Friday, November 2, 2012

ஹைதராபாத் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.

NOV 2, ஹைதராபாத்தை சேர்ந்த "ஜேம்ஸ்" என்பவர், தன் குடும்பத்துடன் "துபை"யில் வசித்து வருகின்றார்.
இவருக்கு மனைவியும், மகளும், மகனும் உள்ளனர்.
மகன் திருமணமாகி, அவரும் மனைவியுடன் வசித்து வருகின்றார்.
இந்த குடும்பம், தற்போது இஸ்லாத்தை தழுவி முறையே, ஜேம்ஸ் "முஹம்மது" என்றும், இவரின் மனைவி "மரியம்" என்றும், மகள் "ஆயிஷா" என்றும், மகன் "ஈஸா" என்றும் மருமகளுக்கு  "சாரா" என்றும் "இஸ்லாமிய பெயர்களை சூட்டி" தங்களை இஸ்லாமிய குடும்பத்துடன் இணைத்து கொண்டுள்ளனர்.
இஸ்லாத்தை ஏற்ற இவர்களைப்பற்றி "துபாய் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் தலைமை வழிகாட்டி ஹுதா அல் காபி" கூறுகையில், இவர்களாகவே இங்கு வந்து கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தை ஏற்றனர்.
இவர்களுக்கு, யாரும் இஸ்லாத்தை போதிக்கவில்லை, இவர்களின் ஆர்வம், தம்மை பிரமிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இஸ்லாத்தை தழுவிய ஜேம்ஸ், "கலீஜ் டைம்ஸ்" பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், "கடவுள் இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ இருக்க முடியாது" என்றும், ஒரே கடவுள் கொள்கைதான் சரியான தேர்வு என்றும் கூறியுள்ளார்.
மேலும் இவர் கூறுகையில், கடந்த இரண்டு வருடமாக,  இஸ்லாமிய புத்தகங்களை படித்து இஸ்லாத்தை அறிந்து கொண்டதாகவும், குரானின் ஆங்கில பதிப்பை படித்து இஸ்லாத்தை உணர்த்து கொண்டதாகவும், தன்னுடைய சுயவிருப்பத்தின் பெயரிலேயே இஸ்லாத்தை ஏற்றதாகவும் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment