Sunday, November 11, 2012

மக்காவில் நடைபெற்ற அதிரையர் திருமணம்







உலகில் பெற்றோர்களைப்  பொறுத்தவரையில் அவர்கள பெற்றடுத்த பிள்ளைகளின் திருமணத்தை,  நடத்துவதற்கு அவர் அவர்கள் ஒரு வித ஆசைகளில் இருப்பார்கள். இதில் ஒரு சிலர் ஆகாயத்தில் நடத்த வேண்டும் ஒரு சிலர் விமானத்தில் நடத்த வேண்டும் ஒரு சிலர் பல கோடிகளை செலவழித்து பிரமாண்டமாக, ஆடம்பரமாக திருமணத்தை நடத்த வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
 
 அது போல் நமதூர் சகோதரர் தன்னுடைய  பிள்ளையின் திருமணத்தை நமது கண்மணி நாயகம் பிறந்த ஊரான மக்காவில் நடத்த வேண்டும் எனபது அவரின் ஆசை.அந்த ஆசை தற்போது நிறைவேறியும் விட்டது. 
ஆம் இந்த சுவாரசிய திருமணத்தின்  சொந்தக்காரர்கள்,ஆலடித்   தெருவை சார்ந்த சகோ.மீராசாஹிப்(மரியம்&கோ உரிமையாளர்) அவர்களின் மகனான  ஷபீக் அஹமது அவர்களுக்கும் ஆலடித்  தெருவை சார்ந்த சகோ.A.K.பதுருதீன் (டால்ஃபின் ஹஜ் சர்வீஸ் உரிமையாளர்) அவர்களின் மகளானB.புஷ்ரா அவர்களுக்கும் திருமணம் நடைப்பெற்றது.



இவர்களது திருமண நிகழ்ச்சி நேற்று முன்தினம் மக்கா ஹரம் ஷரீபில்  இஷா தொழுகைக்கு பின் மணமக்களின் குடும்பத்தினர் மற்றும்  உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மிக எளிமையாகவும் சுன்னத்தான முறையிலும்  நடைபெற்றது.




மிகக் குறுகிய கால ஏற்பாடான இந்நிகழ்ச்சியில் மக்கா மற்றும் ஜித்தா பகுதிகளில் உள்ள நமதூர் சகோதரர்கள் கலந்துகொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்தனர்.




மக்காவில்  நமதூரை சார்ந்த ஒருவருக்கு நடைபெறும் முதல் திருமணம் என்ற சிறப்பை இது பெறுகிறது.

0 comments:

Post a Comment