30 Nov 2012

லண்டன்:காஸ்ஸாவின் மீது ராணுவ தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்தும், இனிமேலும் இதுபோன்ற அணுகுமுறையை தொடரக் கூடாது எனவும் நோபல் பரிசை வென்றவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பிரிட்டனில் முக்கிய பத்திரிகையான கார்டியன் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
160க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் மக்களின் உயிரை பறிக்க காரணமான போரில், ஆயுதங்களையும், ஆதரவையும் அளிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளையும் அவர்கள் கண்டித்துள்ளார்கள். காஸ்ஸா மக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோபல் பரிசை வென்றவர்கள் உள்பட உலகின் பிரபலமான 52 பேருடைய கையெழுத்துடன் கூடிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. thanks, thoothu
0 comments:
Post a Comment