Friday, November 30, 2012

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதல்!


    காஸ்ஸா:தற்போது அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இஸ்ரேல் அடாவடியாக காஸ்ஸா மீது தாக்குதலை நடத்தியுள்ளது. வியாழக்கிழமை காலை யூதப்படையினர் காஸ்ஸாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனுஸின் மத்திய பகுதியில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
    புல்டோஸர்கள், பீரங்கிகளை பிரயோகித்து இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்புக்கு வேலிக்கு அருகே தாக்குதலை நடத்தியுள்ளது. இப்பகுதியில் மேலும் கொஞ்சம் இடத்தை ஆக்கிரமித்து வேலியை மாற்றி நிறுவுவதே இஸ்ரேலின் திட்டம் என்று காஸ்ஸா அதிகாரிகள் கூறுகின்றனர்.
    காஸ்ஸாவிற்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க கூடாது என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. சியோனிஸ்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடாவடிச் செயல்களில் ஈடுபடுவதாக காஸ்ஸாவின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் கடலோரப் பகுதியில் ஃபலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 35 பேருக்கு காயம் ஏற்பட்டது. காஸ்ஸாவில் உள்ள ஆறுக்கும் மேற்பட்ட மீனவ தொழிலாளர்களை இஸ்ரேல் கைது செய்துள்ளது. thanks, thoothu

0 comments:

Post a Comment