23 Nov 2012 ஐ.நா:மரணத் தண்டனையை ரத்துச் செய்யவேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதல் வழக்கில் அஜ்மல் கஸாபிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவுடன் மூன் இக்கருத்தை தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மரணத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்த கோரும் தீர்மானத்தை கடந்த திங்கள் கிழமை ஐ.நா நிறைவேற்றியது. இத்தீர்மானத்தை வரவேற்று உரை நிகழ்த்தினார் அவர்.
39 வாக்குகள் எதிராகவும், 110 வாக்குகள் ஆதரவாகவும் இத்தீர்மானத்திற்கு கிடைத்தன. மரணத்தண்டனையை ரத்துச் செய்யக்கோரும்
தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் அடங்கும்.
அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா பொது அவையில் தீர்மானத்தின் மூலமாக உலகம் முழுவதும் மரணத் தண்டனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊட்ட உறுப்பு நாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
இதுவரை கிட்டத்தட்ட 150 உறுப்பு நாடுகள் மரணத் தண்டனையை நிறுத்தி வைக்கவோ, அமல் படுத்தமாலோ உள்ளன என்று சுட்டிக்காட்டிய மூன், இந்நாடுகளின் முன்மாதிரியை பிற நாடுகள் பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தினார். நன்றி, தூது
0 comments:
Post a Comment