NOV27, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து கைது செய்வதை கண்டித்தும் - அவர்களை விடுதலை செய்யக்கோரியும், நேற்று (26/11) மதியம் 2 மணி முதல், டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கப்பட்டுள்ளது.
திரளான மக்கள் கூட்டத்துடன் லோக் ஜனசக்தி கட்சியின் பொதுச்செயலார் "அமானத்துல்லாஹ் கான்" துவங்கியுள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில், கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான ராம்விலாஸ் பாஸ்வான், ஜமாத்தே இஸ்லாமியின் பொதுச்செயலாளர் அப்துல் காலிக் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டு, உரை நிகழ்த்தினர்.
நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்ப எண்ணியிருந்த எம்பிக்கள், நாடாளுமன்றம் முடக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து பேசமுடியவில்லை.
எனவே, இன்று (27/11) பல்வேறு கட்சிகளின் 13 எம்பிக்களின் குழு, பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து, இது பற்றி பேசவுள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்பாவிகளை விடுதலை செய்யாவிட்டால், விரைவில் "பிரதமரின் வீட்டை முற்றுகை"யிட்டு போராட்டம் செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று, பிரதமரை சந்திக்கும் குழுவில், லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், சீத்தாராம் எச்சூரி, டி.ராஜா, மணிசங்கர் அய்யர், சிவானந் திவாரி, ராம்கோபால் யாதவ், ஷபீகுர் ரஹ்மான், முஹம்மத் ஷபீ, முஹம்மத் அதீப், அஹ்மத் சயீத், சல்லுவிய சாமி ஆகிய 13 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.
0 comments:
Post a Comment