Friday, November 30, 2012

அதிராமபட்டிணம் கொலை சம்பவம்! நடந்தது என்ன? எஸ்.டி.பி.ஐ கட்சி தஞ்சை மண்டல பொறுப்பாளர் G.அப்துல் சத்தார் விளக்கம்

  

    
    அதிராமபட்டிணம் கீழத்தெருவை சேர்ந்த காஜா முகைதீனுக்கும், பிலால் தெருவை சேர்ந்த காதர் முகைதீனுக்கும் ஏற்பட்ட தகராறின் முடிவில் 23 நவம்பர் 2012 அன்று மாலை காதர் முகைதீன் கத்தியால் குத்தியதில் காஜாமுகைதீன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சிகிச்சை பலனின்றி 24ம் தேதி அதிகாலையில் மரணமடைகிறார். கத்தியால் குத்திய காதர் முகைதீன் காவல் நிலையத்தில் சரணடைகிறார்.
 
     இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு குளிர் காய நினைத்த TNTJ அமைப்பினர், கொலையாளி கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்.டி.பி.ஐ க்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திலும், மக்களை திரட்டும் பணியிலும் ஈடுபட்டதோடு எஸ்.டி.பி.ஐ ன் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும், காவல்துறையினரிடம் முன்வைத்து நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். அதோடு எஸ்.டி.பி.ஐ கட்சியை சம்பந்தப்படுத்தி போஸ்டர் ஒட்டுவது, போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பது, தங்களது பத்திரிக்கையில் செய்திகளை பரப்புவது போன்ற ஈனத்தனமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் இல்யாஸ் வீட்டை இரவு நேரத்தில் முற்றுகையிட்டு தாக்கியுள்ளனர். அந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
கொலையாளி காதர் மைதீனுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் எஸ்.டி.பி.ஐ கட்சியில் சாதாரண உறுப்பினராகவோ, செயல்வீரராகவோ, நிர்வாகியாகவோ இல்லாதவர். இந்நிலையில் இவரை எஸ்.டி.பி.ஐ கட்சியோடு சம்பந்தப்படுத்துவது எஸ்.டி.பி.ஐ ன் கட்சியின் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பொறாமையும், தங்களது குள்ளநரி செயல்களுக்கு எஸ்.டி.பி.ஐ தடையாக இருக்கும் என்பதையும் தவிர வேறில்லை.
 
கொலைக்கான காரணம் :
     நடந்த கொலை சம்பவத்திற்கு கட்சி, இயக்கம் அல்லது கொள்கை ரீதியான எந்த காரணமும் இல்லை. காதர் முகைதீனின் குடும்பத்துப் பெண்ணிடம் காஜா முகைதீனின் சகோதரர் தவறான தொடர்பு ஏற்படுத்தியுள்ளார். இதை காதர் முகைதீன் தட்டிக் கேட்டதால் காஜா முகைதீன் உட்பட ஒரு கும்பல் காதர் முகைதீன் வீட்டை தாக்கியுள்ளனர். அவரின் தாயையும் தாக்கியுள்ளனர். இந்த முன்விரோதமே கொலையில் முடிந்துள்ளது.
ஒரு கலாச்சார சீரழிவிற்காக நடந்த கொலையைத்தான் வீணாய் போன இயக்கத்தை சேர்ந்தவர்கள் திசை திருப்பப் பார்க்கின்றனர் என்றால் இவர்களை என்ன சொல்வது?
 
     கொலைக்கான மேற்படி காரணம் கொலையாளி காதர் முகைதீனால் போலிசில் வாக்கு மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது. தினசரி நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது. இந்த விபரங்களை நாம் குறிப்பிடுவது கொலை செய்யப்பட்டவரை குற்றப்படுத்துவதற்காகவோ, கொலையாளியை நியாயப்படுத்துவதற்கோ அல்ல. மாறாக இயக்கம் மற்றும் கட்சி ரீதியான எந்த காரணமும் இன்றி குடும்ப முன் விரோத்தால் நடந்த இந்த கொலையை சமூக அமைதியை, ஒற்றுமையை விரும்பாத இயக்கத்தினர், எஸ்.டி.பி.ஐ கட்சியோடு சம்பந்தப்படுத்த முயல்கிறார்கள் என்றால் அதன் குறுகிய புத்தியை சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
 
     நடந்த கொலை சம்பவம் கண்டிக்கத்தக்கது, வருத்தத்திற்குரியது. கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும். இதுவே எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிலைப்பாடு.
 
    இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சம்பந்தப்படுத்துவதற்கு என்ன காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் விளக்க வேண்டும்.
 
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மீதும், நிர்வாகிகள் மீதும் நடத்தப்படும் அவதூறு பிரச்சாரம் மற்றும் தாக்குதல்களை எஸ்.டி.பி.ஐ கட்சி சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எத்தகைய அவதூறுகளையும், நெருக்கடிகளையும் சந்திக்கும் ஆற்றல் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உண்டு. இறை உதவியால் இதற்கு முன்பு முறியடித்ததைப் போன்று இது போன்ற சதிகளை இலகுவாக முறியடிப்பார்கள் என்பதையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
 
சத்தியம் வந்துவிட்டது !
அசத்தியம் அழிந்துவிட்டது! நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியதே!
 
 
இப்படிக்கு
G. அப்துல் சத்தார்,
மாநில செயலாளர்
மற்றும்
ஞ்சை மண்டல பொறுப்பாளர்
எஸ்.டி.பி.ஐ கட்சி

0 comments:

Post a Comment