20 May 2013
புதுடெல்லி:சட்டீஷ்கர் மாவட்டம் பிஜாப்பூரில் இஹாத்ஸமத்தே கிராமத்தில் சி.ஆர்.பி.எஃப் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட எட்டுபேர் அப்பாவி கிராமவாசிகல் கொல்லப்பட்டனர்.ஏராளமானோரை காணவில்லை என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்.இதனிடையே தங்களின் சிறப்பு படையான கோப்ராவைச் சார்ந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டதாக சி.ஆர்.பி.எஃப் கூறுகிறது.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிராமவாசிகள் என்பதை உறுதிச் செய்த சி.ஆர்.பி.எஃப் ஒரு மாவோயிஸ்ட் முகாமை அழித்துள்ளதாக கூறுகிறது. இச்சம்பவம் குறித்து சட்டீஷ்கர் போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளது. கிராமவாசிகள் வருடாந்திர விதை தூவும் திருவிழாவை கொண்டாடும்போது பாதுகாப்பு படையினர் எவ்வித காரணமுமின்றி அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு சி.ஆர்.பி.எஃப் ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.அதே கிராமத்தில் தான் இம்முறையும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.2012-ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் மாவோயிஸ்டுகள் என்று சி.ஆர்.பி.எஃப் கூறியது. ஆனால், விசாரணையில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி கிராமவாசிகள் என்பது நிரூபணமானது.கடந்த ஆண்டும் விதை தூவும் திருவிழாவில்தான் சி.ஆர்.பி.எஃப் அநியாயமாக கிராமவாசிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது
0 comments:
Post a Comment