Wednesday, November 28, 2012

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

    NOV26, டிசம்பர் 25ந்தேதி இயேசு பிறந்தார், என்பதும் தவறு, வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள வருடமும் தவறு என்று, கத்தோலிக்க மத நிறுவனர் "போப்" ஆண்டவர் "பென்னடிக்ட்" தெரிவித்துள்ளார்.

    போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" அவர்களால் எழுதப்பட்டுள்ள "The Infancy Narraatives" என்ற புத்தகத்தின் 3ம் பாகத்தில், இயேசு பிறந்த நாள் என்று சொல்லப்பட்டு வரும் "டிசம்பர் 25" என்பதும் தவறு, இயேசு பிறந்ததாக நம்பப்படும் வருடத்திலும் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ளதாக கூறுகிறார்,போப்.

    இதற்கு முன்பும் இயேசுவின் வரலாற்றில் தவறுகள் உள்ளன, என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், கத்தோலிக்க நிறுவனரான "போப்" ஒருவரே இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.

    இந்த புத்தகம், 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பல நாடுகளிலும் விநியோகிக்க தயார் நிலையில் உள்ளதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     கிருஸ்தவர்கள், "ஈசா நபி" குறித்து தவறான கொள்கையை கடைப்பிடிக்கின்றனர், என்று கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இஸ்லாமியர்கள் சொல்லி வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment