21 Nov 2012
புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீரில் நீண்டகாலத்திற்கு ராணுவத்தை நிறுத்த மத்திய அரசு விரும்பவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சுசில் குமார் ஷிண்டே கூறியது: “கஷ்மீரில் நீண்டகாலத்திற்கு ராணுவத்தை நிறுத்த மத்திய அரசு விரும்பவில்லை. அதேவேளையில் குறிப்பிட்ட சூழலை கவனத்தில் கொண்டு மேலும் சில காலம் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அங்கு அமலில் இருக்கும். ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்த எனக்கு விருப்பம் உண்டு.
ஆனால், தற்பொழுது ராணுவத்தை வாபஸ் பெற இயலாது. மேலும் சில காலம் சூழல்களை கண்காணிக்க வேண்டியுள்ளது. மாநிலத்தில் பாதுகாப்பு கட்டமைப்பு மேம்பட்டுள்ளது.
ஆனால், தற்பொழுது ராணுவத்தை வாபஸ் பெறுவது ஆபத்தானது. இதனை ஸ்ரீநகரிலும், ஜம்முவின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் வன்முறைகள் சுட்டிக்காட்டுகின்றன என்றார் ஷிண்டே. நன்றி, thoothu
0 comments:
Post a Comment