23 Nov 2012 பெங்களூர்:அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை கர்நாடகா நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடிச் செய்துள்ளது. சிகிட்சைக்காக ஜாமீன் அனுமதிக்கவேண்டும் என்று கோரி ஜாமீன் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் பாதுகாப்புடன் மஃதனிக்கு சொந்த செலவில் சிகிட்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய நீதிமன்றம் சிகிட்சை வேளையில் குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்க மறுத்துவிட்டது.
கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் மஃதனி. பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். ஆனால், விரைவிலேயே அவர் பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மீண்டும் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா சிறையில் அடைக்கப்பட்டார்.
நீரழிவு உள்ளிட்ட நோய்களால் அவதிப்படும் மஃதனிக்கு ஒரு கண்ணின் பார்வை பறிபோனது. ஒரு காலை இழந்துள்ள மஃதனி நோய்களால் அவதிப்படும் வேளையில் அவரது சிகிட்சைக் குறித்து கர்நாடகா போலீஸ் அலட்சியம் காட்டி வருகிறது. இந்நிலையில் மஃதனிக்கு சிகிட்சை அளிக்க ஜாமீன் அனுமதிக்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு இரக்கம் காண்பிக்காத நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது. நன்றி, தூது
0 comments:
Post a Comment