Thursday, May 16, 2013

பெங்களுர் குண்டுவெடிப்பு கைது! கோவையில் அனைத்து இஸ்லாமிய இயக்க தலைவர்கள்!

16 May 2013
 
     பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தின் மேலப்பாளையம் மற்றும் கோவை பகுதிகளிலிருந்து 10 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக போலீசார் உதவியுடன் பெங்களூர் போலீஸார் அவர்களை கைது செய்து கடுமையான சித்திரவதைகளை செய்து வருகி்ன்றனர்.

      தொடரும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

     எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் அதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் முழுவதும் முழு அடைப்பு மற்றும் தர்ணாவும் நடைபெற்றது. சென்னையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
      இந்நிலையில் கோவை பகுதியில் சோதனை என்ற பெயரில் வெடிக்குண்டு நாடகங்களை அரங்கேற்றும் கீழ்த்தரமான வேலைகளை போலீசாரும், உளவுத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். கோவை பகுதியை மீண்டும் ஒரு பதட்டமான பகுதி போல் சித்தரிக்கும் வேலையிலும் உளவுத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 
      இந்நிலையில் இன்று தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி கூட்டமைப்பின் தலைவர்கள் கோவைக்கு சென்று, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், ஜமாத் தலைவர்களை நேரில் சந்திக்கின்றனர். இதனையடுத்து கோவை மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து உண்மை நிலையை விளக்கவுள்ளனர்.
 
      இந்த சந்திப்பில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹனீபா, ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் அப்துல் ரஹ்மான் சாகிபு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் A.S. இஸ்மாயில், தமுமுக வின் பொது செயலாளர் அப்துல் ஸமது, தேசிய லீக் தலைவர் இனாயதுல்லாஹ், வெல்ஃபேர் பார்டி ஆப் இந்தியாவின் ஜெய்னுல் ஆபீதீன் மற்றும் கூட்டமைப்பின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment