23 Nov 2012
டமாஸ்கஸ்:பஸ்ஸாருல் ஆஸாதின் ராணுவம் ஜனநாயகம் கோரி போராடும் மக்கள் மற்றும் எதிர்கட்சியினர் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதலில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 37,873 ஆகும்.
சிவிலியன்கள் மீது ஒரே நேரத்தில் வான் தாக்குதலும், தரைவழி தாக்குதலும் தொடுக்கப்பட்டதால் மரண எண்ணிக்கை
இவ்வளவு அதிகரித்துள்ளது.
இவ்வளவு அதிகரித்துள்ளது.
மனித உரிமை அமைப்புகள் பலியானவர்கள் குறித்த புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளன. பல மாதங்களாக தொடரும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் வீணாகியுள்ளன.
அதனிடையே, சில தினங்களுக்கு முன்பு சிரியாவின் நகரங்களில் நடந்த தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டனர். ரீஃப், டமாஸ்கஸ், ஹல்ப், இத்லிப் ஆகிய பகுதிகளில் சிரியா ராணுவமும், எதிர்ப்பாளர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆகையால் மரண எண்ணிக்கை இனியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நன்றி, தூது
0 comments:
Post a Comment