புனே : பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக " சமூக ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி " நவம்பர் 4 , 2012 அன்று மகராஷ்டிரா மாநிலம் புனே ஆஜம் கேம்பஸில் உள்ள அசெம்பிளி ஹாலில் வைத்து நடைபெற்றது. UAPA (சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்) கருப்புச் சட்டம் இந்நிகழ்ச்சியின் மையக்கருத்தாக வைத்து விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் , தலித் இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் புனே மாவட்ட கமிட்டி உறுப்பினர் உமைர் தஃபேதாரின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. பாப்புலர் ப்ரண்டின் மகாராஷ்டிரா மாநில தலைவர் சாதிக் குரைஷி அவர்கள் தலைமை ஏற்று , பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? என்ற பிரச்சாரம் குறித்து விளக்கினார்.
பாப்புலர் ப்ரண்டின் மகாராஷ்டிரா மாநில தலைவர் சாதிக் குரைஷி
" சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக போராடி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் மட்டும் எதற்காக தவறான பொய் பிரச்சாரங்களால் குறி வைக்கப்படுகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த போக்கு சட்டத்திற்கு புறம்பானது என்று கூறிய அவர், ஒரு நவீன சமூக இயக்கமான தங்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள சம உரிமை அந்தஸ்தை அனைத்து மக்களுக்கும் பெற்று கொடுப்பது கடமை " என்றும் கூறினார்.
ஆர்பிஐ உறுப்பினர் தட்டா பவுட்
ஆர்பிஐ உறுப்பினர் தட்டா பவுட் , " அரசாங்கம் முஸ்லிம்கள் மற்றும் தலித் மக்களை எவ்வாறு குறிவைக்கிறது " என்பதை தன்னுடைய உரையில் தெரிவித்தார்.
சத்ரபதி சிவாஜி படையின் தலைவர் சுரேஷ் பட்டேல்
அடுத்து உரையாற்றிய சத்ரபதி சிவாஜி படையின் தலைவர் சுரேஷ் பட்டேல் , " முஸ்லிம்கள் மீது இந்துக்கள் கொண்டுள்ள தவறான எண்ணங்களை களைவதற்கே தாங்கள் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார் ".
ஜம்மியத்தே உலமா ஹிந்தின் மகாராஷ்டிரா மாநில துணை தலைவர் ஸாஹித் ஷேக்
ஜம்மியத்தே உலமா ஹிந்தின் மகாராஷ்டிரா மாநில துணை தலைவர் ஸாஹித் ஷேக் , "பாப்புலர் ஃப்ரண்ட் குறித்து மேற்கொள்ளப்படும் தவறான பிரச்சாரங்கள் குறித்தும் இயக்கத்திற்கு உள்ள மக்கள் ஆதரவு குறித்தும் உரையாற்றினார். முஸ்லிம்கள சமூக தளத்திற்கு வருவதை விரும்பாத வகுப்புவாத சிந்தனை கொண்டவர்கள் தான் பாப்புலர் ஃப்ரண்டை குறிவைக்கின்றனர் " என்று தெரிவித்தார்.
லோக்ஷஸான் அந்தோலனின் தலைவர் நீதிபதி கோல்சே பட்டேல்
லோக்ஷஸான் அந்தோலனின் தலைவர் நீதிபதி கோல்சே பட்டேல் , " சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் இன்ன பிற கருப்புச் சட்டங்கள் குறித்தும் உரையாற்றினார். ஜனநாயக விரோத சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார் ".
பாப்புலர் ப்ரண்டின் குல்பர்க்கா மாவட்ட துணை தலைவர் குவாஜா முஹ்சின்
பாப்புலர் ப்ரண்டின் குல்பர்க்கா மாவட்ட துணை தலைவர் குவாஜா முஹ்சின் அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
0 comments:
Post a Comment