Thursday, November 29, 2012

முர்ஸி காஸ்ஸாவில் தலையிடாமலிருக்க இஸ்ரேலின் சதித்திட்டம்!

முர்ஸி காஸ்ஸாவில் தலையிடாமலிருக்க இஸ்ரேலின் சதித்திட்டம்! 

     லண்டன்:எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆட்சியை சீர்குலைக்க முன்னாள் அரபு லீக் தலைவர் அம்ர் மூஸாவும், இஸ்ரேலின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸிபி லிவ்னியும் ரகசியமாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல் குத்ஸ் அல் அரபி பத்திரிகையின் எடிட்டர் அப்துல் பாரி அத்வான், லண்டனில் அல் ஹிவார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

     இஸ்ரேல் ராணுவம் காஸ்ஸாவில் தாக்குதல் நடத்துவதற்கு 10 தினங்களுக்கு முன்பாக நவம்பர் 4-ஆம் தேதி ரமல்லாவில் எதிர்பாராத சுற்றுப்பயணம் நடத்திய பொழுது லிவ்னி, அம்ர் மூஸாவை சந்தித்துள்ளார். பேச்சுவார்த்தை தொடர்பான ரகசிய தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. காஸ்ஸாவின் மீது தாக்குதல் நடக்கும் வேளையில் உள்நாட்டில் பிரச்சனைகளை உருவாக்கி முர்ஸியின் கவனத்தை திருப்பவேண்டும் என்று லிவ்னி, அம்ர் மூஸாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

     எகிப்திற்கு திரும்பிய அம்ர் மூஸா, அரசியல் சாசனத்தை தயாரிக்கும் கான்ஸ்ட்யூவண்ட் அஸெம்ப்ளியில் இருந்து எவ்வித காரணமுமின்றி விலகி, லிவ்னிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார். அம்ர் மூஸா ராஜினாமா தொடர்பாக எகிப்தில் கடும் சர்ச்சைகள் கிளம்பின.

     இஸ்ரேல்-மேற்காசியா விவகார நிபுணரான பின்ஹாஸ் அல்பரி ரஷ்யா டுடே டி.விக்கு அளித்த பேட்டியில் இதனைக் குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார். உள்நாட்டுக் குழப்பங்களை உருவாக்கி முர்ஸியின் கவனத்தை திசை திருப்ப இஸ்ரேலில் ஒரு குழு முயன்றது என்று அல்பரி தனது பேட்டியில் கூறியிருந்தார். நன்றி, தூது

0 comments:

Post a Comment