Sunday, November 11, 2012

கோவையில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாப்புலர் ப்ரண்ட் வேண்டுகோள்


தமிழகத்தின் முன்னணி தொழில்நகரமாம் கோவையில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் சங்கபரிவாரங்கள் கடந்த இரண்டு மாதமாக செயல்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதும், அவர்களின் தொழில் ஸ்தாபனங்களை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வருகிறது .கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி கண்ணப்ப நகர் பகுதியில் உபைதூர் ரஹ்மான் என்பவரது கடையை தீவைத்து எரித்துள்ளனர் . வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் இன்றுவரை கைது செய்யப்படவில்லை . இன்றைய தினம் வரை முஸ்லிம்களின் நான்கு வணிக ஸ்தாபனங்களுக்கு பல்வேறு இடங்களில் தீவைத்துள்ளனர் .

மேலும் விநாயகர் சதுர்த்தி பொதுக்கூட்டங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகள் முஸ்லிம்களை அச்சுறுத்தும் நோக்கிலும் ,பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் 1997 -ல் கோவையில் நடந்த கலவரத்தின் போது காவல்துறை இந்துக்களுக்கு இரண்டு நாட்கள் ஒத்துழைத்தது போன்று ஒருநாள் ஒத்துழைப்பு தந்தால் கோவையை குஜராத்தை போன்று கலவர பூமியாக்குவோம் . என மத துவேசத்தை தூவி இனக்கலவரத்தை தூண்டி உள்ளார்கள். இவர்கள் மீது சட்டப்படி இன்று வரை நடவடிக்கை இல்லையென்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் 05.11.12 அன்று மேட்டுப்பாளையத்தில் முஸ்லிம் பெண்கள் மீது இந்துத்துவ பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் . இந்நிலையில் மறுதினம் ஆர்.எஸ். எஸ் . பிரமுகர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார் . காவல்துறை விசாரணை செய்து உண்மைகுற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் , கலவர மோகம் கொண்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் கடைகள் எரிப்பு ,மதகுரு மீது தாக்குதல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் ,ஆயுதங்களுடன் ஆர்ப்பாட்டம் ,அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் இந்துத்துவ பயங்கரவாதிகள் சுதந்திரமாக ஈடுபட்டுவருகிறார்கள் .

இந்துத்துவ பயங்கரவாதிகளின் இச்செயலை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது . மேலும் தமிழ அரசும் , காவல்துறையும் கோவையில் அமைதி நிலவ உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கேட்டுக் கொள்கிறது.

0 comments:

Post a Comment