Saturday, November 24, 2012

மரணத்தண்டனை:அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது! – என்.சி.ஹெச்.ஆர்.ஓ

nchro   
    புதுடெல்லி:மரணத்தண்டனைக்கு எதிரான ஐ.நா பொது அவையின் தீர்மானத்தை எதிர்த்ததற்கும்,  அஜ்மல் கஸாபை தூக்கிலிட்டதற்கும் என்.சி.ஹெச்.ஆர்.ஓ மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

     பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடுமையான எதிர்ப்பை சந்திக்கவிருந்த வேளையில் மத்திய அரசு கஸாபை மிக ரகசியமாக தூக்கிலிட்டுள்ளது. அண்டை நாடான நேபாளமும், ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்பட 110 நாடுகள் மரணத்தண்டனைக்கு எதிரான முடிவை எடுத்தபொழுது அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைப் போலவே இந்தியாவும் மரணத் தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்று என்.சி.ஹெச்.ஆர்.ஓ கண்டனம் தெரிவித்துள்ளது.

     மரணத்தண்டனைக்கு எதிரான சிவில் சமூகத்தின் குரல்களுக்கு சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை உண்மைகளின் அடிப்படையிலும், ஆக்கப்பூர்வமாகவும் அணுகும் அமைப்புகளும், தனி நபர்களும்  எந்த வகையில் பார்த்தாலும் மரணத் தண்டனையை அங்கீகரிக்க முடியாது என்று கூறியுள்ளார்கள்.

     மரணத்தண்டனையை தொடரவேண்டுமா? என்ற விவாதம் சர்வதேச அளவில் தொடருகிறது. அதேவேளையில் இந்தியா போன்ற நாடுகள் மரணத்தண்டனைக்கு எதிராக செயல்படுவோரின் முயற்சிகளில் இருந்து நழுவுகின்றன. ஏழ்மையும், பிற்படுத்தப்பட்ட சமூக நிலை காரணமாக சட்ட உதவி கூட கிடைக்காத ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும்தான் அரசு மரணத் தண்டனையை விதிக்கிறது.

     ஐக்கிய நாடுகள் சபையில் அவசரமாக மரணத்தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததும், கஸாபை அவசர அவசரமாக தூக்கிலிட்டதும் இத்தகைய விவகாரங்களில் நாட்டையும், மக்களையும் முன்னேற்றமான பாதையில் கொண்டு செல்ல அரசுகு விருப்பமில்லை என்பதையே காட்டுகிறது என்று என்.சி.ஹெச்.ஆர்.ஓ தலைவர் என்.பாப்பையா, பொதுச்செயலாளர் பேராசிரியர் பி.கோயா ஆகியோர் தெரிவித்துள்ளனர். நன்றி. தூது

0 comments:

Post a Comment