16 Nov 2012
காஸ்ஸா:ஹமாஸின் ராணுவப்பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் கமாண்டர் அஹ்மத் அல் ஜஃபரியை கொலை செய்த சியோனிஷ இஸ்ரேலிய பயங்கரவாத ராணுவம், காஸ்ஸாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை வலுப்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகியுள்ளனர். ஃபலஸ்தீன் போராளிகளின் பதிலடித் தாக்குதலில் 3 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். புதன் கிழமை மாலை காஸ்ஸாவில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது.
நேற்று காலை நடந்த ஒரு ஏவுகணைத்தாக்குதலில் மட்டும் 5 ஃபலஸ்தீன் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் உள்பட 120 ஃபலஸ்தீன் மக்களுக்கு காயம் ஏற்பட்டதாக காஸ்ஸா சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபலஸ்தீன் போராளிகள் 20 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தனர். தெற்கு நகரமான கிரியாத் மலாஹியில் ஒரு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 3 இஸ்ரேலியர்கள் பலியாகினர்.
இன்னொரு தாக்குதலில் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. ஃபலஸ்தீன் போராளிகள் 250 ராக்கெட்டுகளை ஏவியதாக இஸ்ரேல் கூறுகிறத். காஸ்ஸாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளதால் மக்கள் புலன்பெயர்ந்து வருகின்றனர். ஹமாஸின் ராணுவ பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் பிரிகேடின் தலைவரான அஹ்மத் அல் ஜஃபரி பயணித்த காரைக்குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஜஃபரியும், அவரது மெய்க்காப்பாளர் மற்றும் மகனும் கொல்லப்பட்டனர். கிரியாத் மலாஹியில் பதிலடி தாக்குதல் நடத்தியதை இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் உறுதிச் செய்துள்ளது.
ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களை கொலை செய்வோம் என்று இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. ஃபலஸ்தீன் மீது குடியேற்ற ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று சர்வதேச சமூகம் விடுத்துள்ள கோரிக்கையை புறக்கணித்துவிட்டு அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது பயங்கரவாத இஸ்ரேல். கெய்ரோவில் இஸ்ரேலிய தூதரை அழைத்து காஸ்ஸா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார் எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி. மேலும் தாக்குதலை கண்டித்து இஸ்ரேலில் தங்களது தூதரை திரும்ப அழைத்துள்ளது எகிப்து.
முர்ஸியின் கோரிக்கையை ஏற்று காஸ்ஸா நிலைமைகள் குறித்து விவாதிக்க அரபு லீக் சனிக்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிறுத்த அமெரிக்கா தலையிடவேண்டும் என்று எகிப்தின் வெளியிறவுத்துறை அமைச்சர் முஹம்மத் கமால் கோரிக்கை விடுத்துள்ளார். பிராந்தியத்தின் சூழல் கவலை அளிப்பதாக ரஷ்யாவும், பிரிட்டனும் தெரிவித்துள்ளன.
இருபிரிவினரும் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் விமானப்படை, கப்பல் படை ஆகியன ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அல்ஜஸீரா கூறுகிறது.
0 comments:
Post a Comment