திருவனந்தபுரம் : ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் திருவனந்தபுரத்தில் கூடியது வெறுமெனே கூடிக்கலைவதற்காக வந்த கூட்டம் அல்ல மாறாக ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு தடையாக இருக்கும் சக்திகளை எதிர்கொள்ளும் உறுதியுடன் அதிகார சக்திகளின் எத்தகைய ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக தங்களது ஒற்றுமையை பறைசாற்றியது போல் இருந்தது .
புதரிகன்டம் மைதானத்திற்கு அலைஅலையாய் வந்தவண்ணம் இருந்த பாப்புலர் பிரண்ட் செயல்வீரர்கள் தெரிவித்த செய்தி என்னவெனில் வகுப்புவாத பாசிசத்தால் பாதிக்கப்பட்ட ஒருசில உளவுத்துறையினர் மற்றும் ஊடகங்கள் பரப்பிய அவதூறுகளை விட பாப்புலர் ப்ரண்டின் செய்தியும் அதன் நோக்கமும் நியாயமானவை வீரியமானவை என்பதை நிரூபித்தது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தனது வரலாற்று கடமைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது : தேசிய துணை தலைவர் முஹம்மது அலி ஜின்னா
சரியாக 4:30 மணியளவில் ஒற்றுமை கீதத்துடன் துவங்கிய இந்த மாபெரும் மாநாட்டை துவக்கி வைத்து பேசிய தேசிய துணை தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் , " சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் சம நீதிக்காகவும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா போராடிவருகிறது. ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு தடை போடவே பாப்புலர் பிரண்டிற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது . இதுவரை பரப்பிய எந்த குற்றச்சாட்டும் நிருபிக்க படவில்லை என்பதே உண்மை . எனவே தனது கடமைகளில் இருந்து பாப்புலர் ப்ரண்ட் ஒருபோதும் பின்வாங்காது என சூளுரைத்தார்.
பாப்புலர் ப்ரண்டின் கொள்கைகளில் நடவடிக்கைகளில் குறைகாண முடியாமல் தோற்றவர்கள் அவதூறுகளை அள்ளி வீசி பாப்புலர் ப்ரண்டிற்கு எதிராக தவறான புரிந்துணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தொண்டர்கள் ஒருபோதும் தேசத்திற்கெதிரான அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வரலாறில்லை எனினும் சங்க பரிவார பாசிஸ்டுகள் குண்டு வடிப்புகளிலும் கூட்டுப் படுகொலைகளிலும் ஈடுபட்டது நாட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர் தேசத்தை நீதியால் கட்டமைக்க வருமாறு அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ".
இந்த நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் கேரளா மாநில தலைவர் கரமன அஷ்ரப் மௌலவி தலைமை தங்கினார் . கேரளா அரசின் தலைமை கொறடா பி. சி. ஜார்ஜ் அவர்களின் வாழ்த்து செய்திமடல் மாநாட்டில் வாசிக்கப்பட்டது .முன்னாள் அமைச்சர் சுரேந்திரன் பிள்ளை, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் மனோஜ் குமார் , பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து வழக்கறிஞர் பிரஹலாதன், நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் தலைவி ஜைனபா , பேராசிரியர் மீரான் மாலிக் (இஸ்லாமிய கூட்டமைப்பு), ஜேம்ஸ் பெர்னாண்டஸ் (லத்தின் கதோலிக ஐக்கிய வேதி), ஆல்பா அப்துல் கதர் ஹாஜி, ஹாபிழ் மூசா நஜ்மி, உள்ளடில் அப்துல் லதீப் மௌலவி , கேரள மாநில பொதுசெயலாளர் பி அப்துல் ஹமீது, துணை தலைவர் கே. ஹெச். நாசர் , டி.கே. அப்துல் சமத், செயலாளர் ,அஷ்ரப் கொட்டரக்கற ஆகியோர் மாநாட்டில் உரை நிகழ்த்தினர்.
ஹிந்துத்துவ சக்திகள் நாட்டின் மதசார்பின்மையை பலவீனப்படுத்துகிறது : ராம் விலாஸ் பாஸ்வான்
முன்னாள் மத்திய அமைச்சரும் லோக் ஜனஷக்தி தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் தொலைபேசி வாயிலாக பாப்புலர் ப்ரண்ட் பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மக்களை வாழ்த்தியும் பேசினார் . ஆர். எஸ்.எஸ் பா.ஜ.க போன்ற பயங்கரவாத சக்திகள் நாட்டின் மதச்சார்பின்மை கட்டமைப்பை பலகீனப்படுத்தி வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சமூக நீதியும் மதச்சார்பின்மை கொள்கையும் முன்னுரையிலேயே தெளிவாக வரையருக்கப்பட்டிருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக வர்ணாசிரம கொள்கைகளை பாசிச சக்திகள் பல்வேறு வடிவங்களில் இன்னமும் கடைபிடித்து நாட்டின் மதச்சார்பின்மை விழுமியங்களை பலவீனப்படுத்தி வருகின்றன. இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளில் முக்கியமானவை மத ரீதியிலான சமூக ரீதியிலான ஜாதி ரீதியிலான பாகுபாடு. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்களும் தலித்துக்களுமே என்றார்.
0 comments:
Post a Comment