Friday, May 3, 2013

கர்நாடகா மாநிலத்தில் முஸ்லிம் லீக் 7 தொகுதிகளில் போட்டி!

                     3 May 2013
 
     பெங்களூர்:கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஐந்து மாவட்டங்களில் உள்ள ஏழு தொகுதிகளில் முஸ்லிம் லீக் போட்டியிடுவதாக அக் கட்சியின் அகில இந்திய செயலாளர் சிராஜ் சேட் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். குல்பர்கா மாவட்டத்தில் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிடுகிறது.
 
     குல்பர்கா வடக்கு, குல்பர்கா தெற்கு, பீஜாபூர் சிட்டி, வடக்கு பெல்காம், மத்திய ஹூப்ளி ஆகியவையாகும்.கர்நாடகாவில் முஸ்லிம் லீக் தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரசுடன் கூட்டணி இல்லை. குல்பர்கா முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மவ்லானா அப்துல் ஹமீத் மற்றும் முஹம்மது நூஹ் ஆகியோர் வேட்பாளர்களில் முக்கியமானவர்கள்.
 
     கூட்டணிக் குறித்து தேர்தலுக்கு பிறகு ஆலோசிப்போம் என்று சிராஜ் சேட் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment