Saturday, November 24, 2012

2012-ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் 119 பேர்!

killed   
     பாரிஸ்:கடந்த 15 ஆண்டுகளில் இவ்வாண்டு அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையொன்று கூறுகிறது. வியன்னாவில் உள்ள இண்டர்நேசனல் ப்ரஸ் ரிப்போர்டின் (ஐ.பி.ஐ) புள்ளிவிபரப்படி இவ்வாண்டு இதுவரை 119 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

     1997-ஆம் ஆண்டு முதல் கொலை செய்யப்படும் பத்திரிகையாளர்களின் விபரங்களை ஐ.பி.ஐ சேகரிக்க துவங்கியது. இதற்கு முன்பு 2009-ஆம் ஆண்டு 110 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு 102 பேர் இறந்தனர். அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிரான புரட்சி போராட்டம் நடைபெறும் சிரியாவில் அதிகமான பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.இங்கு 36 பேர் பலியாகியுள்ளனர்.

    செய்திகள் வெளியுலகிற்கு தெரியாமலிருக்க வன்முறையாளர்கள் பத்திரிகையாளர்களை குறிவைக்கின்றார்கள் என்று ஐ.பி.ஐ கூறுகிறது. சோமாலியாவில் இவ்வாண்டு 16 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் பத்திரிகையாளர்களை பொறுத்தவரை ஆபத்தானவை.

      அதே வேளையில் ஆர்.பி.எஃப் போன்ற நிறுவனங்களின் அறிக்கை, ஐ.பி.ஐ இல் இருந்து மாறுபடுகிறது. ஆர்.பி.எஃபின் கூற்றுப்படி, வன்முறையாளர்கள் பத்திரிகையாளர்களை குறிவைக்கவில்லை, மாறாக அவர்கள் மோதலின் போது கொல்லப்படுகின்றனர் என்பதாகும். ஐ.பி.ஐயின் அறிக்கையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு குற்றவியல் புலனாய்வு பத்திரிகையாளர் ஜோதிர்மயி டே கொல்லப்பட்டார். இவர் மிட் டே பத்திரிகையில் பணியாற்றியவர். இவ்வழக்கின் விசாரணை இதுவரை பூர்த்தியாகவில்லை. நன்றி, தூது

0 comments:

Post a Comment