Friday, May 24, 2013

மாலேகான் குண்டுவெடிப்பு:அஸிமானந்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

                         22 May 2013 asimananda
 
     புதுடெல்லி:37 பேர் பலியான மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மீது தேசிய புலனாய்வு ஏஜன்சி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. குண்டுவெடிப்பில் மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை அநியாயமாககைதுச் செய்த ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்று தெளிவுபடுத்தியே இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
 
     அஸிமானந்தா, பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகளான லோகேஷ் சர்மா, ராஜேந்தர் சவுத்ரி, டான்சிங், கொலைச்செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா, அமித் சவுஹான் ஆகியோரின் பெயர்களும்குற்றப்பத்திரிகையில் இடம்பெறும்.இதில் டாங்கே, கல்சங்கரா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகளுக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஆகிய குண்டுவெடிப்புகளில் பங்கும்குறிப்பிடப்படும்.
 
     ஷபீர் அஹ்மத் என்ற முஸ்லிம் இளைஞரின் கோடவுனில் இருந்து வெடிக்குண்டுகளை கைப்பற்றியதாக கூறி மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை முஸ்லிம் இளைஞர்களை மாலேகான் குண்டுவெடிப்பில் கைதுச் செய்திருந்தது. என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பதன் மூலம் இவர்கள்விடுவிக்கப்படுவார்கள்.தற்போது ஜாமீனில் இருக்கும் இவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கோரவும் உரிமை உண்டு.ராம்ஜி கல்சங்கராவும், சந்தீப் டாங்கேவும் தயாரித்த குண்டுகளை சுனில் ஜோஷி, ராஜேந்தர் சவுத்ரிக்கும், டான்சிங்கிற்கும் வழங்கியதாக என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது. இவர்கள் தாம் வெடிக்குண்டு பொருத்திய மோட்டார் சைக்கிளை மாலேகான் மஸ்ஜிதுக்கு அருகே கொண்டு வைத்துள்ளனர்.குண்டுவெடிப்பிற்கு தேவையான பணத்தை திரட்டியதும், குற்றவாளிகளை தலைமறைவாக தங்கச்செய்ய ஏற்பாடுகளை அஸிமானந்தா செய்துள்ளார்.
 
     2010 நவம்பர் மாதம் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அஸிமானந்தா, இவ்வழக்கில் முதன் முதலாக வாக்குமூலம் அளித்தஹிந்துத்துவா தீவிரவாதி ஆவார். விசாரணை வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ள போதும் குண்டுவெடிப்பிற்கு தேவையான வெடிப்பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்பதை என்.ஐ.ஏ இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக பழைய ராணுவ தளவாடங்கள் விற்பனைச் செய்யும் இடங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தூர் மற்றும் நாசிக்கில் ராணுவ முகாம்களுக்கு அருகே பழைய இரும்புப் பொருட்களை விற்கும் பகுதிகளில் இருந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெடிப்பொருட்களை வாங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
 
     கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தை மாலேகான் குண்டுவெடிப்புடன் தொடர்பு படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன. இவ்வழக்கில் புரோகித்தை என்.ஐ.ஏவால் இதுவரை விசாரணைச் செய்ய இயலவில்லை.விசாரணைச் செய்ய என்.ஐ.ஏவிடம் தன்னை ஒப்படைக்க கூடாது என்று புரோகித், அளித்த மனு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. புரோகித் கஸ்டடியில் கிடைத்தால் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. சுனில் ஜோஷி கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்தியதில் லோகேஷ் சர்மாவும், ராஜேந்தர் சவுத்ரியும்தான் குற்றவாளிகள் என்பதை என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.செய்தி:தேஜஸ்

0 comments:

Post a Comment