Friday, November 16, 2012

அஸ்ஸாமில் ரிஹாப் மாதிரி கிராமத்தில் இரண்டாம் கட்ட வீடுகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் பாப்புலர் ப்ரண்டின் சேர்மன்



அஸ்ஸாமில் ஹப்சரா கிராம பஞ்சாயத் , போங்கைகோன் மாவட்டத்தில் உள்ள ரிஹாப் மாதிரி கிராமத்தில் இரண்டாம் கட்ட வீடுகள் வழங்கும் திட்டத்தை பாப்புலர் ப்ரண்டின் சேர்மன் இ.எம்.அப்துர் ரஹ்மான் அவர்கள் 11.11.2012 அன்று துவக்கி வைத்தார்கள் . இரண்டாம் கட்டமாக மொத்தம் 31 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது . ரிஹாபின் வீடுகள் வழங்கும் திட்டம் 2008ல் தொடங்கப்பட்டது.

ரிஹாப் அஸ்ஸாம் பகுதி தலைவர் இனாமுத்தீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டாக்டர் பஸர் வரவேற்றார் . ஐமுனா காத்தூன் இறைமறை வசனம் ஓதினார் . பாப்புலர் ப்ரண்டின் சேர்மன் இ.எம் . அப்துர் ரஹ்மான் அவர்கள் துவக்கவுரையாற்றினார் . ஹப்சரா கிராம பஞ்சாயத்து தலைவர் மும்தாஜ் பேகம், என்.சி.ஹெச்.ஆர்.ஓ.தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப், அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் தேசிய செயலாளர் அ.ஷாஹுல் ஹமீது பாகவி, சொசைட்டி ஃபார் டோட்டல் எம்பவர்மெண்ட் ஆஃப் மைனாரிட்டீஸ் பிரதிநிதி டாக்டர் ஷேக் ஹஸ்ரத் அலி அஹ்மத் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.ரிஹாபின் அஸ்ஸாம் பகுதி உறுப்பினர் நௌஷாத் அலி நன்றியுரையாற்றினார்.

பாப்புலர் ப்ரண்டின் சேர்மன் இ.எம் . அப்துர் ரஹ்மான் அவர்கள் முதலாவதாக வீட்டின் சாவியை 1994 ல் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீர் அலிக்கு வழங்க தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்ற குடும்பத்தினருக்கு வீட்டின் சாவிகளை வழங்கினர் . மொத்தமாக 60 வீடுகள் இரண்டு கட்டமாக வழங்கப்படுகிறது.


0 comments:

Post a Comment