28 Nov 2012
அஹ்மதாபாத்:கால அவகாசம் முடிந்துவிட்டதால் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ள எஸ்.ஐ.டி அறிக்கையை குறித்து கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்யும் உரிமையை கொலைச் செய்யப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி இழந்துவிட்டார் என்று அஹ்மதாபாத் பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பல் அரங்கேற்றிய முஸ்லிம் இனப் படுகொலையின் போது குல்பர்க் ஹவுஸிங் சொசைட்டியில் வசித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் கோரமாக கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி., தனது இறுதி அறிக்கையை கடந்த பிப்ரவரியில் அளித்தது. அதில் இனப்படுகொலை சம்பவத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என நற்சான்றிதழ் வழங்கியிருந்தது. இந்தஅறிக்கையை புகார் தாரரான ஜகியாவுக்கு கடந்த மே மாதம் அனுப்பிய எஸ்.ஐ.டி., அறிக்கையை ஆட்சேபித்து எதிர்த்து மனு தாக்கல் செய்ய 2 மாதங்கள் கால அவகாசம் இருப்பதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், அவர் காலம் கடந்து மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக ஸாகியாவின் வழக்குரைஞர் எஸ்.எம்.வோரா கூறியது: எஸ்.ஐ.டி.யின் அறிக்கை கிடைத்ததும், அது தொடர்பாக சில விவரங்களைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு முடிவு தெரியும்வரை, கீழ் நீதிமன்றங்கள் காத்திருப்பது வழக்கம். ஆனால், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன கூறப்போகிறது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலேயே கீழ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்”என்றார். நன்றி, தூது
0 comments:
Post a Comment