ஐ.நாவின் லிபியா தூதர் இப்ராஹீம் தப்பாஸி கோரிக்கை விடுத்துள்ளார். லிபியாவின் அமெரிக்க தூதர் அலி அட்ஜாலியும் இதனை வலியுறுத்தியுள்ளார். கத்தாஃபி வெனிசுலாவுக்கு வந்ததாக வெளியான செய்தியை வெனிசுலாவின் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரஸ் இஸரா மறுத்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கூட்டுப் படுகொலைச் செய்த ராணுவ நடவடிக்கையை கண்டித்து ஐ.நாவின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் கவலை தெரிவித்துள்ளார்.

லிபியாவின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு எண்ணை நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை திரும்ப அழைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொண்டத்தைக் குறித்து சர்வதேச தளத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நாவின் மனித உரிமைக்கான ஹைக்கமிஷனர் நவி பிள்ளை வலியுறுத்தி யுள்ளார்.

மனிதத் தன்மையற்ற தாக்குதலை லிபியா நிறுத்த வேண்டுமென பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார். லிபியாவிலிருந்து தங்கள் நாட்டு குடிமக்களை அழைப்பதை வெளிநாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. எகிப்தின் எல்லையில் கூடுதலான ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. எகிப்திற்கு திரும்ப வருபவர்களுக்கு சிகிட்சைக்காக சிறப்பு மருத்துவமனைகள் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன. தென்கொரிய எண்ணை நிறுவனம் தங்களது தொழிலாளர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பத் துவங்கியுள்ளது. இவர்களில் 100 பேர் பங்களா தேஷைச் சார்ந்தவர்களாவர். ஊடகங்களுக்கு அதிகமான கட்டுப்பாடுகளை லிபிய அரசு விதித்துள்ளதால் கூடுதலான செய்திகள் அந்நாட்டிலிருந்து வெளிவரவில்லை

மாநில உருது அகாடமி குழு மாற்றியமைப்​பு

சென்னை,பிப்.23:தமிழ்நாடு மாநில உருது அகாடமியின் ஆட்சிக் குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உருதுமொழியின் வளர்ச்சிக்காக, கடந்த 2000ம் ஆண்டு 'தமிழ்நாடு மாநில உருது அகாடமி' எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அகாடமியின் ஆட்சிக்குழு கடந்த 2007ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது.

இப்போது குழுவில் உள்ள உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளதால் உருது அகாடமியின் ஆட்சிக் குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆட்சிக் குழுத் தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தில் பன்மொழி அகராதித் திட்ட உறுப்பினராகப் பணியாற்றிய ஏ.எஸ்.சஜ்ஜாத் புஹாரி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான், சென்னை பல்கலைக்கழக பெர்சியன் மற்றும் உருது மொழித் துறைத் தலைவர் நிஸார் அஹமது, திருச்சி ஜமால் முகமது கல்லூரி உருது மொழித் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் பி.அஹமது பாஷா, கிருஷ்ணகிரி முக்தார் பத்ரி, வாணியம்பாடி முகம்மது யாகூப் அஸ்லாம், சென்னை மீயாஸி உருது அகாடமி தலைவர் முஹம்மது அஷ்ரப், கோவை அஞ்சுமன்-இ-உருது நிறுவனச் செயலாளர் சையத் பைய்ஸ் காதிரி, சென்னை மாலிக்குல் அஜீஸ், சென்னை புதுக்கல்லூரி உருதுத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ்.மசாஃபருதீன், சென்னை கே.எம்.அஷ்பகூர் ரகுமான், கோவை கலீம், சென்னை அலீம் சபா நவீதி, சென்னை பல்கலைக்கழக உருதுத் துறை பேராசிரியர் சஜ்ஜத் உஸ்ûஸன், வாணியம்பாடி மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக கல்வி மையப் பொறுப்பாளர் சுகைல் அகமது, சென்னை எஸ்.ஐ.இ.டி., மகளிர் கல்லூரி உருது மொழித் துறை தலைவர் ஷஹீரா உம்மே ஷஹலா ஆகிய 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.