Monday, November 19, 2012

ஆந்திராவில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு : காவல்துறையின் பாரபட்சத்தை கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் கண்டன ஆர்ப்பாட்டம்


ஆந்திரா : தேசிய அளவிலான ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் குர்னூலில் 10.11.2012 அன்று மாலை 6.30 மணிக்கு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த ஆந்திர காவல்துறைக்கு எதிராக குர்னூலிலுள்ள ஹைதராபாத் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மாபெரும் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் 11.11.2012 அன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஷேக் அப்துல் சுப்ஹான், பொதுச்செயலாளர் டி.எஸ்.ஹபீபுல்லாஹ், தலித் தலைவரும் சோசியல் ஜஸ்டிஸ் ஃப்ரண்டின் மாநில அமைப்பாளருமான வழக்கறிஞர் ஒய்.கொட்டேஷ்வர ராவ், மனித உரிமை ஆர்வலர் பத்மஜா, பேராசிரியர் நெல்ஸன் பால், அகில இந்திய பிற்படுத்த்தப்பட்ட நல இயக்கத்தின் தலைவர் கதலீ சிந்த ராவ், பகுஜன் சமாஜ் மாவட்ட பொதுச் செயலாளர் சத்ய கிருஷ்ண உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தலித் தலைவரும் சோசியல் ஜஸ்டிஸ் ஃப்ரண்டின் மாநில அமைப்பாளருமான வழக்கறிஞர் ஒய்.கொட்டேஷ்வர ராவ் அவர்கள் " முஸ்லிம்-தலித்-பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக செயல்படும் அமைப்புதான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்றும் , பாப்புலர் ஃப்ரண்டின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்தகாவல்துறை நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக " தெரிவித்தார்.

Moulana Usman Baig & Sarwar Chishti sab in Press Conference.protest photoDIFFERENT LEADERS IN SUPPORT OF POPULAR FRONTprotest photo

0 comments:

Post a Comment