Friday, May 3, 2013

முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு:சாதாரண மனிதர்களின் பாதுகாப்பின் நிலை என்ன?-மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

                               2 May 2013 centre-draws-flak-from-supreme-court-for-giving-z-security-to-mukesh-ambani
 
புதுடெல்லி:தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
தனி நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், சாதாரண மனிதர்களுக்கான பாதுகாப்பின் நிலை என்ன என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் சரியான பாதுகாப்பு இருந்திருந்தால், 5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்காது என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு, சமீபத்தில் இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்திலும் உள்ள முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்ததாகவும், மும்பையில் உள்ள அவருக்குச் சொந்தமான பிரமாண்டமான அன்ட்டிலா சொகுசு வீ்ட்டை தகர்க்கப் போவதாக எச்சரித்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment