Monday, November 26, 2012

எகிப்து:முர்ஸிக்கு எதிரான போராட்டத்திற்கு நீதிபதிகள் அழைப்பு!

பங்களாதேஷ்:துணி ஆலையில் தீ விபத்து – 137 பேர் மரணம்!

Bangladesh factory fire claims 137 lives   
    டாக்கா:பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் உள்ள துணி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 137 மரணமடைந்துள்ளனர். மரண எண்ணிக்கை 150 ஆக உயரும் என கருதப்படுகிறது.

     டாக்காவில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள அஷூலியா மாவட்டத்தில் தஸ்ரின் ஃபாஷன் லிமிடட் என்ற துணி ஆலையின் ஒன்பது மாடிக் கட்டிடத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 9 மணிக்கு தீப்பிடித்தது. எட்டுபேர் பலியானதாக ஆரம்பக் கட்ட செய்திகள் கூறின.

     ஆனால்,ஞாயிற்றுக்கிழமை காலை மீட்பு பணியாளர்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்தபோது 100 பேர் மரணித்ததை கண்டறிந்தனர். 124 உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உடல்களில் பெரும்பாலானவை தீயில் கருகியுள்ளன. 200 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மின் கசிவே தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

     தீ விபத்து நிகழ்ந்தபோது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏராளமானோர் மாடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். தப்பிப்பிழைக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் பெரும்பாலானோர் இறந்துள்ளனர். மாடியில் இருந்து குதித்த பலரும் விபத்தில் சிக்கினர். தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட போதிலும் சில நிமிடங்களுக்குள் தீ 6 மாடிகளுக்கும் பரவியதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். குவித்து போடப்பட்டிருந்த துணிகளில் தீ பற்றியதால் நெருப்பு வேகமாக பரவியது.

     இதற்கிடையே பங்களாதேஷின் 2-வது பெரிய நகரமான சிட்டகாங்கின் தெற்கு பகுதியில் வேலை நடந்துகொண்டிருந்த மேம்பாலம் உடைந்து 13 பேர் மரணித்துள்ளனர். 50 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு எட்டரை மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நன்றி, தூது

உளவுத்துறை ஏஜன்சிகளை கட்டுப்படுத்த பொது நல மனு!

Intelligence Bureau, Indian Administration Intelligence 
   
    புதுடெல்லி:இந்திய உளவுத் துறை ஏஜன்சிகளான ஐ.பி(இண்டலிஜன்ஸ் பீரோ), ரா(ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங்) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இத்தகைய பொதுநல மனு தாக்கல் செய்யப்படுவது முதல் தடவையாகும்.

     புலனாய்வு ஏஜன்சிகளை அரசு துஷ்பிரயோகம் செய்யவில்லை என்பதை உறுதிச் செய்ய அவற்றை பாராளுமன்றம் நிறைவேற்றும் சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வித சட்ட அனுமதியும் இன்றி உளவுத்துறை ஏஜன்சிகள் இயங்குகின்றன. அது அரசியல் சாசனத்தின் 21-ஆம் பிரிவுக்கு எதிரானதாகும்.

     மத்திய இண்டலிஜன்ஸ் பீரோ பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தின் கீழ் தான் உருவாக்கப்படவேண்டும் என்று அரசியல் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

     அமெரிக்காவில் சி.ஐ.ஏவும், என்.எஸ்.ஏவும் பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தின் கீழ் தாம் உருவாக்கப்பட்டன. பிரிட்டனிலும் இத்தகைய சட்டம் அமலில் உள்ளது. உளவுத்துறை ஏஜன்சிகள் செலவழிக்கும் பணம், சி.ஏ.ஜி யின் தணிக்கையில் இடம்பெறுவதில்லை என்றும் பிரசாந்த் பூஷண் தனது மனுவில் கூறியுள்ளார். நன்றி, தூது

2 ஜி சி.ஏ.ஜி அறிக்கை: ஆர்.பி.சிங் பல்டி!

r-p-singh’s-doublespeak-on-cag’s-2g-report 
     புதுடெல்லி:பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு (ஜிஏசி) தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் வற்புறுத்தலின் பேரில்தான், சிஏஜி இழப்பை மதிப்பீடு செய்தார் என நான் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் நான் அவ்வாறு கூறவில்லை. பத்திரிகைகள் எனது கருத்தை திரித்து வெளியிட்டுள்ளன என்று சிஏஜி அமைப்பின் முன்னாள் அதிகாரி ஆர்.பி. சிங் பல்டியடித்துள்ளார்.

    சிஏஜி முன்னாள் அதிகாரியான ஆர்.பி.சிங், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த தணிக்கைக் குழுவுக்கு தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற அவர், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தாம் குறிப்பிடவில்லை என்றும், பிஏசியின் ஆலோசனைப்படி சிஏஜி வினோத் ராய்தான் இழப்பை குறிப்பிட்டு அதில் கையெழுத்திடச் சொன்னார் என்றும் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

     ஊழல் குற்றச்சாட்டை மறைக்க காங்கிரஸ் கட்சி ஆர்.பி.சிங்கை உபயோகிப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியது. இந்நிலையில் தனது முந்தைய கருத்தில் இருந்து திடீரென பல்டியடித்துள்ளார் ஆர்.பி.சிங்.
இதுக் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியது:

    “2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக நான் தெரிவித்த கருத்துக்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. நடந்த உண்மையைத்தான் சொன்னேன். காங்கிரஸ் கட்சியின் தூண்டுதல் காரணமாகவே கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறேன்.

    குறிப்பாக,காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை.
ஏலம் நடத்தாமல் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் குறிப்பிட்ட தொகை இழப்பு ஏற்பட்டதாக வரைவு அறிக்கையில் மதிப்பிடப்பட்டிருந்தது.

     அந்தத் தொகையை நான் நீக்கினேன். ஆனால், இறுதி அறிக்கையில் அந்தத் தொகை சேர்க்கப்பட்டிருந்தது. எனினும், அதில் நான் கையெழுத்திட வேண்டிதாயிற்று.

     அதேநேரம், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (ஜிஏசி) தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் வற்புறுத்தலின் பேரில்தான், சிஏஜி இழப்பை மதிப்பீடு செய்தார் என நான் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் நான் அவ்வாறு கூறவில்லை. பத்திரிகைகள் எனது கருத்தை திரித்து வெளியிட்டுள்ளன என்றார் சிங்.

     மேலும், பணியிலிருந்து ஓய்வு பெற்று 14 மாதங்கள் கழித்து இந்தத் தகவலை வெளியிட வேண்டிய அவசியம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் ஆர்.பி.சிங் கூறியது:
சமீபத்தில் நடைபெற்ற 2 ஜி ஏலத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காத நிலையில், சிஏஜி அறிக்கையில் இழப்பை எப்படி மதிப்பிட்டீர்கள் என கேட்டதால் உண்மை நிலையை விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றார் அவர். நன்றி, தூது

குஜராத் மாடலில் நடந்த ஃபைசாபாத் கலவரம்!

several shops and vehicles burnt faizaabad violence 
    புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத்தில் குஜராத் இனப்படுகொலை மாடலில் கலவரம் நிகழ்ந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் வகுப்புவாத எதிர்ப்பு முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

    குஜராத்தைப் போலவே பிற்படுத்தப்பட்ட சமூகங்களான யாதவ், கேவத், முரோண்ஸ் ஆகியோரை முஸ்லிம்களுக்கு எதிராக உபயோகித்தது, உள்ளூர் போலீஸ் வன்முறையாளர்களுக்கு உதவியது, தீயணைப்பு படையினருக்கு போதிய தண்ணீர் கிடைக்காதது ஆகியன இதற்கு ஆதாரமாகும் என்று வகுப்பு வாத எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அம்ரேஷ் மிஷ்ரா கூறுகிறார்.

    கலவரம் நிகழ்ந்த ஃபைசாபாத்தில் பல இடங்களில் குஜராத் முதல்வர் மோடி மற்றும் பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ லல்லு சிங்கின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.உ.பியை குஜராத்தாக மாற்றுவோம் என்றும், அதனை ஃபைசாபாத்தில் இருந்து துவங்குவோம் என்றும் போஸ்டர்களில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வளவு தூரம் சம்பவங்கள் நிகழ்ந்த பிறகும் இதில் தலையிட உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் மறுத்துள்ளார் என்று அம்ரேஷ் மிஷ்ரா குற்றம் சாட்டுகிறார். சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் சில தலைவர்களுக்கு இக்கலவரத்தில் பங்கிருப்பதாக மிஷ்ரா கூறுகிறார்.

     சமாஜ்வாதி கட்சி தலைவர்களான டிம்பிள் பாண்டே, பாபுலால் யாதவ், பிகாபூர் எம்.எல்.ஏ மிஷ்ராசென் யாதவ், பா.ஜ.க எம்.எல்.ஏ ராமச்சந்திர யாதவ், எம்.பி மஹந்த் ஆதித்யானந்த் ஆகியோருக்கும் நேரடியாக கலவரத்தில் பங்குள்ளது.மேலும் மாவட்ட நிர்வாகம், ஹிந்து யுவ வாஹினி ஆகியோருக்கும் கலவரத்தில் பங்குண்டு என்று மிஷ்ரா கூறுகிறார். நன்றி, தூது

இந்திய வரலாற்றில் முதன் முறையாக உளவுத்துறைக்கு முஸ்லிம் ஒருவர் தலைவர் ஆகிறார்!

investigation burea
    புதுடெல்லி:புலனாய்வுத் துறையின் இயக்குநராக எஸ். ஆசிப் இப்ராஹிம் நியமிக்கப்பட உள்ளார். இத்தகைய உயரிய பதவிக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும். 1977ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இப்போது புலனாய்வுத்துறை இயக்குநராக உள்ள நேச்சல் சாந்துவின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிகிறது. ஆசிப் நியமனம் தொடர்பான உத்தரவு திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியாகும். இவரது நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் தலைமையிலான பணி நியமனத்துக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. நன்றி, தூது

அமெரிக்காவின் அத்துமீறல்: ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு

 iran and america

தெஹ்ரான்:சர்வதேச சட்ட திட்டங்களுக்கு எதிராக நடப்பதாகவும், கடற்பகுதிகளில் அத்துமீறி நுழைவதாகவும் அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

     இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனுக்கு ஐ.நாவுக்கான ஈரான் தூதர் முகமது கஸாயி கடிதம் எழுதி உள்ளார்.

     இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, அமெரிக்க கடற்படையினர் ஈரான் நாட்டின் வான்பகுதியில் அத்து மீறி நுழைகின்றனர்.

    கடற்கரையோரத்தில் அமைந்துள்ள புஷ்ஹெர் நகரின் வான்பகுதியில் அக்டோபர் மாதம் 7 முறையும், நவம்பர் மாதம் ஒரு முறையும் அமெரிக்க கடற்படையினர் அத்துமீறியுள்ளனர்.

    சர்வதேச சட்டதிட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா நடந்து வருகிறது. இந்நடவடிக்கையினால் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படின் அதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும்.

     அமெரிக்காவின் அத்துமீறல் நடவடிக்கையை ஐநா கண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரையிலும் ஈரானின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. நன்றி, தூது

முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி அதிரை மாணவன் படுகொலை !!!


    அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் முஹம்மது நூஹு அவர்களின் மகன் ஹாஜா [ வயது 20 ] , அதிரை பிலால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் காதர் முஹைதீன் [ வயது 23 ]

    நேற்று [ 23-11-2012 ] மாலை சுமார் 5.45 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே தனியாக நின்றுகொண்டு இருந்த ஹாஜாவை முதுகுக்கு பின்னால் சென்ற காதர் முஹைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவனை அருகில் நின்றவர்கள் அரசு மருத்துவனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கே போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்களால் முதலுதவி மாத்திரம் செய்யப்பட்டு மேற்கொண்டு சிகிச்சையளிக்க தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்த அதிரை த.மு.மு.க வினருக்கு சொந்தமான ஆம்புலன்சில் உடல் எடுத்துச் செல்லப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதியளிக்கப்பட்டது. உடலில் பல்வேறு இடங்களில் பலமாக காயம் ஏற்பட்டதால் மருத்துவர்களின் சிகிச்சைகள் பலனின்றி இன்று [ 24-11-2012 ] அதிகாலை சுமார் 4.45 மணியளவில் உயிர் பிரிந்தன [ இன்னா லில்லாஹி...] பிரத பரிசோதனையடுத்து உடல் இன்று உறவினரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

    கத்தியால் குத்திய காதர் முஹைதீன் காவல்துறையில் சரண் அடைந்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு போடப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    சில மாதங்களுக்கு முன்பு எற்பட்ட விரோதத்தின் காரணமாகவே கத்திகுத்து நடைபெற்றது என்ற பேச்சு பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இச்சம்பவம் தெருவின் முக்கிய பகுதியில் நடைபெற்றதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகின்றன. நன்றி, adirai xpress

Sunday, November 25, 2012

சீறி எழுந்த "CFI" மாணவர் கூட்டம் : அடி பணிந்த "காலிகட்" பல்கலைக்கழகம்!


NOV 24, கேரளாவின் "காலிகட்" பல்கலைக்கழக "தொலைதூர கல்வி" பாட புத்தகத்தின் ஆட்சேபகரமான கட்டுரையை நீக்ககோரி "Campus Front of India" (CFI) மாணவர் அமைப்பினர் போராட்டத்தையடுத்து, அதனை நீக்க பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.
B.A. (மலையாளம்) மூன்றாமாண்டு பாடத்தில், "மாப்லாஸ்"களுக்கு (மலப்புரத்தில் வாழும் "மலபார்" முஸ்லிம்கள்) எதிராக "கேரள சம்ஸ்காரம்" என தலைப்பிட்டு 31ம் பக்கத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலமான 1921ல், 500 முதல் 600 ஹிந்துக்களை, மாப்லாஸ்கள் கொன்றதாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும், 1883ல், 2000 ஹிந்துக்களை "காட்டாய மத மாற்றம்" செய்ததாகவும் ஆதாரமற்ற செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
இது போன்ற "மத துவேஷ கருத்துக்களை" அறிந்த CFI மானவரமைப்பினர், இந்த கட்டுரையை சமர்ப்பித்துள்ள பிரியதர்சன்லால் என்பவர், "ஆர்.எஸ்.எஸ்." தொடர்புடையர் என்பதையும் கண்டறிந்தனர்.
அதை தொடர்ந்து, பல்கலைக்கழக வாசலுக்கு சென்று மேற்படி பாடப்புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதியை "தீ" வைத்துக்கொளுத்தியதுடன் அடுத்தக்கட்ட போராட்டத்தையும் அறிவித்தனர்.
அதை தொடர்ந்து, "காலிகட்" பல்கலைக்கழக துணைவேந்தர் ஊரில் இல்லாத நிலையிலும், அவசரமாக கூடிய "பல்கலைக்கழக நிர்வாக கமிட்டி" மேற்படி ஆட்சேபகரமான பகுதியை உடனே நீக்கிவிடுவதாக அறிவித்தனர்.
மேலும், கேரளாவின் தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்ட புத்தகங்களை திரும்ப பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் அகதிகளுக்கு தொடரும் ரிஹாபின் சேவை!

rehab india foundation asssam
புதுடெல்லி:ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், அஸ்ஸாம் அகதிகள் முகாம்களில் நிவாரண உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. சிராங், துப்ரி, கொக்ராஜர், பேர்பட்டா மாவட்டங்களில் உள்ள 58 அகதிகள் முகாம்களில் உள்ள 56,644 பேருக்கு 22,59,701 ரூபாய் மதிப்புடைய நிவாரண உதவிகளை ரிஹாப் வழங்கியது. இந்த உதவிகளை வழங்கும் பணிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை தாங்கினார்.
கடந்த 3 தடவையாக 23,330 குடும்பங்களுக்கு காட்டன் சேலைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், உணவு வகைகள், கொசு வலை, தார்ப்பாய், ப்ளாஸ்டிக் பக்கெட், மக், பாத்திரங்கள் ஆகியன ரிஹாப் சார்பில் விநியோகிக்கப்பட்டன. மேலும் அகதிகள் முகாம்களில் 9.7 லட்சம் ரூபாய் செலவில் மொபைல் மெடிக்கல் யூனிட்டும் ரிஹாப் சார்பாக சேவையில் ஈடுபட்டுள்ளது