Friday, November 30, 2012

ஃபலஸ்தீனுக்கு ஐ.நா வில் கண்காணிப்பு உறுப்பினராக அங்கீகாரம்!

General Assembly recognizes Palestine as observer state
    ஐ.நா:ஐக்கிய நாடுகளின் பொது அவையில் கண்காணிப்பு உறுப்பினராக ஃபலஸ்தீனுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஃபலஸ்தீன் ஆணையம், தலைவர்கள் மற்றும் தூதரக பிரதிநிதிகளின் வெற்றியாக இந்த அங்கீகாரம் கருதப்படுகிறது.
    193 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐ.நா பொது அவையில் 138 நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தன. 9 நாடுகளின் ஃபலஸ்தீனின் கோரிக்கையை எதிர்த்து வாக்களித்தன. பிரான்சு, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தபோது அமெரிக்கா எதிர்த்து வாக்களித்தது.  பிரிட்டன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. செக், கனடா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. thanks, thoothu

0 comments:

Post a Comment