26 Nov 2012
புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத்தில் குஜராத் இனப்படுகொலை மாடலில் கலவரம் நிகழ்ந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் வகுப்புவாத எதிர்ப்பு முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
குஜராத்தைப் போலவே பிற்படுத்தப்பட்ட சமூகங்களான யாதவ், கேவத், முரோண்ஸ் ஆகியோரை முஸ்லிம்களுக்கு எதிராக உபயோகித்தது, உள்ளூர் போலீஸ் வன்முறையாளர்களுக்கு உதவியது, தீயணைப்பு படையினருக்கு போதிய தண்ணீர் கிடைக்காதது ஆகியன இதற்கு ஆதாரமாகும் என்று வகுப்பு வாத எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அம்ரேஷ் மிஷ்ரா கூறுகிறார்.
கலவரம் நிகழ்ந்த ஃபைசாபாத்தில் பல இடங்களில் குஜராத் முதல்வர் மோடி மற்றும் பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ லல்லு சிங்கின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.உ.பியை குஜராத்தாக மாற்றுவோம் என்றும், அதனை ஃபைசாபாத்தில் இருந்து துவங்குவோம் என்றும் போஸ்டர்களில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வளவு தூரம் சம்பவங்கள் நிகழ்ந்த பிறகும் இதில் தலையிட உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் மறுத்துள்ளார் என்று அம்ரேஷ் மிஷ்ரா குற்றம் சாட்டுகிறார். சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் சில தலைவர்களுக்கு இக்கலவரத்தில் பங்கிருப்பதாக மிஷ்ரா கூறுகிறார்.
சமாஜ்வாதி கட்சி தலைவர்களான டிம்பிள் பாண்டே, பாபுலால் யாதவ், பிகாபூர் எம்.எல்.ஏ மிஷ்ராசென் யாதவ், பா.ஜ.க எம்.எல்.ஏ ராமச்சந்திர யாதவ், எம்.பி மஹந்த் ஆதித்யானந்த் ஆகியோருக்கும் நேரடியாக கலவரத்தில் பங்குள்ளது.மேலும் மாவட்ட நிர்வாகம், ஹிந்து யுவ வாஹினி ஆகியோருக்கும் கலவரத்தில் பங்குண்டு என்று மிஷ்ரா கூறுகிறார். நன்றி, தூது
0 comments:
Post a Comment