29 Nov 2012
மும்பை:சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைவையொட்டி மும்பையில் 2 நாட்களாக நடந்த முழு அடைப்பிற்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இளம்பெண்ணையும், அவரது கருத்துக்கு ஆதரவாக லைக் போட்ட பெண்மணியும் கைது செய்யப்பட்ட சம்பவம் எழுப்பிய சர்ச்சைகள் ஓயும் முன்னரே மீண்டும் மும்பையில் கைது சம்பவம் நடந்துள்ளது.
பால் தாக்கரே மருமகனும், மஹராஷ்ட்ரா நவ நிர்மாண் சேனாவின்(எம்.என்.எஸ்) தலைவருமான ராஜ் தாக்கரேயை ஆட்சேபித்து பல்கரைச் சார்ந்த சுனில் விஸ்வகர்மா(வயது 20) என்ற கம்ப்யூட்டர் பிரிவு மாணவர் ஒருவர் ஃபேஸ்புக்கில் கமெண்ட் வெளியிட்டிருந்தார். இவரை போலீஸ் கைது செய்துள்ளது. ஏற்கனவே 2 மாணவிகள் பல்கரில் தான் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பரில் ஃபேஸ்புக்கில் பக்கத்தை துவக்கிய சுனில் விஸ்வகர்மா, கடந்த திங்கள் கிழமை மாலையில் ஒரு கமெண்டை போஸ்ட் செய்திருந்தார். இதற்கு எதிராக எம்.என்.எஸ்ஸின் மாணவர் அமைப்பின் தலைவர் பவிஷ் சவுர்னே புகார் அளித்திருந்தார். புதன்கிழமை சுனிலின் வீட்டின் முன்பாக எம்.என்.எஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுனில் மீதான வழக்கை தானே சைபர் பிரிவுக்கு மாற்றியதாக தானே உள்ளூர் எஸ்.பி அனில் கம்பாரே கூறியுள்ளார். முன்னர், இளம்பெண்களை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுத்த சம்பவத்தை கண்டித்து பல்கரில் எம்.என்.எஸ் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் புதிய கைது சம்பவம் அரங்கேறியுள்ளது. நன்றி, தூது
0 comments:
Post a Comment