Friday, November 16, 2012

அஸ்ஸாமில் ரிஹாபின் நான்காம் கட்ட நிவாரப் பணிகளை துவக்கி வைத்தார் பாப்புலர் ப்ரண்டின் சேர்மன்



அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை நடைமுறைப்படுத்தி வரும் ரிஹாப் இந்தியாவின் தொண்டூழியர்கள் நேரடியாக களத்தில் இறங்கி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக முறையான குடிநீர் மற்றும் உணவு வசதி செய்து கொடுத்தல்,மருத்துவ வசதி செய்து கொடுத்தல், உடுத்த உடை மற்றும் குளிரில் இருந்து பாதுகாப்பு பெற போர்வைகள் வழங்குதல்,இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக தண்ணீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல் மற்றும் பல உதவிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு ரிஹாப் பல்வேறு உதவிகள் மற்றும் நலத்திட்டங்களை செய்துவருகிறது ஏற்கனவே மூன்று கட்ட உதவிகளை செய்து வந்துள்ளது.

முதலாம் கட்ட நிவாரணப் பணிகளில் குழந்தைகளுக்கான உணவு மற்றும் ஆடைகள் , கொசு வலை , வாலி , மெழுகுவர்த்தி , காட்டன் சேலைகள், போர்வைகள் என மொத்தம் நான்கு இலட்சத்து இருபத்தி ஒன்னாயிரம் (ரூ .4,21,000) ரூபாய் மதிப்பிற்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டது . அதுபோல் இரண்டாம் கட்ட நிவாரண பணிகளில் நான்கு இலட்சத்து எழுபத்தி இரண்டாயிரம் (ரூ.4,72,000) ரூபாய் மதிப்பிற்கும் மூன்றாம் கட்ட நிவாரண பணிகளில் பதினான்கு இலட்சத்து ஒன்பதாயிரத்து ஐம்பது (ரூ . 14, 09 , 050) ரூபாய் மதிப்பிற்கு பொருட்கள் என மொத்தம் இருபத்தி மூவாயிரத்து முன்னூற்றி முப்பது (23,330) குடும்பங்கள் பயன்பெறும் வகையில் விநியோகிக்கப்பட்டது. மொத்தம் மூன்று கட்ட நிவாரண பணிகளையும் சேர்த்து 23 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பிற்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

 அதனை தொடர்ந்து 11.11.2012 ஞாயிற்றுகிழமை அன்று நான்காம் கட்ட நிவாரண பணிகளை பாப்புலர் ப்ரண்டின் சேர்மன் இ .எம்.அப்துர் ரஹ்மான் அவர்கள் துவக்கி வைத்தார்கள் . ரிஹாப் மாநில தலைவர் இனாமுத்தீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டாக்டர் பஸர், ஹபாஸரா கிராம பஞ்சாயத்து தலைவர் மும்தாஜ் பேகம், என்.சி.ஹெச்.ஆர்.ஓ.தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப், அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் தேசிய செயலாளர் அ.ஷாஹுல் ஹமீது பாகவி, சொசைட்டி ஃபார் டோட்டல் எம்பவர்மெண்ட் ஆஃப் மைனாரிட்டீஸ் பிரதிநிதி டாக்டர் ஷேக் ஹஸ்ரத் அலி அஹ்மத் ஆகியோர் உடனிருந்தனர் . 

இதில் சிராங் மாவட்டத்தில் உள்ள நான்கு முகாம்களிலுள்ள 4322 பேர் பயன்பெறும் வகையில் 1.85 இலட்சம் மதிப்பிற்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் சிராங் , துப்ரி மற்றும் கோக்ரஜார் மாவட்டங்களிலுள்ள 46 முகாம்களிலுள்ள 25462 பேர் பயன்பெறும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் என மொத்தம் 10.20 இலட்சம் மதிப்பிற்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

ஆக மொத்தம் இதுவரை 33.20 இலட்சம் மதிப்பிற்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணியின் ஓர் அங்கமாக 9.70 இலட்சம் மதிப்பிலான நடமாடும் மருத்துவமனையையும் ரிஹாப் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியுள்ளது .


0 comments:

Post a Comment