தர்மபுரி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட கிராமங்களை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி,கேரளா மாநில பொதுச் செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் தலைமையில் SDPI கட்சியின் நிர்வாகிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர் .
அதன் பிறகு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அறிவிக்கைப்படி வன்முறையால் பாதிக்கப்பட்ட கொண்டாம்பட்டி, அண்ணாநகர், நத்தம் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நிவாரணமாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக ரூ.2 லட்சம் ஒதுக்கப்பட்டது .அதன் முதல் கட்டமாக 14.11.12 அன்று 50 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக 18.11.2012 அன்று மாநில பொருளாளர் A.அம்ஜத் பாஷா தலைமையில் 90 ஆயிரம் மதிப்புள்ள சேலைகள்,கீழ் விரிப்பு , குழந்தைகளுக்கு துணி, தலையணை, T-சர்ட் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சேலம் மாவட்ட தலைவர் B.முகமது ரஃபீ மற்றும் செயலாளர் ஹபிதுல்லாஹ், பொருளாளர் செய்யது அலி ,ஈரோடு மாவட்ட பொதுச் செயலாளர் ஹசன் அலி, திருப்பூர் மாநில செயற்குழு உறுப்பினர் A.பசிர் அஹமது, திருப்பூர் மாவட்ட செயலாளர் MI.ஜாபர் சாதிக் பொருளாளர் அபூபக்கர் சித்திக், மாவட்ட ஊடக தொடர்பாளர் அபுதாகிர் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment