Tuesday, November 20, 2012

குறிவைக்கப்படும் "ஜம்யியத்துல் உலமா" : குல்சார் ஆசமி குற்றச்சாட்டு!

    NOV20, மும்பை போலீஸ், முஸ்லிம் இயக்கங்களை குறிவைத்து கண்காணிப்பதாகவும், குறிப்பாக "ஜம்யியத்துல் உலமா ஹிந்த்" அமைப்பு குறித்து, துருவித்துருவி விசாரித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார், மாநில சட்டத்துறை செயலாளர் குல்சார் ஆசமி.
   
          நேற்று (19/11) ஜம்யியத்தின் "இமாம் பாடா" அலுவலகத்துக்கு வந்த, முஸ்லிம் பிரிவை கவனிக்கும் ("M"பிரான்ச்) போலீசார் இருவர், தன்னிடம் ஜம்யியத் தலைவர்கள் குறித்து சரமாரி கேள்விகள் கேட்டதாக தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஜம்யியதுல் உலமா நிர்வாகிகள் குறித்த, பாஸ்போர்ட், வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து சென்ற "M" பிரிவு போலீசார், மீண்டும் மீண்டும் தங்களை "குறிவைத்து" விசாரிப்பது, முஸ்லிம் சமூகத்தையே குற்றப்பரம்பரையினராக சித்தரிப்பதாக உள்ளது என்றார்.

         சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஜம்யியத், கடந்த 1919 முதல், பதிவு செய்யப்பட்டு செயல்பட்டுவரும் இயக்கமாகும்.

        முஸ்லிம் சமூக மேம்பாடுகளுக்காக பாடுபட்டு வரும் இந்த இயக்கம், வெளிப்படையான செயல்பாடுகள் கொண்டது என்றார்.

         மேலும், இவ்வியக்கத்தின் வரவு-செலவு கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறை தணிக்கை அதிகாரிகளின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதன் நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட விவரங்களும் பட்டியலும், ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு தெரியப்படுத்தப்படுவதாக சொன்னார்,ஆசமி.

        முஸ்லிம் இயக்கங்களுடன் இப்படி நடந்துக்கொள்ளும் காவல்துறை, ஹிந்துத்துவ இயக்கங்களை - சாமியார்களின் ஆசிரமங்களை நெருங்க முடியுமா? எனக்கேள்வி கேட்டார். நன்றி மறுப்பு

0 comments:

Post a Comment