Wednesday, May 15, 2013

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை:மாயா கோட்னானிக்கு எதிராக மேல்முறையீடுச் செய்யாத மோடி அரசு!

kodnani_bajrangi_14052013
அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய முஸ்லிம் இனப்படுகொலையின் போது நிகழ்ந்த நரோடாபாட்டிய கூட்டுப்படுகொலை வழக்கில் குற்றவாளியான முன்னாள் குஜராத் பெண் அமைச்சர் மாயா கோட்னானி, ஹிந்துத்துவா பயங்கரவாதி பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 10 பேருக்கு மரணத்தண்டனை வழங்க கோரி நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கான தீர்மானத்தை குஜராத் அரசு வாபஸ் பெற்றுள்ளது.
வலதுசாரி ஹிந்துத்துவா சக்திகளின் அழுத்தம் காரணமாகவே இம்முடிவை குஜராத் அரசு மேற்கொண்டுள்ளது. கோட்னானிக்கும் இதர குற்றவாளிகளுக்கும் மரணத்தண்டனை வழங்கவேண்டும் என்று இவ்வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு(எஸ்.ஐ.டி) பரிந்துரைச் செய்திருந்தது. இதனடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்ய நரேந்திரமோடி அரசு தீர்மானித்திருந்தது. அரசின் முன் தீர்மானத்தை நிறுத்திவைப்பதாகவும், அட்வகேட் ஜெனரலின் கருத்தை ஆராய்ந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிதின் பட்டேல் கூறியுள்ளார்.
96 பேர் பலியான நரோடாபாட்டியா வழக்கில் கோட்னானிக்கு சிறப்பு நீதிமன்றம் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருந்தது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வெளியானது.பஜ்ரங்தள் தலைவர்களில் ஒருவரான ஹிந்துத்துவா பயங்கரவாதி பாபு பஜ்ரங்கி ஆயுள் காலம் முழுவதும் சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதர எட்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவ்வழக்கில் மேல்முறையீடுச் செய்யும் தீர்மானத்தை வாபஸ் பெற்றதை சட்டத்துறை குஜராத் உயர்நீதிமன்றத்தில் அரசு ப்ளீடர் அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளது. சட்டத்துறை அனுப்பிய ஃபேக்ஸ் செய்தி தனக்கு கிடைத்துள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு சிறப்பு அரசு தரப்பு வழக்குரைஞர் பிரசாந்த் தேசாய் தெரிவித்துள்ளார்.
மேல்முறையீட்டு மனுக்களின் வரைவை திரும்ப அனுப்ப அரசு ப்ளீடர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார். எஸ்.ஐ.டியின் சிபாரிசின் அடிப்படையிலேயே இவ்வழக்கில் தேசாய் சிறப்பு அரசு தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார்.கவுரங் வியாஸ், அல்பேஷ் கோகிஆகியோர் உதவி அரசு தரப்பு வழக்குரைஞர்கள். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாயா கோட்னானியும் இதர குற்றவாளிகளும்உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்துள்ளனர்.இவர்களது மனுக்களை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
குஜராத் அரசின் நடவடிக்கை, அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கான ஆதாரமாகும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.மோடி முன்பு இதுபோலவே நடந்துகொண்டார், எதிர்காலத்திலும் அவரது குணத்தில் மாற்றம் ஏற்படாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மிம் அஃப்ஸல் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment