NOV30, அஸ்ஸாமில் ஒரே ஒரு "வங்கதேசத்தவர்" கூட இல்லை என, அஸ்ஸாம் மாநில முதல்வர் "தருண் ககோய்" தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள அஸ்ஸாம் பவனில் நேற்று (29/11) செய்தியாளர்களை சந்தித்த அஸ்ஸாம் முதல்வர், மாநிலத்தில் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், ஒரே ஒரு வங்கதேசத்தவர் கூட கண்டு பிடிக்கப்படவில்லை, என தெரிவித்தார்.
மேலும், கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூட "அந்நிய நாட்டவர் அல்ல" என தெரிவித்த அவர், பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்த 4,85,921 நபர்களும் சொந்த நாட்டு குடிமக்கள் தான் என்றார்.
இதில், வங்கதேசத்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முதல்வர், அஸ்ஸாம் மாநிலத்தின் எல்லைகள் 97% வேலி அமைக்கப்பட்டு "பங்களாதேஷ் குடியேற்றக்காரர்கள்" உள்ளே நுழையாதவாறு பாதுகாப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மொத்தமுள்ள எல்லைப்பகுதிகளான, 224 கி.மீ.ல் 218 கி.மீ.அளவுக்கு வேலியமைக்கப்பட்டுள்ளதாகவும் "காலம் கடந்து" புள்ளி விவரங்களை தருகிறார்,முதல்வர்.
வங்கதேச குடியேற்றக்காரர்கள் என "பொய் பரப்புரை"களை செய்து, முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்து, சவக்குழிகளில் தள்ளிவிட்டு சாவகாசமாக செய்திகளை வெளியிடுவதால் என்ன பயன்?
இறையாண்மையை பற்றி வாய்க்கிழிய பேசும் அரசுகள் "போடோக்களிடம் உள்ள ஆயதங்களை" கைப்பற்ற முடியாத - ஆண்மையற்ற அரசுகளாக இருப்பதால், எம் சொந்தங்கள் அடிக்கடி செத்து மடியும் நிலை உள்ளது.
உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்போது, முஸ்லிம்களின் நெஞ்சம் பதைக்கிறது; இரத்தம் கொதிக்கிறது.
0 comments:
Post a Comment